அமைச்சர் சமந்தவிடம் 100 மில்லியன் ரூபா கேட்டு நோட்டீஸ்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 27, 2025 [GMT]

அமைச்சர் சமந்தவிடம் 100 மில்லியன் ரூபா கேட்டு நோட்டீஸ்!
[Sunday 2025-01-26 17:00]

முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் குறித்து அவதூறான, தவறாக வழிநடத்தும் மற்றும் இழிவான கருத்துக்களை வெளியிட்டதாக , பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்னவிடமிருந்து ரூ.100 மில்லியன் நஷ்டஈடு கோரப்பட்டுள்ளது.


  

ஜனவரி 9, 2024 அன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, “அனசிகலவுக்கு (தாவரப் பெயர்) உண்மையில் என்ன நடக்கிறது?” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் இருந்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிகழ்வின் போது, அமைச்சர் வித்யாரத்ன, சட்டவிரோத அரச காணி அபகரிப்பு மற்றும் ஏனைய ஊழல் நடவடிக்கைகளுடன் தென்னகோனை தொடர்புபடுத்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. தென்னகோனை நேரடியாகப் பெயரிட்டதாகக் கூறப்படும் இந்த கருத்துகள், அவரது நற்பெயருக்கு "பிழையான, அவதூறு மற்றும் சேதம் விளைவிக்கும்" என நஷ்டஈடு கோரும் கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

தென்னகோனின் சட்டப் பிரதிநிதியான சட்டத்தரணி எச்.டி.சி.டி. ஹத்துருசிங்கவினால் அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதம், அமைச்சரின் கருத்துக்கள் தென்னகோன் மீது எதிர்மறையான கருத்தை உருவாக்கி, அவரது நற்பெயருக்கும், பண்புக்கும், கண்ணியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் அமைந்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது. முன்னாள் அரச அதிகாரியும், தற்போதைய பிரபல பொது விமர்சகருமான தென்னகோன், வித்யாரத்னவின் அறிக்கைகளால் தனது நற்பெயர் மற்றும் தொழில் நிலைப்பாட்டிற்கு கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஏற்படுத்திய சேதங்களுக்காக அமைச்சர் வித்யாரத்ன தனிப்பட்ட முறையில் 14 நாட்களுக்குள் ரூ.100 மில்லியன் நஷ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும் அதற்கு இணங்கத் தவறினால், வட்டி மற்றும் சட்டச் செலவுகளுடன் தொகையை மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

  
   Bookmark and Share Seithy.com


தனியார் அபகரித்துள்ள பாடசாலைக் காணி- மீட்டுத் தரக் கோரி போராட்டம்!
[Monday 2025-01-27 16:00]

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பூதன்வயல் கிராமத்தில் தண்ணிமுறிப்பு பகுதியில் பாடசாலை இயங்கிய காணியை தனியார் ஒருவர் அபகரித்து வைத்திருப்பதால் அதனை மீட்டுத்தரக்கோரி இன்று காலை முதல் பாடசாலை சமூகத்தினர், ஊர் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


அரசாங்கத்தை விமர்சிப்பதால் குடும்பத்தினரை இலக்கு வைக்கிறார்கள்!
[Monday 2025-01-27 16:00]

நானோ அல்லது எனது சகோதரர் யோசித ராஜபக்சவோ தவறிழைத்துள்ளோம் என்பதை அரசாங்கம் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச சவால்விடுத்துள்ளார்.


உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் - 2 நாட்களில் தீர்ப்பு!
[Monday 2025-01-27 16:00]

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தில் சில சரத்துக்களை அரசியலமைப்புக்கு முரணானவை என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை முடித்த உயர் நீதிமன்றம், அந்த முடிவை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் சபாநாயகருக்கு அனுப்புவதாக இன்று அறிவித்துள்ளது.


தடுத்து வைக்க போதிய ஆதாரங்கள் இல்லை - யோஷிதவுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்!
[Monday 2025-01-27 16:00]

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


மகிந்தவுக்கு வேறு வீடு கொடுப்போம்!
[Monday 2025-01-27 16:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குடியிருக்க வீடு இல்லையென்றால் அரசாங்கம் அதற்குப் பொருத்தமான வீட்டை வழங்கும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


நாயை தூக்கிலிட்டு கொன்ற பெண் கைது!
[Monday 2025-01-27 16:00]

நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், மாங்குளத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 வயதுடைய பெண்ணை மாங்குளம் பொலிஸார் கைது செய்தனர்.


டிஜிட்டல் அடையாள அட்டையால் தரவுகள் வெளியே போகாது!
[Monday 2025-01-27 16:00]

டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.


தமிழ் காதலனின் தந்தையை அடித்துக் கொன்றார் சிங்கள காதலியின் தாத்தா!
[Monday 2025-01-27 16:00]

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஓபநாயக்க பொலிஸ் பிரிவிலுள்ள ஹுனுவலை தோட்டத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இடம்‌ பெற்ற இச்சம்பவத்தில் 03 பிள்ளைகளின் தந்தையான ஜோசப் இராஜேந்திர குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல்!
[Monday 2025-01-27 16:00]

முன்னாள் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம்!
[Monday 2025-01-27 05:00]

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நீர்த்து விடக்கூடாது என்பதற்காக போராட்டத்தை நாங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்வோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்தனர்.


Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா