ஒரே ஒரு எம்.பிக்கு வாகனம் வழங்கப்பட்டது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 24, 2025 [GMT]

ஒரே ஒரு எம்.பிக்கு வாகனம் வழங்கப்பட்டது!
[Friday 2025-01-24 05:00]

10 ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை என்றும், ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.


  

இதேவேளை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு வாகனங்கள் அவசியமாக உள்ளது என்றும், செலவுகளை குறைத்து வாகனங்களை பயன்படுத்துவதில் எந்த பிரச்சினைகளும் தமக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இதனை கூறினார்.

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்றும், அவை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள என்றும் சாமர சம்பத் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரதமர் கூறுகையில்,

10ஆவது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்கள் வழங்கப்படவில்லை. ஆனால் பார்வையற்ற எம்.பியான சுகத் வசந்த டி சில்வாவுக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகம் ஊடாக வாகனமொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் பார்வையற்ற பாராளுமற்ற உறுப்பினர் என்ற காரணத்தினால் அவருக்கு உதவும் வகையில் இது வழங்கப்பட்டுள்ளது என்றார்.

இதன்போது மேலதிக கேள்விகளை எழுப்பி உரையாற்றிய சாமர சம்பத் எம்.பி கூறுகையில், பிரதமர் இவ்வாறு கூறினாலும் மாதிவெலவில் வாகனமொன்று உள்ளது. நீங்கள் பிரதமராக கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டாலும் ரேஞ்ச் ரோவர் வாகனமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் உளளது. வீ8 வாகனத்தை விடவும் ரேஞ்ச் ரோவருக்கு செலவு அதிகமாகும். அவரின் பெயரை வேண்டுமென்றால் கூறுகின்றேன். அவர் வசந்த சமரசிங்கவே. அத்துடன் எனது மேலதிக கேள்வியாக ஒரு விடயத்தை கேட்கின்றேன். பிஎச் 1208 என்ற இலக்கமுடைய வாகனமொன்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உங்களின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் இருக்கின்றது. அவரின் பெயரை கூறப் போவதில்லை.

பண்டாரவளை பூனாகலை தோட்டத்தில் புல் கட்டுகளை ஏற்றிச் செல்கின்றது. இது தொடர்பான விடயத்தை சபையில் சமர்ப்பிக்கின்றேன். பசறை ஒருங்கிணைப்பு குழுவுக்கு குறித்த வாகனம் வந்துள்ளது. லுனுகல ஒருங்கிணைப்பு குழுவுக்கும் மற்றும் மாவட்ட கூட்டத்திற்கும் வந்துள்ளது. பதுளை மாவட்டத்திலேயே குறித்த எம்.பியினால் அந்த வாகனம் பயன்படுத்தப்படுகின்றது. இதில் புல்லு கட்டுகளை ஏற்றுகின்றனர். இது அரசாங்கத்திற்கு சரியில்லை. இப்படி இருக்கையில் நீங்கள் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை என்று தெரிவிக்கின்றீர்கள்.

இதன்போது பதிலளித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, அதனை எனக்கு அனுப்புங்கள் தேடிப்பார்கின்றேன். உங்களுக்கு அல்ல எமது கட்சியில் ஒழுக்கத்தை கொண்டு செல்ல வேண்டும். அதனால் அதனை தாருங்கள் தேடிப்பார்க்கின்றேன் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


மன்னார் துப்பாக்கிச் சூட்டுக்கு பாதுகாப்புத் தரப்பின் அசமந்தமே காரணம்!
[Friday 2025-01-24 05:00]

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே இந்த நிலைமைக்கு காரணம். நானும் இலக்காக்கப்படலாம். பழிவாங்கு படலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதன் மூலம் தூய்மையான இலக்கை நோக்கிய இலட்சியத்தை அடைய முடியும் என ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


மருதானை பொலிஸ் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்!
[Friday 2025-01-24 05:00]

மருதானை பொலிஸ் நிலையத்தில் வவுனியா பெண் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. யான சிறீதரன் தெரிவித்தார்.எனினும் இது தற்கொலை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்தார்.


முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் இருந்தால் வெளியேற வேண்டும்!
[Friday 2025-01-24 05:00]

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வெட்கம் என்பதொன்று இருக்குமானால் அரச இல்லங்களிலிருந்து வெளியேற வேண்டும். ஆனால் இவர்களுக்கும் வெட்கமில்லை, இவர்களின் பிள்ளைகளுக்கும் வெட்கமில்லை எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் பௌத்தாலோக்க மாவத்தை வீடு 3128 மில்லியன் ரூபாயட பெறுமதியானது. 46 இலட்சம் ரூபா மாத வாடகை கொண்டதெனவும் கூறினார்.


இனி அனுர அரசுக்கு ஆதரவு இல்லை!
[Friday 2025-01-24 05:00]

அரசாங்கத்திற்கு தான் வழங்கும் ஆதரவை முற்றாக விலக்கிக்கொள்வதாக தெரிவித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன், இனி தான் உண்மையான எதிர்க்கட்சியினராக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.


கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் அவசியமான உறவு!
[Friday 2025-01-24 05:00]

கனடாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையிலான சக்தி மற்றும் சுரங்கத் தொழிற்துறை உறவு வட அமெரிக்காவின் சக்திப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் புவிசார் அரசியல் மீள்திறம் ஆகியவற்றுக்கு இன்றியமையாதது.


கிளிநொச்சியில் வெள்ளம்!
[Friday 2025-01-24 05:00]

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது.


சொகுசு வாகனங்களை பயன்படுத்தும் என்பிபி உறுப்பினர்கள்!
[Friday 2025-01-24 05:00]

சொகுசு வாகனங்கள் அனுமதிக்கப்படாதென்ற அரசாங்கத்தின் உறுதிமொழிகளுக்கு மத்தியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சொகுசு வாகனங்களை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


பயமுறுத்துவதற்காக மக்கள் ஆணை வழங்கவில்லை!
[Friday 2025-01-24 05:00]

10 வருடங்களுக்கு பிறகு என்னை சி.ஐ.டிக்கு அழைத்து செல்லும் அளவுக்கு தேவை இருக்கவில்லை. இது அரசியல் பழிவாங்களில் ஒரு பகுதியாகும். அச்சுறுத்தி ஆட்சி செய்வதற்காக மக்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆணை வழங்கவில்லை.அரசாங்கம் நியாயமான முறையில் நடந்துகொள்ள வேண்டும்.அதிகாரத்தை கவனமாக கையாள வேண்டும் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார்.


அரிசி ஆலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்!- ஜனாதிபதி அனுர எச்சரிக்கை.
[Thursday 2025-01-23 16:00]

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் என்ற பெயரை அகற்றியது எம்மை அவமதித்தமைக்குச் சமம்!
[Thursday 2025-01-23 16:00]

இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான 'யாழ்ப்பாணம்' என்ற பெயரை யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலைய விடயத்தில் அகற்றியமை எம்மை அவமதித்தமைக்குச் சமமாகும். இது இந்தியாவுக்கும் எமக்கும் இடையேயான நல்லுறவில் ஆழமான குழியாக அமைந்துவிடக்கூடாது என நாம் திடமாக நம்புகின்றோம். 'யாழ்ப்பாணம' என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம் இனத்தின் அடையாளம் ஆகும். எனவே, இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்று, யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் புதன்கிழமை பிற்பகல் நேரில் சென்று கையளித்த கடிதத்தில் தெரிவித்திருக்கின்றார்.


Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா