சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 20, 2025 [GMT]

சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது!
[Tuesday 2025-02-18 16:00]

காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் களமும் அதற்கான முடிவுகளும் மாற்றம் பெறவேண்டியது அவசியமாகும். அதற்கேற்ப நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகளுடன் அவரவர் கட்சிகளின் கொள்கைகள் மாறுபடாது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளை வெற்றிகொள்வதற்கான சாதக நிலைகளை உருவாக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.


  

யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறிய சிவஞானம் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது கடந்த காலங்களைப் போல் அல்லாது அரசியல் தளம் மாற்றமடைந்துள்ளது. இது தமிழ் தரப்பினரின் அரசியல் களத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதேவேளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் தமிழ் அரசியல் புலம் சார்ந்த கட்சிகள் கைப்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்த நிலையில், தமிழ் அரசியல் பரப்பில் உள்ள கட்சிகள், கொள்கைகள், பாதைகள் வேறு வேறாக இருந்தாலும் தங்களின் நிலைப்பாடுகளில் இருந்து கொண்டு ஒன்றிணைவது அவசியமாகும்.

இதில் உரிமைப் போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து போராளிக் கட்சிகளும் அடங்குவதாக இருக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பான கருத்தாடல்கள் கட்சிகளின் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை தற்போது அனைவரும் ஒரு புதுத் தளத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன. அது நிறைவுற்ற பின்னரே தேர்தலில் தற்போதைய களச் சூழலுக்கேற்ப எவ்வாறு ஒரே நிலைப்பாட்டுடன் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க முடியும்.

அது மட்டுமன்றி கூட்டாக போட்டியிடுவதா, இரண்டு அல்லது மூன்று தரப்பாக வாக்குகள் சிதறாத வண்ணம் போட்டியிடுவதா என்பது பற்றியும் அடைவை எட்ட முடியும்.

அத்துடன் தமிழ் தரப்பின் போட்டியாளர்கள், எந்தவொரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் சேறுபூசல்களில் ஈடுபடாமல், ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கிய வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவர் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு, களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும் என தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியுள்ள நிலையில், கட்சியின் முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படுமா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, அவ்வாறான எதுவும் இனி இடம்பெற வாய்ப்பிருக்காது என்றும் சிறீதரனை கூட கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  
   Bookmark and Share Seithy.com


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!
[Thursday 2025-02-20 16:00]

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நிலையில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


கணேமுல்ல சஞ்சீவ கதையை முடிக்க ஒன்றரைக் கோடி ரூபா பேரம்!
[Thursday 2025-02-20 16:00]

புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டுபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


துப்பாக்கிதாரி முஸ்லிம் அல்ல, சிங்களவர்!
[Thursday 2025-02-20 16:00]

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக கைது செய்யப்பட்டவர் மஹரகம பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்சான் பியுமங்க கதனாராச்சி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


சஞ்சீவ உடலைத் துளைத்த தோட்டா மீட்பு!
[Thursday 2025-02-20 16:00]

அளுத்கடை நீதவான் நீதிமன்றக் கூண்டில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கனேமுல்ல சஞ்சீவவின் இதயத்தை ஊடுருவிச் சென்று அவரது உடலில் நுழைந்த ஒரு தோட்டாவின் துண்டு, இன்று திறந்த நீதிமன்றத்தில் அரசாங்க பகுப்பாய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.


மீண்டும் எம்.பி ஆகிறார் ரணில்?
[Thursday 2025-02-20 16:00]

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட்டார் நீதிவான்!
[Thursday 2025-02-20 16:00]

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப் புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஆனந்தராஜா இன்றைய தினம் பார்வையிட்டார். இதன்போது நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார், முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர். இந்த பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முகமாலையில் கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!
[Thursday 2025-02-20 16:00]

முகமாலை வடக்கு ஏ9 வீதியில் செ. நாகசெல்வம் என்பவரது கடை மீது இனம்தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் பெற்றோல் குண்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


செவ்வந்தியைப் பிடிக்க உதவி கோரும் பொலிஸ்!
[Thursday 2025-02-20 16:00]

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.


மட்டக்களப்பு ரயிலுடன் மோதி 6 யானைகள் பலி!
[Thursday 2025-02-20 16:00]

கல்ஓயா பிரதேசத்தில் மீனகயா கடுகதி ரயில் மோதியதில் 6 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு காட்டு யானை காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரயில் தடம் புரண்டுள்ளதாகவும், மட்டக்களப்பு-கொழும்பு ரயில் பாதையில் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கஜேந்திரன், வேலன் சுவாமியை விசாரணைக்கு அழைத்தது பொலிஸ்!
[Thursday 2025-02-20 05:00]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள் ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக பலாலி பொலிஸாரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா