கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளியிடுங்கள்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

கறுப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பை வெளியிடுங்கள்!
[Wednesday 2025-01-29 17:00]

சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொது இடங்களில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.


  

இது தொடர்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 4 ஆம் திகதியினை சிறிலங்கா தேசம் தமது சுதந்திர தினமாக கொண்டாடி வருகின்றது. ஆயினும் அன்றைய தினமே பறிக்கப்பட்ட தமிழர் தேசத்தின் இறையாண்மை, ஆங்கிலேயரிடமிருந்து சிங்கள பேரினவாதிகளுக்கு கைமாற்றப்பட்ட தினமாகும்.

வரலாற்றுரீதியாக இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் ஒன்றிணைந்த பகுதிகள், இத்தீவின் மூத்த குடிகளான தமிழ் மக்களின் தாயக பூமியாக இருந்தது என்பதையும், அந்த தாயகபூமி இறையாண்மை உள்ள தனித்தேசமாக இருந்தது என்ற வரலாற்று உண்மையை மறுதலித்து எமது சுதந்திரம் சிங்கள தேசத்திடம் கையகப்படுத்தப்பட்ட நாளாகவே இந்நாள் உள்ளது.

இன்று தேசிய மக்கள் சக்தி எனும் பெயரில் ஆட்சி ஏறி உள்ள ஜனதா விமுத்தி பெரமுன (JVP) எனும் சிங்கள அடிப்படைவாத கட்சி தம்மை மாற்றத்தின் நாயகர்களாக காட்டி முற்பட்டாலும் அவர்களின் உண்மை முகம் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டே இருக்கின்றது.

என்றுமில்லாதவாறு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி ஏறியவர்கள் இலங்கை தீவின் அதி உச்ச பிரச்சனையான தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக எவ்வித அக்கறைகளுமின்றி, ஏன் அவ்வாறான ஒரு பிரச்சனையே இல்லை என்ற கோதாவிலேயே நடந்து வருகின்றனர்.

அத்துடன் சிங்கள பேரினவாதத்தால் இனத்தின் மீதான இனவழிப்பினை மறுதலித்து, அலட்சியத்துடன் வலிந்து காணமல் ஆக்கப்பட்ட அனைவரும் இறந்து விட்டதாக கூறுகின்றனர். அரசியல் கைதிகள் யாரும் இல்லை என முன்னைய அரசாங்கங்களைப் போலவே தமிழ் மக்களின் போராட்டத்தினை பயங்கரவாதமாகவே சித்தரிக்க முயல்கின்றனர்.

சிங்கள தேசத்தில் ஆட்சி மாறினாலும், சிங்கள பேரினவாத மூலோபாயம் மாறாது என்பதே நாம் கண்ட அனுபவ பாடம். அதைவிடுத்து இந்த ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என நம்புவோமேயானால் எம்மை போன்ற அரசியல் அறிவீலிகள் யாரும் இருக்க முடியாது.

மேலும், இந்த அரசானது இலங்கையர் எனும் அடையாளத்தின் கீழ் தமிழ் மக்களின் தனித்துவத்தை அழித்து சிங்கள மேலாண்மையை நிறுவுவதில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு வரும் சிறிலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை தொடர்ச்சியாக தமிழர் தேசம் கரிநாளாக அனுசரித்தது போலவே இம்முறையும் அனுசரிக்க அறைகூவல் விடுக்கின்றோம். சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை கொண்டாடும் அதே நாளை நாம் சுதந்திரத்தினை இழந்த நாளாக கருத்தில் கொண்டு பொதுவிடங்கள், கடைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், வணக்கத்தலங்கள், எமது வீடுகள் என்பவற்றில் கறுப்பு கொடிகளை கட்டி உங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நாளில் உங்களின் உரிமை குரலுடன் சிங்கள அரசுக்கெதிரான தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் தேசம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இறையாண்மை உள்ள தனித்தேசமாக மலரும் நாளே தமிழினத்தின் சுதந்திர நாள் என்பதனை மனதில் கொண்டு விடுதலைக்காய் போராட அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


மறைந்த மாவைக்கு பெருமளவானோர் அஞ்சலி! Top News
[Thursday 2025-01-30 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மாவை மறைவுக்கு சஜித் இரங்கல்!
[Thursday 2025-01-30 16:00]

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம்!
[Thursday 2025-01-30 16:00]

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கைதான மாயாதுன்னேவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 16:00]

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்.


கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்!
[Thursday 2025-01-30 16:00]

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (24) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.


அரசியலில் இருந்து விலகும் அர்ச்சுனா!
[Thursday 2025-01-30 16:00]

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இந்தோனேசியாவில் இருந்து 200 மில்லியன் தேங்காய் இறக்குமதி!
[Thursday 2025-01-30 16:00]

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு!
[Thursday 2025-01-30 16:00]

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


சுதந்திர தினத்தைக் கொண்டாட 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
[Thursday 2025-01-30 16:00]

77வது சுதந்திர தின விழாவிற்கு ரூ.80 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சகம் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.பாதுகாப்புப் படைகள் போன்ற நிறுவனங்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மாவை சேனாதிராஜா காலமானார்!
[Thursday 2025-01-30 10:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு காலமானார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார்.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா