பாதாள குழுக்களை போல் அரசாங்கம் சண்டித்தனம் செய்யக் கூடாது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 27, 2025 [GMT]

பாதாள குழுக்களை போல் அரசாங்கம் சண்டித்தனம் செய்யக் கூடாது!
[Saturday 2025-01-25 07:00]

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.


  

கொழும்பில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி என்ன சொல்கிறார் என்று அமைச்சரவை உறுப்பினர்களுக்கு தெரியாது, அமைச்சர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது ஜனாதிபதிக்கு தெரியாது. மக்கள் மத்தியில் பிரபல்யமடைவதாக குறிப்பிட்டுக் கொண்டு மனம் போனபோக்கில் பேசிக் கொள்கிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டுக்கு அளப்பறிய சேவையாற்றியுள்ளார்.அதேபோல் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப் பெறுவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஒன்று வீடு வழங்கப்படும் அல்லது மாதம் 30 ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகிறார். ஜனாதிபதி தனது பதவிக்கு பொருத்தமான வகையில் பேச வேண்டும்.

ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பொருத்தமான வீடு வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வீடு ஜனாதிபதி பதவி வகித்த ஒருவர் வசிக்க கூடிய வகையில் இருத்தல் வேண்டும் என்பதை அரசாங்கம் தெரிந்துக் கொள்ள வேண்டும். சட்டத்தை பற்றி போதிய அறிவு இல்லாவிடின் சட்ட நிபுணர்களிடம் அரசாங்கம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் விவகாரத்தில் அரசாங்கம் பாதாள குழுக்களை போல் சண்டித்தனமாக செயற்பட கூடாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுகிறது என்று புலனாய்வு பிரிவு முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் மற்றும் சலுகை தொடர்பில் ஆராய்ந்த குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்த போதும் அதனை கருத்திற் கொள்ளாது அவருக்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டு, பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அரசாங்கமும், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் சலுகைகள் தொடர்பில் ஆராய்ந்த குழுவும் பொறுப்புக் கூற வேண்டும். இந்த குழுவின் முழுமையான அறிக்கையை தகவலறியும் உரிமை சட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளோம். அதனைத் தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


பேராசிரியர் ரகுராமுக்கு ஆதரவாக சாத்வீகப் போராட்டத்தில் குதிக்கிறது கலைப்பீட மாணவர் ஒன்றியம்!
[Monday 2025-01-27 05:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


அரசு வழங்கிய வாய்ப்பை நிராகரித்தார் போத்தல ஜயந்த!
[Monday 2025-01-27 05:00]

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச்சென்ற சிங்கள முன்னணி ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த, அரச செய்தி நிறுவன தலைமையை ஏற்க மறுத்துள்ளார்.


யோஷிதவுக்கு ஏன் கைவிலங்கு போடவில்லை?
[Monday 2025-01-27 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவை கைது செய்யும் போது ஏன் கைவிலங்கு போடவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.


கொழும்பு - காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு தபால் ரயில்!
[Monday 2025-01-27 05:00]

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இரவு விருந்தில் கோட்டாவும் நளிந்தவும்!
[Monday 2025-01-27 05:00]

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்்தை முன்னிட்டு, இந்தியா இல்லத்தில் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து அலவலாவிக்கொண்டிருந்தனர்.


சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை!
[Monday 2025-01-27 05:00]

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக் கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டது!
[Monday 2025-01-27 05:00]

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி நேற்று மாலை 4 மணியளவில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான ரயில் தடம் புரண்ட முதல் சம்பவம் இதுவாகும்.


இரணைதீவு அருகே கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-01-27 05:00]

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
[Monday 2025-01-27 05:00]

அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


நல்லாட்சி கால இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா