ஐதேகவுடன் இணைந்து பயணிக்க சஜித் விருப்பம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

ஐதேகவுடன் இணைந்து பயணிக்க சஜித் விருப்பம்!
[Sunday 2025-01-12 06:00]

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து பயணிப்பதை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் விரும்புகின்றார். ஆனால் ஒரு கட்சியை கைவிட்டு இன்னொரு கட்சியின் இணைந்து கொள்வதற்கு பதிலாக ஒரு கூட்டணியாக எவ்வாறு ஒன்றிணைத்து பயணிப்பது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


  

ஐ.தே.க.வுடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள ஐக்கிய மக்கள் சக்திக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டை வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் ஒரே கொள்கைகளையுடைய இருவேறு கட்சிகளாகும். அவ்வாறிருகையில் ஒரு கட்சியை பிரிதொரு கட்சிக்குள் புகுத்த முடியாது.

அதேபோன்று ஒரு கட்சியைக் கைவிட்டு பிரிதொரு கட்சியுடன் இணையவும் முடியாது. எனவே இரு கட்சிகளையும் பாதுகாத்துக் கொண்டு ஒரு கூட்டணியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதாசவின் நிலைப்பாடாகவுள்ளது. மாறாக இவ்விரண்டு கட்சிகளதும் இணைவை அவர் எதிர்க்கவில்லை. இணைந்து செயற்படுதல் என்ற காரணி தொடர்பில் நாம் ஆழமாக ஆராய வேண்டும்.

அதற்கமைய இரு கட்சிகளும் ஒரே கொள்கையின் கீழ் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறை குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதே சிறந்ததாகும். இரு கட்சிகளினதும் பிரதிநிதிகள் இணைந்து இது குறித்து எதிர்காலத்தில் கலந்துரையாடல்களை முன்னெடுப்பர்.

இணைவு எனக் கூறும் போது ஒன்றை கைவிட்டு பிரிதொன்றுக்கு செல்வோம் என்பது பொருளல்ல. இணைந்து செயற்படுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டால், புரிதலோடு அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்க முடியும்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இதில் இணக்கப்பாடு இருக்கிறது. எனினும் அதனை எவ்வாறு செயற்படுத்துவது என அவர் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. நாட்டிலுள்ள சகல வலதுசாரி கொள்கைகளையும் கொண்ட தரப்புக்களை இணைத்துக் கொண்டு பயணிப்பதையே நாம் அனைவரும் விரும்புகின்றோம்.

அது தொடர்பில் எந்தவொரு தரப்பினருடனும் கலந்துரையாடுவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம். எமது ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களில் இது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. சகலரது கருத்துக்களுக்கும் முக்கியத்துவமளித்து முன்னோக்கி பயணிப்போம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


சீன- இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சீன மக்கள் மண்டபத்தில் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.


பிரித்தாளும் தந்திரங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சிதைக்க முடியாது!
[Wednesday 2025-01-15 17:00]

சமூக வலைதளங்களிலும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலைவரை நியமிப்பது தொடர்பில் திட்டமிட்டிருப்பதாக உறுதி கோராத செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் இது தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதி என்றும் தெரிவித்துள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் இந்த பிரித்தாளும் தந்திரோபாயங்களினால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒற்றுமையைச் சிதைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.


வலதுசாரிகளை ஒன்றிணைத்து வலுவான கூட்டணி!
[Wednesday 2025-01-15 17:00]

அனைத்து வலதுசாரிக் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி (பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் இன்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


இரணைமடுக் குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறப்பு!
[Wednesday 2025-01-15 17:00]

மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் வந்து கொண்டிருக்கிறமையால் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மேலதிக நீர் வெளியிடப்படுகின்றமையால் குளத்தின் கீழ்பகுதியில் வாழுகின்ற மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.


நாகர்கோவிலில் கரையொதுங்கிய மிதக்கும் வீடு!
[Wednesday 2025-01-15 17:00]

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியா நாடுகளில் இருந்து இந்தமிதவை வீடு வந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த வீட்டில் பௌத்த சமய மரபு அம்சங்கள் இருக்கின்றன. குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மக்கள் குவிந்துள்ளனர்.


பிரித்தானியா பாராளுமன்றத்தில் களைகட்டவிருக்கும் தமிழர் மரபுத் திங்கள் மற்றும் தைப்பொங்கல் விழா! Top News
[Wednesday 2025-01-15 17:00]

பிரித்தானிய தமிழர் பேரவை, பி.த.பே (BTF) வருடாந்த தமிழ் மரபுத் திங்கள் மற்றும் தைப் பொங்கல் விழாவை ஜனவரி 15ஆம் நாள் 2025 அன்று மாலை 6:30 மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்ற வளாகத்தில் நடத்த சிறப்பான ஒழுங்கமைப்புகளை மேற்கொண்டுள்ளது.


கஜேந்திரகுமார் துள்ளக்கூடாது!
[Wednesday 2025-01-15 17:00]

இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். எனவே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் இங்கு துள்ளக்கூடாது.” என்று எச்சரித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா.


அர்ச்சுனாவை பதவி நீக்க கோரும் மனு- பதில் மனுத் தாக்கல் செய்ய அனுமதி!
[Wednesday 2025-01-15 17:00]

தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், அனுமதி கோரினார்.


பழைய பல்லவியை பாடாமல் அரசியல் கைதிகளை விடுவியுங்கள்!
[Wednesday 2025-01-15 17:00]

“சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.


கூட்டுறவு தேர்தல்களில் என்பிபிக்கு பின்னடைவு!
[Wednesday 2025-01-15 04:00]

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆதரவுடைய சபை களனி கூட்டுறவுச் சங்கத்தை நிர்வகிப்பதற்குத் தெரிவுசெய்யப்பட்டதுடன், அவர்களின் 99 உறுப்பினர்கள் முகாமைத்துவ சபைக்குத் தெரிவு செய்யப்பட்டனர், அதேவேளை ஆளும் NPP ஆதரவுடைய குழு 32 பேரையே பெற முடிந்தது.


Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா