ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
January 30, 2025 [GMT]

ஆளுநருக்கு சொந்தமான கொள்கலன்கள் சோதனையின்றி விடுவிப்பு!
[Thursday 2025-01-30 16:00]

மாகாண ஆளுநருக்கு சொந்தமானது என்பதால் சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் பரிசோதிக்கப்படாமல் சுங்கத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்களில் என்ன இருந்தது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.


  

துறைமுகத்தில் இருந்த சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் விடுவிடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை. பேச்சளவில் மாத்திரமே பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படுகிறது. ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் ஊழலுக்கு எதிராக என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட 323 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளும் இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கலன்கள் மாகாண ஆளுநர் ஒருவருக்கு சொந்தமானது என்று குறிப்பிடப்படுகிறது. அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது. கொள்கலன்களை பரிசோதனை செய்யாமல் விடுவிப்பதற்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அமைச்சருக்கு கிடையாது.

323 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் தொடர்பான விபரத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த அரசாங்கத்தின் உண்மை முகத்தை மக்கள் வெகுவிரைவில் அறிந்துக் கொள்வார்கள். எதிர்க்கட்சிகள் முதலில் எதிர்க்கட்சியாக செயற்பட்டு அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


மறைந்த மாவைக்கு பெருமளவானோர் அஞ்சலி! Top News
[Thursday 2025-01-30 16:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மாவை மறைவுக்கு சஜித் இரங்கல்!
[Thursday 2025-01-30 16:00]

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம்!
[Thursday 2025-01-30 16:00]

சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


கைதான மாயாதுன்னேவுக்கு பிணை!
[Thursday 2025-01-30 16:00]

பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கபட்டுள்ளார்.


கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம்!
[Thursday 2025-01-30 16:00]

யாழ். பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியாக தொடர்ந்து பதவி வகிக்க பேராசிரியர் சி.ரகுராம் இணக்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்கக் கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாக சில மாணவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை (24) உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தனர்.


அரசியலில் இருந்து விலகும் அர்ச்சுனா!
[Thursday 2025-01-30 16:00]

அரசியலில் அதிக காலம் இருப்பதற்கு தான் எதிர்பார்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நேற்று மதியம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.


இந்தோனேசியாவில் இருந்து 200 மில்லியன் தேங்காய் இறக்குமதி!
[Thursday 2025-01-30 16:00]

தற்போதைய தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க, இலங்கை இந்தோனேசியாவில் இருந்து தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்ய உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சுதந்திர தினத்தைக் கொண்டாட 80 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!
[Thursday 2025-01-30 16:00]

77வது சுதந்திர தின விழாவிற்கு ரூ.80 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன இன்று தெரிவித்தார். ஒதுக்கப்பட்ட நிதிக்குள் செலவினங்களை மட்டுப்படுத்த அமைச்சகம் முயற்சிக்கிறது என அவர் கூறினார்.பாதுகாப்புப் படைகள் போன்ற நிறுவனங்களுக்கு தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


மாவை சேனாதிராஜா காலமானார்!
[Thursday 2025-01-30 10:00]

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றிரவு காலமானார். மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 10 மணியளவில் மரணமானார்.


காற்றின் தரம் பாதிப்பு!
[Thursday 2025-01-30 10:00]

நாட்டின் பல நகரங்களில் நிலவும் ஆரோக்கியமற்ற காற்றுடனான வானிலை இன்று முதல் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்ப்பதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா