இலங்கை அரசுடனான அணுகுமுறையை மீளாய்வு செய்யும் பிரித்தானியா! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

இலங்கை அரசுடனான அணுகுமுறையை மீளாய்வு செய்யும் பிரித்தானியா!
[Wednesday 2025-01-29 17:00]

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டிருக்கும் பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவிருப்பதாக அறிவித்துள்ளார்.


  

பிரித்தானியாவின் இந்தோ - பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட் நேற்றைய தினம் (28) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்திருந்தார்.

இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் இணைந்து நடாத்திய சந்திப்புக்களின் ஓரங்கமாக, கத்தரின் வெஸ்ட்டுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மு.ப 11.15 மணிக்கு யாழ் ஜெட்விங்க் ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கையான தமிழர்கள் பிரித்தானியாவில் வாழ்வதாகச் சுட்டிக்காட்டிய கத்தரின் வெஸ்ட், அதன் காரணமாக இலங்கை தமிழர் விவகாரத்தில் தாம் பெரிதும் அக்கறை கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அதன்பிரகாரம் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம், சமஷ்டி முறைமை உள்ளடங்கலாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரு பிரதான விடயங்களில் தமிழர்களின் எதிர்பார்ப்பு மற்றும் தற்போது அடையப்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டன் முன்நின்று செயற்பட்டுவருவதாகத் தெரிவித்த கத்தரின் வெஸ்ட், இதுபற்றி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் தாம் கலந்துரையாடிய போதிலும், அவர்கள் ஓரிரு வார்த்தைகளிலேயே பதிலளித்ததாக கூறினார். அதனையடுத்து அவரது கேள்விக்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள், 'தற்போதைய அரசாங்கம் தமிழர்களுக்கு இனப்பிரச்சினையே இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருந்துவருகிறது.

அதேபோன்று பொறுப்புக்கூறல் செயன்முறையின்கீழ் எவரையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்போவதில்லை என்பதும் இவ்வரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கிறது. எனவே தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தமட்டில், இந்த அரசாங்கம் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பொருத்தமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.

கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் குறைந்தபட்சம் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளையேனும் முன்னெடுத்தது. ஆனால் இப்புதிய அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து அதன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் எதனையும் உள்ளடக்கவில்லை. தற்போது நடைமுறையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை' என விசனம் வெளியிட்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை நிலைவரங்கள் தொடர்பில் பிரித்தானியா உன்னிப்பாக அவதானம் செலுத்தவேண்டியதும், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வுக்குரிய அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்கவேண்டியதும் அவசியம் என்றும் அவர்கள் அமைச்சர் கத்தரின் வெஸ்ட்டிடம் வலியுறுத்தினர்.

அதுமாத்திரமன்றி தற்போதைய அரசாங்கம் தமிழர்கள் தமக்குத்தான் ஆணை வழங்கியிருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துருவாக்கத்தைத் தோற்றுவிப்பதற்கு முயற்சித்துவருவதாக சுட்டிக்காட்டிய அவர்கள், அதனை முறியடிப்பதற்கு பாராளுமன்றத்தில் வட, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 19 பாராளுமன்ற உறுப்பினர்களில் தமிழ்த்தேசியக்கட்சிகளைச்சேர்ந்த 10 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும், அதனை இலக்காகக்கொண்ட ஒற்றுமை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் விளக்கமளித்தனர்.

அடுத்ததாக பொறுப்புக்கூறல் செயன்முறை தொடர்பில் கருத்துரைத்த சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார், 'இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதற்கு அப்பால் எவ்வித முன்னேற்றமும் அடையப்படவில்லை.

எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் பிரித்தானியாவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்வதற்குரிய கொள்கை மட்டத்திலான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும். அதனூடாக பொறுப்புக்கூறல் விடயத்தில் மாத்திரமன்றி, அரசியல் தீர்வு விடயத்திலும் அரசாங்கத்தின்மீது மறைமுக அழுத்தத்தைப் பிரயோகிக்கமுடியும்' எனச் சுட்டிக்காட்டினார்.

அதனை செவிமடுத்த பிரித்தானிய அமைச்சர் கத்தரின் வெஸ்ட், பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அப்பால் இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எதுவும் எட்டப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பேணப்பட்டுவரும் அணுகுமுறையை தமது அரசாங்கம் மீளாய்வுக்கு உட்படுத்தவிருப்பதாகவும், இதுகுறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com


மறைந்த மாவைக்கு பெருமளவானோர் அஞ்சலி! Top News
[Thursday 2025-01-30 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மாவை மறைவுக்கு சஜித் இரங்கல்!
[Thursday 2025-01-30 16:00]

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம்!
[Thursday 2025-01-30 16:00]

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கைதான மாயாதுன்னேவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 16:00]

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்.


கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்!
[Thursday 2025-01-30 16:00]

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (24) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.


அரசியலில் இருந்து விலகும் அர்ச்சுனா!
[Thursday 2025-01-30 16:00]

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இந்தோனேசியாவில் இருந்து 200 மில்லியன் தேங்காய் இறக்குமதி!
[Thursday 2025-01-30 16:00]

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு!
[Thursday 2025-01-30 16:00]

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


சுதந்திர தினத்தைக் கொண்டாட 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
[Thursday 2025-01-30 16:00]

77வது சுதந்திர தின விழாவிற்கு ரூ.80 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சகம் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.பாதுகாப்புப் படைகள் போன்ற நிறுவனங்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மாவை சேனாதிராஜா காலமானார்!
[Thursday 2025-01-30 10:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு காலமானார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார்.


Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா