கடிதம் எழுதாமல் வெளியேறுங்கள்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

கடிதம் எழுதாமல் வெளியேறுங்கள்!
[Wednesday 2025-01-29 04:00]

ஹேமா பிரேமசந்திர, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு சட்டமும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரிதொரு சட்டமும் இல்லை. கடிதம் மூலம் அறிவித்தால் தான் அரசாங்கத்துக்கு சொந்தமான இல்லங்களிலிருந்து வெளியேறுவதாகக் குறிப்பிடுவது அவர்கள் வகித்த 'நிறைவேற்றதிகார ஜனாதிபதி' என்ற பதவிக்கு பொறுத்தமானதல்ல என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


  

செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதிகள் வசிக்கும் இல்லங்கள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் வெறுமனே ஊடகப் பிரசாரத்துக்கானவை மாத்திரமல்ல. பல்வேறு தகவல்களை நாம் தற்போது முன்வைத்திருக்கின்றோம். அதற்கமைய அந்த இல்லங்களிலிருந்து வெளியேறுமாறு பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பல சந்தர்ப்பங்களில் நாம் அறிவித்துவிட்டோம்.

இதற்கு முன்னர் இந்த இல்லத்தைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச அதனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவ்வாறே செயற்பட்டிருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இவர்களும் முன்னாள் ஜனாதிபதிகளே.

அவ்வாறிருக்கையில் அவர்களுக்கொரு சட்டம், இவர்களுக்கொரு சட்டம் இல்லை. மைத்திரிபால சிறிசேனவின் இல்லம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பில் உத்தியோகபூர்வ இல்லம் என்றால் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு அவர்கள் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும்.

2021இல் அதிகாரம் கிடைத்த பின்னர் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்காகவென சுமார் 400 மில்லியன் ரூபாவுக்கும் அதிக அரச செலவில் குறித்த இல்லம் புனரமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் தற்போது இந்த இல்லத்தை நிர்வகித்துச் செல்வது அரசாங்கத்துக்கு பெரும் சுமையாகும். எனவே விரைவில் இந்த இல்லத்திலிருந்து மஹிந்த வெளியேறுவார் என்று எதிர்பார்க்கின்றோம்.

கடிதம் அனுப்பினால் தான் வெளியேறுவோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளாவர். எனவே இவர்கள் இவ்வாறு செயற்படுவது அவர்கள் வகித்த பதவிக்கு தகுதியானதல்ல. எனவே பூதங்களைப் போன்று இல்லங்களைப் பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறிவிட வேண்டும் என்றார்

  
   Bookmark and Share Seithy.com


காற்றின் தரம் பாதிப்பு!
[Thursday 2025-01-30 10:00]

நாட்டின் பல நகரங்களில் நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அர்ச்சுனாவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 10:00]

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நேற்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.


தீர்த்தமாட குளத்தில் குதித்தவர் சடலமாக மீட்பு!
[Thursday 2025-01-30 10:00]

கிளிநொச்சி, கண்டாவளை பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார், பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்


கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளியிடுங்கள்!
[Wednesday 2025-01-29 17:00]

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொது இடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.


இலங்கை அரசுடனான அணுகுமுறையை மீளாய்வு செய்யும் பிரித்தானியா!
[Wednesday 2025-01-29 17:00]

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டிருக்கும் பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.


முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்!
[Wednesday 2025-01-29 17:00]

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு அரசியலமைப்பின் சில பிரிவுகள் தடையாக உள்ளதாக அரசாங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அர்ச்சுனா எம்.பி. கைது!
[Wednesday 2025-01-29 17:00]

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, யாழ்ப்பாணத்தில் வைத்து விசேட பொலிஸ் குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்


விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி!
[Wednesday 2025-01-29 17:00]

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமற்போன சம்பவம் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் நீதிபதி அமல் ரணராஜா குறித்த வழக்கில் இருந்து நேற்று விலகினார்.


பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவி ரத்து!
[Wednesday 2025-01-29 17:00]

தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியைப் பராமரிக்க நடவடிக்கை எடுக்காது என்று பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். இன்று ( நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். "நாங்கள் பாதுகாப்பு படைகளின் பிரதானி பதவியை தொடர்ந்து பராமரிக்க எதிர்பார்க்கவில்லை. அது தொடர்பான பணிகளை பாதுகாப்பு அமைச்சகம் மூலம் மேற்கொள்வோம்." என்றார்.


40,000 போதை மாத்திரைகளுடன் 5 பேர் கைது!
[Wednesday 2025-01-29 17:00]

40,000 போதை மாத்திரைகளை கைவசம் வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்தனர்.


Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா