மீனவர் பிரச்சினை குறித்துஅரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சு நடத்தப்படாது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

மீனவர் பிரச்சினை குறித்துஅரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சு நடத்தப்படாது!
[Thursday 2025-01-02 05:00]

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் முடிவடைந்து 15 நாட்களுக்குள் இலங்கை கடற்பரப்பில் இந்திய படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவது குறித்து அரசியல் தலைவர்கள் மட்டத்தில் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


  

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பின்னர் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. அனைத்து பேச்சுக்களும் முடிந்துவிட்டன. இதன் பின்னர் எவருடனும் பேச்சுவார்த்தை இல்லை. கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுகள் தொடரும். தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டவிரோத இந்திய மீன்பிடி முறைகளால் கடனில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் அச்சம் எழுந்துள்ளது.

டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லியில் இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் கடற்றொழில் பிரச்சினையை முக்கியமானது என அடையாளப்படுத்தியிருந்தனர்.

மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கலந்துரையாடினோம் என இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடன் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது. எவ்வாறாயினும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதா அல்லது பெறுவதா என்பது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை.

ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தின் போது, இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழிலார் பிரச்சினை தொடர்பாக எடுக்கப்பட்ட கலந்துரையாடல்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து நாட்டுக்கு தெளிவான தகவல்கள் வழங்கப்படாமையால், வடபகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்குமென கவலையடைந்திருந்தனர்.

எனவே தமிழ்நாட்டு முதலமைச்சருடன் இணைந்து அமைதியான தீர்வை எட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வடக்கிலுள்ள தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் மீனவர் தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்திய மீனவர்கள் வட கடலில் மீன்பிடியில் ஈடுபடுவது ஆக்கிரமிப்பாகும். இந்திய மீனவர்களின் வருகையை தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடலைச் சுரண்டும் இழுவைமடி மீன்பிடி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதே வார்த்தையை இந்திய தூதுவரிடமும் கூட நான் தெரிவித்துள்ளேன். அது மாத்திரம் அல்ல, இந்த இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அவை இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அழிவுகரமான ஆக்கிரமிப்பினால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு எதிர்காலத்தில் பாரிய ஆபத்து ஏற்படும்.

  
   Bookmark and Share Seithy.com


சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பிரித்தாளும் தந்திரங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சிதைக்க முடியாது!
[Wednesday 2025-01-15 17:00]

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


வலதுசாரிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி!
[Wednesday 2025-01-15 17:00]

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இரணைமடுக் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் வந்து கொண்டிருக்கிறமையால் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


நாகர்கோவிலில் கரையொதுங்கிய மிதக்கும் வீடு!
[Wednesday 2025-01-15 17:00]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து இந்தமிதவை வீடு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமய மரபு அம்சங்கள் இருக்கின்றன. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.


பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா! Top News
[Wednesday 2025-01-15 17:00]

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.


கஜேந்திரகுமார் துள்ளக்கூடாது!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


அர்ச்சுனாவை பதவி நீக்க கோரும் மனு- பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி!
[Wednesday 2025-01-15 17:00]

தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், அனுமதி கோரினார்.


பழைய பல்லவியை பாடாமல் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்!
[Wednesday 2025-01-15 17:00]

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா