முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை குறைப்பதில் சிக்கல்!
[Wednesday 2025-01-29 17:00]

முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு அரசியலமைப்பின் சில பிரிவுகள் தடையாக உள்ளதாக அரசாங்கம் நியமித்த குழு தெரிவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


  

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்தபடி சிக்கன நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ஆராய்வதற்காக அவர் குழுவொன்றை நியமித்திருந்தார். இது குறித்து ஆராய்ந்த குழுவினர் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் முன்னாள் ஜனாதிபதிகளிற்கான சில சலுகைகளை குறைக்கமுடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அரசமைப்பின் 36 வது பிரிவில் இது குறித்து சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதை அந்த குழுவினர் சுட்டிக்;காட்டியுள்ளனர். அரசமைப்பின் இந்த பிரிவுகளை மாற்றுவது பல காரணங்களால் அரசாங்கத்திற்கு சவாலான விடயம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதிகளிற்கான உரிமை சட்டத்தின்படி,முன்னாள், ஜனாதிபதிகளிற்கு வாடகைகளை வசூலிக்காமல் வீடுகளை வழங்கவேண்டும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அரசியலமைப்பின்படி முன்னாள் ஜனாதிபதிகளிற்கான ஓய்வூதியம் போன்ற சில சலுகைகளை உடனடியாக இரத்து செய்ய முடியாது என தெரிவித்துள்ளார். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான ஓய்வூதியங்களை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவிற்கு தற்போதைய 3000 சதுர அடி வீட்டுக்கு பதில் வேறொரு வீட்டை வழங்க தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


மறைந்த மாவைக்கு பெருமளவானோர் அஞ்சலி! Top News
[Thursday 2025-01-30 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மாவை மறைவுக்கு சஜித் இரங்கல்!
[Thursday 2025-01-30 16:00]

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம்!
[Thursday 2025-01-30 16:00]

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கைதான மாயாதுன்னேவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 16:00]

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்.


கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்!
[Thursday 2025-01-30 16:00]

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (24) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.


அரசியலில் இருந்து விலகும் அர்ச்சுனா!
[Thursday 2025-01-30 16:00]

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இந்தோனேசியாவில் இருந்து 200 மில்லியன் தேங்காய் இறக்குமதி!
[Thursday 2025-01-30 16:00]

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு!
[Thursday 2025-01-30 16:00]

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


சுதந்திர தினத்தைக் கொண்டாட 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
[Thursday 2025-01-30 16:00]

77வது சுதந்திர தின விழாவிற்கு ரூ.80 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சகம் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.பாதுகாப்புப் படைகள் போன்ற நிறுவனங்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மாவை சேனாதிராஜா காலமானார்!
[Thursday 2025-01-30 10:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு காலமானார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா