ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்!
[Saturday 2025-01-11 05:00]

மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும். இவர்களை இங்கு தங்க வைத்தால் தேவையில்லாத பிரசச்சினைகள் ஏற்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.


  

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மியன்மார் நாட்டு ரோஹின்யா அகதிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை பாரியதொரு பிரச்சினையாக மாற்றமடைந்துள்ளது.எதிர்வரும் காலப்பகுதியில் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு 1இலட்சம் பேர் இலங்கைக்கு வரவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்கள் அகதிகள் அல்ல படகுக்கு பணம் செலுத்தி இலங்கைக்கு சட்டவிரோதமாக வருகைத் தந்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான நிறுவனம் இவ்விடயத்தில் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஏனெனில் அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கைகளில் இலங்கை கைச்சாத்திடவில்லை.

நிதி வழங்குகிறோம் மியன்மார் அகதிகளை பொறுப்பேற்றுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. இந்த அகதிகளை ஏன் இலங்கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே பிரச்சினை.

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றம் செய்தது என்று ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பல யோசனைகள் கொண்டு வரப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கைக்கு எதிராக சாட்சியம் திரட்டப்படுகிறது. இவ்வாறான பின்னணியில் சட்டவிரோத அகதிகளை பொறுப்பேற்குமாறு எவ்வாறு அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர்கள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தின் முன்பாக ' தமக்கு கௌரவமான வாழும் சூழல் வேண்டும்' என்று பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்களின் பின்னணியில் ஒரு சக்தி உள்ளது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் அவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர்கள் சிங்கள,தமிழ் மக்களுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். அனைத்து இன மக்களின் கலாச்சாரங்களுக்கும் மதிப்பளித்து சகோதரத்துவத்துடன் வாழ்கிறார்கள்.பிற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் இவ்வாறு இணக்கமாக செயற்படமாட்டார்கள்.

பிற நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் ஸரியா சட்டத்தை கடைப்பிடிக்கின்றார்கள். அவ்வாறான கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள் இலங்கையின் கலாச்சாரத்துக்கு அமைய செயற்படமாட்டார்கள். உலகில் 50 .இற்கும் அதிகமான முஸ்லிம் நாடுகள் உள்ளன அவற்றில் பெரும்பாலானவை செல்வந்த நாடுகள். இலங்கைக்கு வருகைத் தந்துள்ள மியன்மார் அகதிகளை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனம் ஏன் கவனம் செலுத்தவில்லை என்பது பிரச்சினைக்குரியது.

இலங்கை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலையடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு இன்றும் தீர்வு காணப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்துள்ளது. எமது நாட்டு மக்கள் பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்னர் ஏனைய தரப்பினர் குறித்து அவதானம் செலுத்தலாம்.

இலங்கை சமூக கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன நிலையில் மியன்மார் நாட்டு அகதிகளை இங்கு நிரந்தரமாக தங்க வைப்பது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.அகதிகள் என்ற பெயரில் பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். ஆகவே தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். நாட்டுக்கு வரும் அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவது அத்தியாவசியமானது.

மியன்மார் நாட்டு அகதிகளை இலங்கையில் தங்க வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபூர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம் ஆகியோர் பேசுகிறார்கள்.யுத்தத்தால் இடம்பெயர்ந்து 11 ஆயிரம் பேர் இன்றும் முகாம்களில் வாழ்கிறார்கள்.

இவர்கள் பற்றி பேசாமல் பிற நாட்டு அகதிகள் பற்றி பேசுவது அரசியல் செயற்படாகும். பணம் செலுத்தி படகுகளில் வருபவர்கள் அகதிகளல்ல,அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு இலங்கைக்கு வருகைத் தருபவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் போர்த்துக்கேயர்களும் அகதிகள் என்று குறிப்பிட்டுக் கொண்டு தான் இலங்கைக்கு வந்து இலங்கையை ஆக்கிரமித்தார்கள். மியன்மார் ரோஹிங்கியா அகதிகளை நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பிரித்தாளும் தந்திரங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சிதைக்க முடியாது!
[Wednesday 2025-01-15 17:00]

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


வலதுசாரிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி!
[Wednesday 2025-01-15 17:00]

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இரணைமடுக் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் வந்து கொண்டிருக்கிறமையால் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


நாகர்கோவிலில் கரையொதுங்கிய மிதக்கும் வீடு!
[Wednesday 2025-01-15 17:00]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து இந்தமிதவை வீடு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமய மரபு அம்சங்கள் இருக்கின்றன. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.


பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா! Top News
[Wednesday 2025-01-15 17:00]

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.


கஜேந்திரகுமார் துள்ளக்கூடாது!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


அர்ச்சுனாவை பதவி நீக்க கோரும் மனு- பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி!
[Wednesday 2025-01-15 17:00]

தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், அனுமதி கோரினார்.


பழைய பல்லவியை பாடாமல் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்!
[Wednesday 2025-01-15 17:00]

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா