கணேமுல்ல சஞ்சீவ கதையை முடிக்க ஒன்றரைக் கோடி ரூபா பேரம்! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 21, 2025 [GMT]

கணேமுல்ல சஞ்சீவ கதையை முடிக்க ஒன்றரைக் கோடி ரூபா பேரம்!
[Thursday 2025-02-20 16:00]

புதுக்கடை நீதிமன்றத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டுபாயில் தலைமறைவாக உள்ள கெஹெல்பத்தர பத்மே என்ற நபரின் அறிவுறுத்தலின் பேரில், ஒன்றரை கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் அடிப்படையில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


  

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேகநபர் கடல்வழியாகத் தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் பல்வேறு பெயர்களைப் பயன்படுத்தி இந்தக் கொலை உட்பட மேலும் 6 கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நபர் இடைநடுவே இராணுவத்திலிருந்து விலகி தலைமறைவாகியுள்ள நபர் எனவும் தற்போது தெரியவந்துள்ளது. இந்தக் கொலைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பணத்தில் துப்பாக்கிதாரிக்கு 200,000 ரூபாய் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த துப்பாக்கிதாரியும், துப்பாக்கி பிரயோகத்திற்கு உதவிய பெண்ணும் கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்து நீதிமன்ற வளாகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட பின்னர் இருவரும் மருதானை பகுதிக்குச் சென்று, அங்கிருந்து முச்சக்கரவண்டி ஊடாக நீர்கொழும்புக்குச் சென்று பின்னர் அங்கிருந்து துப்பாக்கிதாரி மாத்திரம் புத்தளத்திற்கு பயணித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 5 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


அர்ச்சுனா மீது சிறப்புரிமைகள் பற்றிய குழுவே நடவடிக்கை!
[Friday 2025-02-21 16:00]

பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) இராமநாதன் அர்ச்சுனாவின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.


தையிட்டி விகாரை விவகாரம் - 2 ஊடகவியலாளர்களிடமும் விசாரணை!
[Friday 2025-02-21 16:00]

"தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் " என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார் 06 மணி நேரம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர்.


அக்கரைப்பற்று விபத்தில் இரு இளைஞர்கள் பலி!
[Friday 2025-02-21 16:00]

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதான வீதியில் நேற்று மாலை கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


கனிய மணல் அகழ்வை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டும்!
[Friday 2025-02-21 16:00]

இந்த நாட்டில் ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டது. மக்கள் சக்தி வலிமையானது. எனவே, மன்னார் தீவுப் பகுதியில் காற்றாலை, கனிய மணல் அகழ்வு (டைட்டானியம்) கரையோர மண் அகழ்வு ஆகிய மூன்று திட்டங்களையும் முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை. ஆகவே, எமது கோரிக்கையை புரிந்துகொண்டு துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதிக்கு இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குற்றவாளியை ஹீரோவாக்கிய அரசாங்கம்!
[Friday 2025-02-21 16:00]

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று கண்டனம் வெளியிட்டார்.


ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு மட்டுமே 24 மணிநேர சேவை!
[Friday 2025-02-21 16:00]

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


யானை தாக்கி 2 பேர் பலி!
[Friday 2025-02-21 16:00]

காட்டு யானை தாக்கியதில் அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஆண் மற்றும் 75 வயதுடைய பெண் ஆகியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த அந்த நபர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


ஜா-எலவில் அடுத்த சூடு! - வரிசையாக நடக்கும் கொலைகள்.
[Friday 2025-02-21 16:00]

ஜா-எல, மோகன்வத்தவில் வியாழக்கிழமை இரவு கவடத்தாவைச் சேர்ந்த 29 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணத்தைக் கண்டறியவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காணவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்


வவுனியாவில் டிப்பர் மோதி பெண் படுகாயம்!
[Friday 2025-02-21 16:00]

வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்றுமதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


வித்தியா கொலை குற்றவாளியை விடுவித்த லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை!
[Friday 2025-02-21 06:00]

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் பிரதான சந்தேகநபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பை வழங்கியது.


Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா