பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 27, 2025 [GMT]

பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
[Saturday 2025-01-25 07:00]

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன் வைத்து மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழக முன்றலில் நேற்று முதல் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


  

கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளை, மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய தலைவர் மண்டப கதவினை திறந்து மாணவர்களை வெளியேற்றி இருந்தார்.

கதவினை பூட்டை உடைத்தே திறந்ததாக குற்றம் சாட்டி அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது. அதுபோன்று பல்கலைக்கழத்தினுள் இருந்த ஐந்து கல்லாசனங்களை உடைத்து எறிந்தமை தொடர்பில் கலைப்பீட பீடாதிபதியிடம் கேள்வி எழுப்பிய மாணவர்கள் ஐவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, புதுமுக மாணவர்கள் தமது வட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழகத்தில் தாம் விரும்பும் பாடங்களை கற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்றும், கோரிக்கையை ஏற்க தவறினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர்களின் குழுவில் கலந்துரையாடியுள்ளனர்.

அவ்வாறு கலந்துரையாடிய மாணவர்கள் இருவருக்கும் வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுமுக மாணவர்களுக்கான முதல் நாள் விரிவுரைகள் கடந்த திங்கட்கிழமையே ஆரம்பமாகியது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் கற்றல் நடவடிக்கைக்கு வர முதலே அவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முதல் நாள் விரிவுரை என்பது மாணவர்களுக்கு முக்கியமான நாளாகும். அந்த நாளில் வகுப்பு தடை விதிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தினுள் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. மாணவர்களை கற்றல் மண்டபத்தினுள் வைத்து பூட்டிய விரிவுரையாளருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கல்லாசனங்களை அடித்து உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. பல்கலை கழகத்தில் விரும்பிய பாடத்தை தெரிவு செய்வதற்கு மாணவர்களுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க வில்லை அவற்றை கேள்வி கேட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதித்துள்ளார்கள்.

மாணவர்களின் நலன் சார்ந்து பேச வேண்டிய பல்கலைக்கழக மூத்தவை சபையோ, பேரவையோ கடந்த 08 மாதங்களுக்கு மேலாக தொடரும் இந்த மாணவர்களின் பிரச்சனை தொடர்பில் எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், மூத்தவை சபை மற்றும் பேரவை ஆகையவை முடங்கியுள்ளமை வேதனையை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com


பேராசிரியர் ரகுராமுக்கு ஆதரவாக சாத்வீகப் போராட்டத்தில் குதிக்கிறது கலைப்பீட மாணவர் ஒன்றியம்!
[Monday 2025-01-27 05:00]

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் எந்த அடிப்படையில் அந்த பதவியில் இருந்து விலகினாரோ அந்த விடயத்துக்காக உயர்ந்த கௌரவத்தோடு என்ன விடயத்திற்காக பாடுபட்டாரோ அந்த விடயத்திற்கான வெற்றியோடு மீளவும் கலைப்பீட பீடாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.


அரசு வழங்கிய வாய்ப்பை நிராகரித்தார் போத்தல ஜயந்த!
[Monday 2025-01-27 05:00]

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தாக்குதலுக்கு உள்ளாகிய பின்னர், அமெரிக்காவுக்கு தப்பிச்சென்ற சிங்கள முன்னணி ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த, அரச செய்தி நிறுவன தலைமையை ஏற்க மறுத்துள்ளார்.


யோஷிதவுக்கு ஏன் கைவிலங்கு போடவில்லை?
[Monday 2025-01-27 05:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்சவை கைது செய்யும் போது ஏன் கைவிலங்கு போடவில்லை என்ற விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில், கைது செய்யப்படும் ஒவ்வொரு சந்தேக நபருக்கும் கைவிலங்கு போட வேண்டிய அவசியமில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.


கொழும்பு - காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு தபால் ரயில்!
[Monday 2025-01-27 05:00]

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


இரவு விருந்தில் கோட்டாவும் நளிந்தவும்!
[Monday 2025-01-27 05:00]

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினத்்தை முன்னிட்டு, இந்தியா இல்லத்தில் இரவு விருந்துபசாரம் இடம்பெற்றது. அதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் அருகருகே அமர்ந்து அலவலாவிக்கொண்டிருந்தனர்.


சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை!
[Monday 2025-01-27 05:00]

போலியாக கைது செய்து, விளக்கமறியலில் வைத்தால் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம். ஆகவே செய்வதை முறையாக செய்யுங்கள் என்று அரசாங்கத்திடமும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடமும் குறிப்பிட்டுக் கொள்கிறோம். சட்டத்தின் பிரகாரம் கைதுகள் இடம்பெறவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.


யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ரயில் தடம்புரண்டது!
[Monday 2025-01-27 05:00]

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த கடுகதி ரயில் ஓமந்தை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இந்த ரயிலின் ஒரு பெட்டி நேற்று மாலை 4 மணியளவில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. சரிசெய்யும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மஹவவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதை புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் பதிவான ரயில் தடம் புரண்ட முதல் சம்பவம் இதுவாகும்.


இரணைதீவு அருகே கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
[Monday 2025-01-27 05:00]

கிளிநொச்சி இரணைதீவுக்கு அன்மித்த கடற்பகுதியில் மூன்று படகுகளுடன் கைது செய்யப்பட்ட 33 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 05ஆம் திகதி வரை விளக்கமறையில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை!
[Monday 2025-01-27 05:00]

அரச சேவையில் தற்போதுள்ள சுமார் 30,000 வெற்றிடங்களை நிரப்புவதற்கும், எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான நிதியை ஒதுக்குவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.


நல்லாட்சி கால இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை கைவிட்டுள்ளோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா