அர்ச்சுனா சந்தித்தவர்கள் உண்மையான மீனவர்கள் அல்ல! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 24, 2025 [GMT]

அர்ச்சுனா சந்தித்தவர்கள் உண்மையான மீனவர்கள் அல்ல!
[Sunday 2024-12-29 17:00]

இலங்கையிலிருந்து இந்திய தமிழகம் சென்றுள்ள இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகஹகீம் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்தியா இலங்கை மீனவர்களில் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


  

இது தொடர்பாக இன்று வடமராட்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம், இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இலங்கை இந்திய மீனவர்கள் பேசி 2016 ம் ஆண்டு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினாலே இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்று தெரிவுத்ததார்.

அத்துடன் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர் பிரதிநிதிகள் என்று சிலரை சந்தித்ததாகவும், அவர்கள் அனைவரும் உண்மையான மீனவர்கள் இல்லை என்றும் அவர்கள் கடந்த அரசு காலத்தில் ஆளும் கட்சியினரால் தமக்கு வேண்டியவர்களையும், தமது கட்சி உறுப்பினர்களையுமே அப் பதவிகளுக்கு நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com


ஹொரணை மாணவி முதலிடம்!
[Friday 2025-01-24 19:00]

2024 புலமைப்பரிசில் பரீட்சையில் ஹொரணை ரோயல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அகில இலங்கை ரீதியில் அதிக மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.குறித்த மாணவி 188 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.


பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்குத் தொடுத்தார் மஹிந்த!
[Friday 2025-01-24 19:00]

தனது பாதுகாப்புப் பிரிவை மீண்டும் வழங்க உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.


மாமியாரைச் சுட்டுக் கொன்றவர் வெட்டிக் கொலை!
[Friday 2025-01-24 19:00]

வவுனியா -சுந்தரபுரத்தில் நேற்று இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே கொலை செய்யப்பட்டுள்ளார்.


உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனு மீது விசாரணை!
[Friday 2025-01-24 19:00]

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (24) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.


யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று சாதனை!
[Friday 2025-01-24 19:00]

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். பரமேஸ்வரன் பிரசோதன் என்ற மாணவன் 186 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.யாழ். தொன் பொஸ்கோ மாணவன் 185 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.


அனுமதியின்றி தென்னை மரம் வெட்டத் தடை!
[Friday 2025-01-24 19:00]

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான தேங்காய் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தென்னை மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பிரதேச செயலாளரிடமும் மற்றும் தங்களிடமும் அனுமதி பெற வேண்டும் என தெங்கு அபிவிருத்தி சபை புதிய கொள்கையை அறிவித்துள்ளது.


ஐதேகவுடனான பேச்சுக்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு!
[Friday 2025-01-24 19:00]

எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து செயற்படுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.


மோட்டார் சைக்கிள் மோதி காயமடைந்த குடும்பஸ்தர் மரணம்!
[Friday 2025-01-24 19:00]

யாழ்ப்பாணத்தில் கடந்த 22 ஆம் திகதி வீதியை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார்.


மன்னார் காற்றாலை மின்திட்டம் ரத்துச் செய்யப்படவில்லை!
[Friday 2025-01-24 19:00]

மன்னார் மற்றும் பூநகரியில் அமையவுள்ள அதானியின் 484 MW காற்றாலை மின் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை என அதானி குழுமம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


ஜெனிவாவில் இருந்து அமெரிக்கா விலகினால் பின்னடைவு ஏற்படும்!
[Friday 2025-01-24 05:00]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில், இலங்கை தொடர்பான செயன்முறையை முன்னெடுத்துச் செல்வதில் பின்னடைவொன்று ஏற்படக்கூடும் என சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள கனேடிய உயர்மட்டப்பிரதிநிதி மேரி-லூயிஸ் ஹனன், இருப்பினும் இலங்கை விவகாரம் தொடர்பில் கனடா கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா