ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 15, 2025 [GMT]

ஊடக சுதந்திரத்தை பாதுகாக்குமாறு பொறுப்புக்கூறலை உறுதி செய்யுமாறு கடிதம்!
[Wednesday 2025-01-15 04:00]

25 சிவில் சமூக அமைப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எழுதிய கடிதத்தில், பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.


  

குறிப்பாக உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான விசாரணைகளை மீள ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய கடிதம், 2005 இல் ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் கொலை மற்றும் 2010 இல் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவங்கள் போன்றவற்றை முன்னிலைப்படுத்தியிருந்தது.

ஊடக சுதந்திரத்தை நசுக்கப் பயன்படுத்தப்பட்டதாக அவர்கள் கூறும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தின.

“நிகழ்நிலைப் பதிவுகளின் உள்ளடக்கத்தை தணிக்கை செய்ய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியுள்ள ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தை ரத்துசெய்வதன் மூலம் கருத்துச் சுதந்திரம் உட்பட மனித உரிமைகள் மீது சாதகமான விளைவை உருவாக்க வழி வகுக்க வேண்டும்.

அமைதியான நிகழ்நிலை பேச்சு சுதந்திரம் மற்றும் தனியுரிமைக்கான உரிமையில் தவறான மற்றும் நியாயமற்ற கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதற்குப் பதிலாக, துன்புறுத்தல் மற்றும் மோசடி போன்ற உண்மையான ஒன்லைன் ஆபத்துகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட புதிய இணையப் பாதுகாப்புச் சட்டத்துடன் சட்டம் மாற்றப்பட வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி திஸாநாயக்கவின் தலைமைத்துவமானது, இலங்கையின் நீண்டகால பிரச்சினைகளான தண்டனையிலிருந்து விடுபடுதல் மற்றும் ஊடக உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக அவ் அமைப்புகள் உறுதியளித்தன.

  
   Bookmark and Share Seithy.com


மழைக்கு மத்தியில் களை கட்டிய பட்டத் திருவிழா! Top News
[Wednesday 2025-01-15 04:00]

வல்வெட்டித்துறை சர்வதேச விநோத பட்டத் திருவிழா, தைப்பொங்கல் தினமான நேற்று மிகவும் கோலாகலமாக வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நடைபெற்றது.வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையம் மற்றும் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மழைக்கும் மத்தியில் விநோதமான பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.


மீனவர் பிரச்சினை குறித்து விரைவில் தமிழக முதல்வருடன் பேச்சு!
[Wednesday 2025-01-15 04:00]

இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.


வடகொரியாவில் இல்லாத கட்டுப்பாடுகள் இலங்கையில்!
[Wednesday 2025-01-15 04:00]

ஜனாதிபதி செயலகத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் சுற்று நிருபம் மூலம் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு இந்த நாட்டில் இருக்கும் வெளிநாட்டு தூதுவர்களுடன் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் வரையறை விதிக்கப்பட்டிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.


கல்ஓயா உடைப்பெடுக்கும் ஆபத்து!
[Wednesday 2025-01-15 04:00]

கல்ஓயா ஆற்றின் கரை உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, அம்பாறையின் சேனாநாயக்கபுர மற்றும் சாமபுர பகுதிகளில் உள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.


காற்றுச் சுழற்சிகளால் வரப் போகும் ஆபத்து!
[Wednesday 2025-01-15 04:00]

வங்காள விரிகுடாவில் கடந்த 07 ஆம் திகதி அன்று உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது மாத்தறைக்கு தென் மேற்கு திசையில் 380 கி.மீ. தூரத்தில் காணப்படுகின்றது. இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் வேறுபட்ட அளவுகளிலான மழை தொடரும் என யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


13இல் கை வைக்க விரும்பவில்லை!
[Wednesday 2025-01-15 04:00]

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்த உரிமையாக கருதுகின்ற நிலையில் அதில் கைவைப்பதற்கு நாங்கள் முனையவில்லை என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


18ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம்!
[Tuesday 2025-01-14 18:00]

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறவுள்ளது. திருகோணமலையில் உள்ள சிவில் அமைப்பொன்றின் கேட்போர் கூடத்தில் குறித்த தினமன்று காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.


அனுரவுக்கு செங்கம்பள வரவேற்பு!- நாளை சீன ஜனாதிபதியை சந்திக்கிறார்.
[Tuesday 2025-01-14 18:00]

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை, புதன்கிழமை சந்திக்கிறார்


தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம்!
[Tuesday 2025-01-14 18:00]

யாழ்ப்பாணம், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், அதனைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை (12) ஆரம்பித்த போராட்டம் திங்கட்கிழமை (13) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.


மக்களை பட்டினி போட்டுக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது!
[Tuesday 2025-01-14 18:00]

நாட்டு மக்களை பட்டினியில் வைத்துக் கொண்டு நாட்டை தூய்மைப்படுத்த முடியாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 20 கிலோ கிராம் பச்சை அரிசியை நாட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியதால் தான் பச்சையரிசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்கம் குறிப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது என சர்வஜன சக்தியின் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா