துப்பாக்கிதாரியின் காதலி கைது! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 22, 2025 [GMT]

துப்பாக்கிதாரியின் காதலி கைது!
[Saturday 2025-02-22 06:00]

கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை சம்பவத்தில் துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் பெண் ஒருவரை மஹரகம பொலிசார் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பின்னர், துப்பாக்கிதாரி தனது காதலியுடன் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வந்ததாக தற்போது தெரியவந்துள்ளது.


  

அதற்காக, குறித்த பெண்ணை நீர்கொழும்பு பகுதிக்கு அழைத்துச் செல்ல நபர் ஒருவர் மஹரகம பகுதிக்கு வந்துள்ளார். குறித்த நபரையும் கைது செய்து கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர்.

  
   Bookmark and Share Seithy.com


கொட்டாஞ்சேனை கொலையாளிகள் இருவரும் பொலிசாரால் சுட்டுக்கொலை!
[Saturday 2025-02-22 17:00]

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


நாட்டைச் சீர்குலைக்க முயற்சி!
[Saturday 2025-02-22 17:00]

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி. டிபிள்யூ. ஆர். டி. செனவிரத்ன தெரிவித்தார்.


படைகளை விட்டு ஓடியவர்களும் பாதாள உலக குழுக்களுடன்!
[Saturday 2025-02-22 17:00]

சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.


புலிகள் உட்பட 15 அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
[Saturday 2025-02-22 17:00]

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 15 பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்தவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.


நீர்கொழும்பில் குறிவைக்கப்பட்ட சஞ்சீவ!- ஒப்புக்கொள்கிறார் பதில் பொலிஸ்மா அதிபர்.
[Saturday 2025-02-22 17:00]

நாட்டில் 57 பாதாள உலகக் கும்பல்கள் செயற்படுவதாகவும் அவற்றுக்கு சுமார் 1,400 பேர் உதவியாளர்களாக செயற்படுவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.


மானிப்பாயில் ஆணின் சடலம் மீட்பு!
[Saturday 2025-02-22 17:00]

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவாலி பகுதியில் சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நவாலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


மட்டக்களப்பில் துரத்தித் துரத்தில் வாள்வெட்டு- 2 பேர் காயம்!
[Saturday 2025-02-22 17:00]

மட்டக்களப்பு - ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டனர்.


மரண ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை மோதி தள்ளிய வாகனம்!- 6 பேர் காயம்.
[Saturday 2025-02-22 17:00]

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பேருந்து தீப்பிடித்து ஒருவர் பலி!
[Saturday 2025-02-22 17:00]

உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் இன்று அதிகாலை யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பில் தமிழ் வர்த்தகர் சுட்டுக்கொலை!
[Saturday 2025-02-22 06:00]

கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், T-56 துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா