ஓகஸ்ட் மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 26, 2025 [GMT]

ஓகஸ்ட் மாதம் மாகாணசபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை!
[Saturday 2025-01-25 17:00]

மாகாணசபைத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்குரிய சட்ட திருத்தங்கள் விரைவாக மேற்கொள்ளப்படும் என மாகாணசபைகள், உள்ளுராட்சி மற்றும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.


  

2016ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாணசபை சட்டத்தில் புதிய கலப்பு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை நடைமுறைப்படுத்துவதற்காக எல்லை நிர்ணயம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், எனினும் அது பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய தற்போதைய சூழ்நிலையில், முந்தைய முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய முறையின்படி, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் 1988 மாகாணசபை தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமையவே நடத்த வேண்டும். அதன்படி, இந்த விவகாரம் தொடர்பான ஒரு குறிப்பாணை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் மாகாணசபைத் தேர்தலை ஓகஸ்ட் மாதத்தில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சடலங்களாக மீட்பு!
[Sunday 2025-01-26 17:00]

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் - புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர். சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52 வயதுகளை உடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.


சுமந்திரனுக்கு மட்டும் 2 மெய்ப்பாதுகாவலர்கள் ஏன்?
[Sunday 2025-01-26 17:00]

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


வயலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு!
[Sunday 2025-01-26 17:00]

கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற நிலையில் நேற்றையதினம்(24) காணாமல் போன குடும்பஸ்தர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இந்திய குடியரசு தினம்!
[Sunday 2025-01-26 17:00]

இந்தியாவின் 76 ஆவது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன.


அமைச்சர் சமந்தவிடம் 100 மில்லியன் ரூபா கேட்டு நோட்டீஸ்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவிடமிருந்து ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.


அமெரிக்க உதவிகள் நிறுத்தப்பட்டதால் இலங்கைக்கும் நெருக்கடி!
[Sunday 2025-01-26 17:00]

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்தி வைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளதால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


மகிந்தவின் மகன் என்பதற்கான யோஷிதவை கைது செய்யவில்லை!
[Sunday 2025-01-26 17:00]

யோஷித்த ராஜபக்ஷவை, அவர் மகிந்தவின் மகன் என்பதற்காக கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.


அடுத்த மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார் அனுர!
[Sunday 2025-01-26 17:00]

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார்.


சீனா செல்கிறார் ரில்வின் சில்வா!
[Sunday 2025-01-26 17:00]

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான உத்தேச இருதரப்பு அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.


கொழும்பு வந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றன!
[Sunday 2025-01-26 06:00]

பரிசோதனைகளில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் துறைமுகத்தில் 2724 கொள்கலன்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை துரிதமாக விடுவிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த 24 கப்பல்கள் திரும்பிச் சென்றுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சீவலி அருங்கொட தெரிவித்தார்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா