2 வாரங்களுக்குள் நாமலைக் கைது செய்ய திட்டம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

2 வாரங்களுக்குள் நாமலைக் கைது செய்ய திட்டம்!
[Tuesday 2025-01-28 05:00]

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரு வாரங்களில் கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கும் வகையில் அரசியல் பழிவாங்கல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.


  

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷவை நிதி சுத்திகரிப்பு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் அச்சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தாமல் அரசியல் பழிவாங்கல்களுக்கு முன்னுரிமை வழங்கியது.அதுபோலவே தற்போதைய அரசாங்கமும் செயற்படுகிறது.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு நிலையே இந்த அரசாங்கத்துக்கும் ஏற்படும். பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை இன்னும் இரண்டு வார காலத்துக்குள் கைது செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இந்த அரசாங்கம் பலவீனமடைவது உறுதி.நாட்டு மக்கள் மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்பார்கள் என்பதை நன்கு அறிந்தே ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிப்பதற்கு அரசாங்கம் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் அனைத்து முறையற்ற செயற்பாடுகளையும் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


காற்றின் தரம் பாதிப்பு!
[Thursday 2025-01-30 10:00]

நாட்டின் பல நகரங்களில் நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அர்ச்சுனாவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 10:00]

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


தீர்த்தமாட குளத்தில் குதித்தவர் சடலமாக மீட்பு!
[Thursday 2025-01-30 10:00]

கிளிநொச்சி, கண்டாவளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளியிடுங்கள்!
[Wednesday 2025-01-29 17:00]

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொது இடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.


இலங்கை அரசுடனான அணுகுமுறையை மீளாய்வு செய்யும் பிரித்தானியா!
[Wednesday 2025-01-29 17:00]

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டிருக்கும் பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்!
[Wednesday 2025-01-29 17:00]

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு அரசியலமைப்பின் சில பிரிவுகள் தடையாக உள்ளதாக அரசாங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அர்ச்சுனா எம்.பி. கைது!
[Wednesday 2025-01-29 17:00]

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்


விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி!
[Wednesday 2025-01-29 17:00]

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா குறித்த வழக்கில் இருந்து நேற்று விலகினார்.


பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி ரத்து!
[Wednesday 2025-01-29 17:00]

தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். இன்று ( நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை தொடர்ந்து பராமரிக்க எதிர்பார்க்கவில்லை. அது தொடர்பான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் மேற்கொள்வோம்." என்றார்.


40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது!
[Wednesday 2025-01-29 17:00]

40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.


Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா