Untitled Document
November 21, 2024 [GMT]
ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா!
[Wednesday 2024-10-23 18:00]

பொதுவாகவே  எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது.  தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது. தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.

  

கோதுமையுமன் ஒப்பிடுகையில் காளான்களில் 12 மடங்கு அதிகமாக ஆண்டி-ஆக்சிடெண்டுகள் இருப்பதால், இது இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது.

இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.இதனால் அது மாரடைப்பை தடுப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட களானை கொண்டு அசத்தல் சுவையில் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் காளான் மிளகு மசாலா எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு

பட்டை - 1

ஏலக்காய் - 2

கிராம்பு - 4

மிளகு - 1 1/2 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

வரமிளகாய் -3

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

சோம்பு - 1 தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி

உப்பு - சுவைக்கேற்ப

காளான் - 400 கிராம் (பெரிய துண்டுகளாக்கிக் கொள்ளவும்)

தண்ணீர் - 1/2 டம்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூமானதும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சோம்பு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி, ஆறவிட வேண்டும்.

பின்னர் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி, அதில் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து மஞ்சள் தூள் சேர்த்து சுவைக்கேற்ப உப்பு தூவி நன்றாக கிளறி விட்டு, அதனுடன் காளானையும் சேர்த்து நன்றாக மூடி வைத்து வேகவிட வேண்டும்.

நன்றாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, 1/2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கியம் நிறைந்த களான் மசாலா தயார்.

  
   Bookmark and Share Seithy.com



கிராமத்து மண்வாசனையில் கத்தரிக்காய் குழம்பு!
[Wednesday 2024-11-20 18:00]

நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும். இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன.



தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் அற்புத பானம்!
[Tuesday 2024-11-19 18:00]

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.



ஹைதராபாத் பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்!
[Monday 2024-11-18 18:00]

பொதுவாகவே அசைவ பிரியர்களின் உணவு பட்டியலில் சிக்கன் முக்கிய இடம் வகிக்கின்றது. சிக்கனை எப்படி செய்தாலும் சாதம், இட்லி, தோசை மற்றும் பிரட் என எல்லா உணவுடனும் சூப்பராக ஒத்துபோகும். எப்போதும் போல் இல்லாமல் சற்று வித்தியாசமாகவும் கூடுதல் சுவையுடனும் சிக்கன் சமைக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் பாணியில் ஒரு முறை இப்படி சிக்கன் வறுவல் செய்து பாருங்க.



முடி அடர்த்தியாகவும் நீளமான கருகரு கூந்தல் வேண்டுமா?
[Monday 2024-11-18 06:00]

இந்த கால கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி தலைமுடிப்பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகின்றது. இந்த பிரச்சனையை போக்குவதற்கு பலரும் பலமுறையினை முயற்சி செய்கின்றனர். இப்படி அதிகமாக இருக்கும் பிரச்சனைக்காக பலர் எண்ணெய்களை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது இருக்கும் அவசர கால கட்டத்தில் தலைக்கு எண்ணெய் வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது.



குளிர்காலத்தில் இதயத்தை பலவீனமாக்கும் உணவுகள்!
[Friday 2024-11-15 17:00]

பொதுவாக காலநிலைகள் அவ்வப்போது மாறிக் கொண்டே இருக்கும். அந்த சமயங்களில் நாம் நமது உடலை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியமாகும். கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது இதமாக இருந்தாலும் இது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடும். இதனால் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தவறும் பட்சத்தில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்றுக்கள் இலகுவாக வந்து விடும்.



இட்லி சாப்பிட்டால் உடல்நல கோளாறு ஏற்படுமா?
[Thursday 2024-11-14 18:00]

எளிய உணவாக இருக்கும் இட்லியை சரியான முறையில் சாப்பிட்டால் மட்டுமே அதன் முழு பலனையும் அடைய முடியுமாம். பெரும்பாலான தென்னிந்தியா மக்கள் தங்களது காலை உணவாக இட்லி எடுத்துக் கொள்கின்றனர். சமைப்பதற்கு மட்டுமின்றி உடல் நலத்திற்கும் எளிய உணவாக இருக்கின்றது. அரிசியும், உளுந்தும் சேர்த்து அரைத்து மாவை சற்று புளிக்க வைத்து தயாரிப்பதே இட்லி ஆகும். இதற்கு சட்னி, சாம்பார் என்று சாப்பிடுவது தனி ருசி தான்.



மாதவிடாய் கால பழமையான கட்டுப்பாடுகள்!
[Wednesday 2024-11-13 18:00]

முன்னைய காலங்களில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு செல்ல கூடாது, சமையலறையில் எந்த பொருட்களையும் தொடக்கூடாது, தனியறையில் இருக்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவ்வாறான கட்டுப்பாடுகளை பெரும்பாலான பெண்கள் இன்றுவரையில் பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளாகவே பார்க்கின்றார்கள்.



தொங்கும் தொப்பையை சட்டுன்னு குறைக்கும் குடைமிளகாய் சட்னி!
[Tuesday 2024-11-12 18:00]

பொதுவாக உடலில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கக்கூடிய காய்கறி வகைகளுள் குடைமிளகாய் முக்கிய இடம் வகிக்கின்றது. குடைமிளகாயில் வைட்டமின் 'சி' சத்து அதிகளவில் இருப்பதால் இது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. மேலும் இதில் அடங்கியுள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.



கெட்ட கொழுப்பை கரைத்து உடலை சிலிம்மாக மாற்றும் இலவங்கப்பட்டை!
[Monday 2024-11-11 18:00]

மசாலா பொருட்களில் ஒன்றாக பார்க்கப்படும் இலவங்கப்பட்டை என்பது சின்னமோமம் எனும் மரங்களின் உட்புற பட்டையிலிருந்து பெறப்படுகிறது. இது இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு சுவை, மணம் வழங்குவதற்கு பயன்படுத்தும் முக்கிய பொருளாகும். இப்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளை எப்படி எடை குறைப்பிற்கு பயன்படுத்துவது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். அப்படியாயின் இலவங்கப்பட்டையை எப்படி பயன்படுத்தி உடல் எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



கெட்ட கொழுப்பை கரைக்கும் மா இலை தேநீர்!
[Sunday 2024-11-10 17:00]

இதய நோய் முதல் எடை இழப்பு வரையிலான நோய்களுக்கு மா இலைகள் மருந்தாகின்றது. மா இலைகளில், வைட்டமின்கள் சி, ஏ, பி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக மனித உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அவசியமான தாதுக்களும் நிறைந்துள்ளன. அத்துடன் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள், டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டிருக்கின்றன.



புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
[Saturday 2024-11-09 18:00]

பொதுவாகவே பெண்கள் மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை பயன்படுத்துவது தற்காலத்தில் குறைவு.



ஒரு நாளைக்கு எத்தனை பாதாம் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தலாம்?
[Friday 2024-11-08 18:00]

பாதாம் ஒரு தானிய வகையாகும். இதில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் அதிக உதவியாக இருக்கும். தற்போது இருக்கும் தவறான உணவுப்பழக்கத்தின் காரணத்தினால் உடல் எடை அதிகமாகி கெட்ட கொலஸ்ராலின் அளவை அதிகமாக்கிறது. இதனால் இதய நோய் முதல் பலவிதமான நோய்கள் நம்மை வந்து சேரும். பாதாமில் நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது கெட்ட கொலஸ்ராலை குறைக்க உதவும். இதை எப்படி சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ராலை குறைக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



எண்ணற்ற பலன்களை தரும் ஊற வைத்த அரிசி நீர்!
[Thursday 2024-11-07 18:00]

அரிசி ஊற வைத்த தண்ணீரை வெளியே கொட்டாமல் அதனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான வீடுகளில் அரிசி ஊற வைத்த தண்ணீரை கீழே ஊற்றி வீணடித்து விடுவார்கள். ஆனால் இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லைாயம். ஆம் அரிசி கழுவும் தண்ணீரை வைத்து நாம் பலவிதமான நன்மைகளை பெற முடியும். அது என்னென்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.



ஆந்திரா பாணியில் காரசாரமான தக்காளி பச்சடி!
[Wednesday 2024-11-06 19:00]

பொதுவாகவே ஆந்திரா பாணியில் செய்யப்படும் அனைத்து உணவுகளும் காரசாரமாகவும் அசத்தல் சுவையிலும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் காரத்திற்கு பெயர் போன இடம் என்றால் அது ஆந்திரா மாநிலம் தான். ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் காரசாரமான தக்காளி பச்சடியை எவ்வாறு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம். தங்காளியில் அதிகளவில் வைட்டமின் சி காணப்படுவதால் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.



கேரள பெண்களின் கூந்தல் ரகசியம் என்ன தெரியுமா?
[Tuesday 2024-11-05 18:00]

பொதுவாகவே பெண்களுக்கு நீண்ட ஆரோக்கியமான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பெரும்பாலான பெண்கள் தங்களின் நேரத்தையும் பணத்தையும் அதிகம் செலவு செய்கின்றனர். ஆனால் கேரள பெண்களின் கூந்தல் எப்போதும் நீண்டதாகவும் ஆரோக்கியமாகவும் கருமையாகவும் இருப்பதன் ரகசியம் என்ன தெரியுமா? நெல்லிக்காயை வைத்து தயாரிக்கும் சம்மந்தி தான். நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ-யின் சிறந்த மூலமாக இருக்கின்றது. இதில் ஒரு ஆப்பிள் பழத்திற்கு நிகராக ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.



முழங்கால் வலியை குணமாக்கும் நடைபயிற்சி!
[Monday 2024-11-04 18:00]

பொதுவாக நாம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள நடைபயிற்சி அவசியமாக பார்க்கப்படுகின்றது. நடைபயிற்சி எனக் கூறும் பொழுது பலர் முன்னோக்கி தான் நடப்பார்கள். ஆனால் முன்னோக்கி நடப்பதற்கு பதிலாக பின்னோக்கி நடந்தால் அதில் நன்மைகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன. முழங்கால் வலி முதல் உடல் எடையை குறைப்பது வரையிலான பல பலன்கள் பின்னோக்கி நடப்பதால் இலகுவாக கிடைக்கின்றன. சிலர் என்ன செய்தாலும் எடை குறையாமல் இருக்கின்றது என கவலையில் இருப்பார்கள். இப்படியானவர்கள் பின்னோக்கி நடப்பது நல்லது. அப்படியாயின் பின்னோக்கி நடப்பதன் மூலம் எமக்கு கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.



ஆபத்தான நோய்க்கு சிறந்த மருந்தாகும் கொய்யாப்பழம்!
[Sunday 2024-11-03 16:00]

பொதுவாக பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏகப்பட்ட பலன்கள் கிடைக்கின்றன. மற்ற உணவுகளை விட மனிதர்களுக்கு ஆரோக்கியம் தருவதில் பழங்கள் இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகின்றது. அந்த வரிசையில் கொய்யாப்பழங்கள் உடலுக்கு ஏகப்பட்ட ஆரோக்கிய பலன்களை தருகின்றது. ஏனெனின் கொய்யாப்பழங்களில் ஏராளமான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தாதுக்கள் உள்ளன.



மழைக்காலத்தில் தவறியும் காளான் சாப்பிடாதீங்க! ஏன் தெரியுமா?
[Saturday 2024-11-02 17:00]

கோடை காலத்தின் பின்னர் அதன் வெப்பத்தை தணிக்க மழை காலம் வரகிறது. இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவாகளுக்கு நோய் தொற்றும். எப்போதம் போல மழைக்காலத்தில் உணவுகளை உட்கொள்ள முடியாது. இந்த பருவத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.



கால் பிடிப்பை அடியோடு விரட்டும் காரசாரமான முருங்கைக்காய் ரசம்!
[Friday 2024-11-01 18:00]

நமக்கு நோய் வராமல் தடுப்பதற்கு உணவை சரிவர சாப்பிடுவது அவசியம். நாம் சத்தான உணவுகளை உட்கொண்டால் தான் நமது வாழ்வு மேன்படும். முருங்கைக்காய் உணவாக பலரும் பயன்படுத்துவார்கள். இந்த மரத்தின் காய், பட்டை, பிசின், கீரை என அனைத்து பாகங்களுமே நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கக்கூடியவை.முருங்கைக்கீரையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. அதை உணவில் தினமுமே சேர்த்துக்கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. பலரும் கால் வலி இடுப்புவலி போன்றவற்றால் சிரமப்படுவார்கள். இதற்காக முருங்கக்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



இருள் நீங்கி வாழ்வில் ஒளி பரவ அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!
[Thursday 2024-10-31 17:00]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எமது வாசகர்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் மனிதன் வலைத்தளம் பெருமகிழ்ச்சி அடைகிறது. தீபாவளி பண்டிகையானது, அனைவரது அபிலாசைகளை நிறைவேற்றி சிறந்த ஒரு எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாகும்.


Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா