நாட்டைச் சீர்குலைக்க முயற்சி! | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
February 23, 2025 [GMT]

நாட்டைச் சீர்குலைக்க முயற்சி!
[Saturday 2025-02-22 17:00]

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உட்பட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளை சீர்குலைத்து, நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி. டிபிள்யூ. ஆர். டி. செனவிரத்ன தெரிவித்தார்.


  

கொழும்பில் உள்ள தகவல் ஊடக அமைச்சில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

”ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுக்களுக்கு இடையில் பல்வேறு முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதையே கடந்த சில நாட்களாக இடம்பெறும் சம்பவங்கள் வெளிகாட்டுகின்றன. இந்த முரண்பாடுகள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளன. குறிப்பாக அவர்கள் பெறும் தரகுப் பணம், போதைப்பொருள் உட்பட பல காரணிகள் உள்ளன. அத்துடன், இங்கு அரசியல் தொடர்ப்புகளும் உள்ளன.

பாதாள உலக குழுக்கள் செயல்பட அரசியல் தொடர்புகள் இருந்தமையை நாம் அனைவரும் அறிவோம். இந்த காரணிகளின் பிரகாரம் தான் தற்போது சில சம்பவங்கள் உக்கிரமடைந்துள்ளன. புதுகடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பிரகாரம் பொலிஸார் விரைந்து செயல்பட்டு சில மணித்தியாலங்களுக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் கைதுசெய்தனர்.

அதேபோன்று மேல்மாகாணத்தில் பல சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறு இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விரைந்து செயல்பட்டு சட்டத்தை நிலைநாட்டி வருகின்றன.

பாதாள உலக குழுக்களை இயக்குபவர்கள் அதிகமாக வெளிநாடுகளில்தான் உள்ளனர். இது தொடர்பில் உரிய அரசுகளுடன் கலந்துரையாடி சந்தேகநபர்களை உள்நாட்டுக்கு அழைத்துவரும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 9 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாட்டுக்கு வெளியில் உள்ள சந்தேகநபர்கள் தொடர்பிலான சிவப்பு எச்சரிக்கையை இன்டர்போலிடம் வழங்கியுள்ளோம். அவ்வாறு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம்தான் சில சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களின் இருப்புக்கு கடந்தகாலத்தில் சில அரசியல் ஆதரவுகள் இருந்தன. தற்போது அவர்களை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைளின் பிரகாரம்தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை எமது அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பில் சில குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சில சம்பவங்கள் தொடர்பில் வழக்குகள் நீதிமன்றத்தில் இறுதிகட்டம் வரை கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளோம். இந்த விசாரணைகளை திசை திருப்பும் நோக்கிலும் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவும் இவ்வாறான சம்பவங்களை நிகழ்த்துகின்றனர். ஆனால், இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு விசாரணைகளை திசை திருப்ப முற்படுபவர்கள் தொடர்பில் புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என்றார்.

  
   Bookmark and Share Seithy.com


கோட்டபய ராஜபக்ஷவை விட மிகமோசமான விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும்!
[Sunday 2025-02-23 06:00]

படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியும்,எம்மை நாம் ஆளும் அரசியல் தீர்வும் வேண்டும் என்பதில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை தாமதப்படுத்துவது இந்த நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும். மக்களை ஏமாற்றினால் கோட்டபய ராஜபக்ஷவை காட்டிலும் மிக மோசமான விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.


நாளை முதல் மழை!
[Sunday 2025-02-23 06:00]

நாளை முதல் (24) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


ரி56 துப்பாக்கிக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம்!
[Sunday 2025-02-23 06:00]

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற 58 குழுக்களும், அவற்றைப் பின்பற்றுகின்ற 1400 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர். சமூகத்தில் ஆயுத புலக்கம் அதிகரித்துள்ளதால் அவற்றால் இடம்பெறக் கூடிய குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக ரி- 56 ரக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.


கணேமுல்ல சஞ்சீவ கொலை - இன்னொரு பொலிஸ் கைது!
[Sunday 2025-02-23 06:00]

புதுக்கடை நீதிமன்றத்தின் 5 ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸின் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் குற்றம் தொடர்பாக இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் இடம்!
[Sunday 2025-02-23 06:00]

பாராளுமன்ற குழுக்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பயப்படாமல் சுடு! - துப்பாக்கிதாரிக்கு உத்தரவிட்ட கொமாண்டோ சலிந்த.
[Sunday 2025-02-23 06:00]

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் திட்டமிட்ட கொமாண்டோ சலிந்த என்ற நபரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டதாக பொலிஸார் தற்போது கண்டறிந்துள்ளனர். இதன்போது கொமாண்டோ சலிந்த, "நீ வேலையைச் செய்" என்றார். வெளியே எல்லாம் சரி. பயப்படாதே. சுடு. எல்லாம் சாதகமாகவுள்ளது. "பயப்படாமல் சுடு என குறிப்பிட்டுள்ளார்.


இறுதி ஊர்வலம் மீது வாகனம் மோதிய சம்பவத்தில் காயமடைந்தவர் மரணம்!
[Sunday 2025-02-23 06:00]

யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 05 பேர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் என்ற 30 வயதானவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


அர்ஜுன் அலோசியஸ் விடுதலை!
[Sunday 2025-02-23 06:00]

டபிள்யூ.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வற் வரியைச் செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம்!
[Sunday 2025-02-23 06:00]

காலாவதியாகியுள்ள அரசியலமைப்பை இரத்துச் செய்து மக்களின் விருப்பத்துடன், புதிய அரசியலமைப்பை நிச்சயம் உருவாக்குவோம். தேசிய நல்லிணக்கம், ஜனநாயகம் ஆகியவற்றை ஸ்திரப்படுத்துவோம். வழங்கிய வாக்குறுதிக்கு அமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை வெகுவிரைவில் இரத்துச் செய்வோம் என வெளிவிவகாரம் , வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.


தமிழரசுக் கட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
[Saturday 2025-02-22 17:00]

கூட்டுப்பேச்சுவார்த்தை குறித்த தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி மறுபரிசீலனை செய்யவேண்டும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.


Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Latika-Gold-House-2025
Kugeenthiran-200-2022-seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா