யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 23, 2025 [GMT]

யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்!
[Thursday 2025-01-23 16:00]

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை பிற்பகல் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.


  

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் திடீர் பெயர் மாற்றம் தொடர்பாகத் தமது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் கடிதத்தை அவர் இன்று கையளித்தார். அதில்

"யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு அருகாமையில் திறந்த வெளி அரங்கு அமைந்திருந்த - யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உரித்தான காணியில் அதற்குப் பதிலாக இந்திய மத்திய அரசின் நன்கொடையாக நிர்மாணிக்கப்பட்ட 'யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்' 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கையின் ஜனாதிபதி,ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கே வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மாநகர சபையின் நிதி வசதியீனத்தைக் காரணம் காட்டி அவ்வாறு செய்யப்படாமல் சில முக்கிய அரசியல் காரணங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. இந்தக் கட்டடம் அதன் முழுமையான அம்சங்கள் ஆராயப்படாமல் நிர்மாணிக்கப்பட்டமையே இந்த நிலை உருவாக காரணமாகியது என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறிருக்கையில் கடந்த 18.01.2025 ஆம் திகதி சனிக்கிழமை இதன் பெயர் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரதி கலாசார அமைச்சரும் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் வேறு சிலரும் கலந்துகொண்ட சந்திப்பில் பெயர் மாற்றத்துடனான பெயர்ப்பலகை திறந்து வைக்கப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.

இந்த நடவடிக்கை பற்றிய அறிதல் எதுவும் இந்த மண்ணின் அரசியல் தலைவர்களுக்கோ பிரதிநிதிகளுக்கோ சிறிதளவேனும் தெரிந்திருக்கவில்லை என்பது எமக்கு மிகவும் ஆச்சரியத்தையும் மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை மிகுந்த கவலையுடன் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

இந்த நடவடிக்கை பற்றிய ஆழமான அதிருப்தி உள்ளது என்பதை மட்டும் குறிப்பிட்டு, இது இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையேயான ஓர் உணர்வுபூர்வமான விடயம் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதனால் விவரமாக அதிருப்தியைப் பதிவு செய்வதைத் தவிர்க்கின்றோம்.

தெய்வப் புலவர் ஐயன் திருவள்ளுவருக்கு நாமாகவே இந்த மண்ணில் பல இடங்களில் உருவச்சிலைகள் அமைத்திருக்கின்றோம். அதுமட்டுமல்ல ஔவைக்கும், மாகாத்மா காந்திக்கும், பாரதிக்கும் நாமாக இங்கு சிலை எடுத்தவர்கள் நாங்கள். தெய்வப் புலவர் திருவள்ளுவருக்கு நாம் எதிரானவர்கள் அல்லர்.

இப்படியிருக்கையில் இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்து விடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம்' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மேலும் இந்தப் புதிய பெயர் மாற்றத்துக்கான அறிவித்தலில் கூட தமிழ்மொழி மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளமையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலங்கை அரசின் அரசமைப்பின் 16 ஆவது இலக்க திருத்தத்தின்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகும். சிங்களம் அடுத்த நிர்வாக மொழியாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கும் என்பது அரசமைப்பின் ஏற்பாடாக இருக்கையில் சிங்கள மொழியில் முதலாவதாகவும், ஆங்கில மொழியில் இரண்டாவதாகவும், தமிழ் மொழியில் மூன்றாவதாகவும் பெயர்ப்பலகை எழுதப்பட்டிருப்பது இந்த ஏற்பாடுகளை மீறும் செயலாகும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடிய பின்பே நல்லுறவைப் பாதிப்பின்றி பேணும் பொருட்டு இந்த மீளாய்வுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்படுகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றாம். தங்களது துரிதமான செயற்பாட்டுக்கு நன்றியுடையவராவோம்." - என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையார் ச.கிறிஸ்நேந்திரன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

  
   Bookmark and Share Seithy.com


அனுர யாப்பாவுக்கும் மனைவிக்கும் பிணை!
[Thursday 2025-01-23 16:00]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, அவரது மனைவி மற்றும் பலர் உட்பட நான்கு பேரை தலா 2.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைப் பத்திரங்களில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.


ஒன்ராறியோ அரசாங்கம் 200 டொலர் வரித்தள்ளுபடி வழங்குகிறது Top News
[Thursday 2025-01-23 16:00]

கார்பன் வரி மற்றும் அதிக வட்டி விகிதங்களின் தாக்கம் உட்பட, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் குடும்பங்களுக்கு ஆதரவாக ஒன்ராறியோ அரசாங்கம் $200 தள்ளுபடி காசோலைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. கனடா குழந்தை நலன் (CCB)க்கு தகுதியான குடும்பங்களில் 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் கூடுதலாக $200 வழங்கப்படும்.


மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர் மாய்த்த கிளிநொச்சி பெண்! உண்மைகள் வெளிவர வேண்டும்.
[Thursday 2025-01-23 16:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் உயிர்மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் தமிழ்ப் பெண்ணின் மரணம் தொடர்பான உண்மைகள் உடனடியாக வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.


அர்ச்சுனா, கௌசல்யா உள்ளிட்ட 9 வேட்பாளர்கள் குறித்து விசாரணை!
[Thursday 2025-01-23 16:00]

தேர்தல் கணக்கறிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உட்பட 09 பேர் மீதான விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


ஜேவிபி அலுவலகத்தில் அமெரிக்க தூதுவர்!- டில்வின் சில்வாவுடன் சந்திப்பு.
[Thursday 2025-01-23 16:00]

மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் க்கும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இடையில் நேற்று முற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றது.


பாடசாலை மாணவிகள் மத்தியில் அதிகரிக்கும் உளவியல் பாதிப்பு!
[Thursday 2025-01-23 16:00]

பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார்.


100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்!
[Thursday 2025-01-23 16:00]

தேங்காய் சார்ந்த பொருட்கள் உட்பத்திக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் தேங்காய்களை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் ஜயந்த சமரகோன் தெரிவித்தார்.


மாணவி துஷ்பிரயோகம்- ஆசிரியர் கைது!
[Thursday 2025-01-23 16:00]

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயதான மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.


முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கைது!
[Thursday 2025-01-23 05:00]

முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2014 ஆம் ஆண்டில் 6.1 மில்லியன் ரூபாயை முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்திப்பில் பங்கேற்காது தமிழரசு- கஜேந்திரகுமாருக்கு அறிவித்தார் சிறிதரன்!
[Thursday 2025-01-23 05:00]

தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பில் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சி அறிவித்ததை அடுத்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்தித்து தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராயவுள்ளன.


Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா