அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

அரசியல் தீர்வில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்!
[Friday 2025-01-10 05:00]

அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே, அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வுத் திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில், சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் வலியுறுத்தினார்.


  

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (9) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கான நலன்புரி திட்டங்கள் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டும். தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நலன்புரி கொடுப்பனவுகள் கிடைக்கப்பதில்லை. கிளிநொச்சி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. இதனால் நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதியுள்ளவர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்களாக உள்ள செல்வந்தர்களுக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஆகவே நலன்புரி திட்டம் மறுபரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு நிவாரண கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் கடந்த காலங்களில் முறையாக கிடைக்கப் பெறவில்லை.குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு 1 முதல் 3 இலட்சம் ரூபா வரையில் மீள்குடியேற்ற தொகை ஆரம்பத்தில் வழங்கப்பட்டது.இருப்பினும் ஒருசிலருக்கு இந்த நிதி இன்று வரை கிடைக்கப் பெறவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்தில் 38 ஆயிரம் தமிழர்கள் மீன் குடியமர்த்தப்பட்ட நிலையில் அவர்களில் 11790 பேருக்கு மீள்குடியேற்ற தொகை வழங்கப்பட்டது. மிகுதி 26209 பேருக்கு இன்றும் அந்த தொகை வழங்கப்படவில்லை. மட்டக்களப்பு - வாகரை, வவுனியா - வடக்கு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மடு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் மீள்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு இன்றுவரை இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை.

மீன் குடியமர்த்தப்பட்ட மக்கள் இந்த தொகையை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப படிவங்களை நிரப்பியே அதிகளவில் நிதியை செலவு செய்துள்ளார்கள். ஆகவே இந்த அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டும். கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக இந்த நிதியை பெற்றுக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமை கவனத்திற்குரியது. இந்த அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அனைத்து இன மக்களும் இந்த அரசாங்கத்தில் பங்குதாரர்களாக உள்ளனர். ஆகவே அரசியல் தீர்வு விவகாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். தீர்வு திட்டத்தில் அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை எடுத்தால் சிங்கள மக்களும் ஆதரவளிப்பார்கள் ஏனெனில் சிங்கள மக்களும் தற்போது நேர்மனப்பான்மையில் உள்ளார்கள்.

அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டாலும் ஒருசில துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடளிக்க சென்ற பெண் மிக கொடூரமான முறையில் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளார். இந்த நாட்டில் என்ன நடக்கிறது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு காணிகள் வேண்டும் என்று பாணந்துறை, கொழும்பு பகுதிகளில் வாழும் சிங்களவர்கள் குறிப்பிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன. லன்டனில் உள்ள ஒருவர் தன்னை தேசிய மக்கள் சக்தியின் ஊடக இணைப்பாளர் என்று குறிப்பிட்டுக் கொண்டு புத்தளம், நீர்கொழும்பு, சிலாபம், கொழும்பு, வத்தளை, வெள்ளவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் அப்பகுதிகளுக்கு குடியமர்த்தப்பட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி முதலில் இந்த நபருக்கு வரலாற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். புத்தளம், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர்.அதேபோல் கொழும்பு கறுவாத்தோட்டம், கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் தமிழர்கள் பூர்வீக குடிகளாகவே வாழ்ந்தனர். பிற்பட்ட காலத்தில் நீர்கொழும்பு பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் சிங்களவர்களாக மாற்றம் பெற்றார்கள்.இதுதான் உண்மை.

1970, 1983 மற்றும் 1985 ஆகிய காலப்பகுதிகளில் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த 22 ஆயிரம் தமிழர்கள் ஒரே இரவில் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அதேபோல் 1983ஆம் ஆண்டு மலையகத்தில் இருந்து 2000 எம் சகோதரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் இன்று சொந்த இடங்கள் ஏதும் இல்லாமல் பல்வேறு இடங்களில் வாழ்கிறார்கள்.அவர்களையும் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பிரித்தாளும் தந்திரங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சிதைக்க முடியாது!
[Wednesday 2025-01-15 17:00]

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


வலதுசாரிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி!
[Wednesday 2025-01-15 17:00]

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இரணைமடுக் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் வந்து கொண்டிருக்கிறமையால் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


நாகர்கோவிலில் கரையொதுங்கிய மிதக்கும் வீடு!
[Wednesday 2025-01-15 17:00]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து இந்தமிதவை வீடு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமய மரபு அம்சங்கள் இருக்கின்றன. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.


பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா! Top News
[Wednesday 2025-01-15 17:00]

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.


கஜேந்திரகுமார் துள்ளக்கூடாது!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


அர்ச்சுனாவை பதவி நீக்க கோரும் மனு- பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி!
[Wednesday 2025-01-15 17:00]

தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், அனுமதி கோரினார்.


பழைய பல்லவியை பாடாமல் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்!
[Wednesday 2025-01-15 17:00]

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா