Untitled Document
April 26, 2025 [GMT]
ஆரோக்கியத்தை அள்ளிக்கொடுக்கும் கறிவேப்பிலை சட்னி!
[Wednesday 2025-04-23 18:00]

இந்திய சமையலில் கறிவேப்பிலை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து விடுகின்றது. ஆனால் குழம்புகளில் போடும் கறிவேப்பிலையை பெரும்பாலானவர்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள். கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் காணப்படுபகின்றது. எனவே குழம்பில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

இந்திய சமையலில் கறிவேப்பிலை தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்து விடுகின்றது. ஆனால் குழம்புகளில் போடும் கறிவேப்பிலையை பெரும்பாலானவர்கள் தூக்கியெறிந்துவிடுவார்கள். கறிவேப்பிலையில் நிறைய உயிர்ச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் காணப்படுபகின்றது. எனவே குழம்பில் மிதக்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஆகாரத்துடன் அதையும் சேர்த்து மென்று விழுங்கிவிட வேண்டும்.

  

கறிவேப்பிலையின் சத்துக்களில் ஏ, பி, சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் உள்ளன. கறிவேப்பிலை பார்வையை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அவை கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் நல்ல மூலமாகும், எலும்பு ஆரோக்கியம், இரத்த ஓட்டம் மற்றும் பலவற்றிற்கு அவசியம்.

கூடுதலாக, கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து பாதுகாப்பதுடன் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும், கறிவேப்பிலையை கொண்டு எவ்வாறு நாவூரும் சுவையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 1/2 மேசைக்கரண்டி

வரமிளகாய் - 8

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி

பூண்டு - 4- பல்

சின்ன வெங்காயம் - 15

கறிவேப்பிலை - 1 கைப்பிடி

சின்ன மூடி தேங்காய் - 1 மூடி

உப்பு - சுவைக்கேற்ப

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

தாளிப்பதற்கு தேவையானவை

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கடுகு - 1தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

வரமிளகாய் - 1

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதில் வரமிளகாய், புளி மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் வறுத்த பொருட்களை ஒரு தட்டில் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெயில் பூண்டு பற்களை தட்டிப் போட்டு, அத்துடன் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்நிறமான வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி அதனுடன் துருவிய 1 மூடி தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வதக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து பெடித்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்பு வறுத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையையும் அதனுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரப்பான பதத்தில் அரைத்து அதனை ஒரு கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.

கடைசியில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த கறிவேப்பிலை சட்னி தயார்.

  
   Bookmark and Share Seithy.com



மயோனெய்ஸ் சாப்பிடுவது பாதுகாப்பா?
[Friday 2025-04-25 18:00]

ஷவர்மா, சமோசா, மோமோஸ், சிக்கன் வறுவல் ஆகியவற்றுடன் தொட்டு சாப்பிடும் மயோனைஸ் வெள்ளை நிற பசை போல் காட்சியளிக்கும். மயோனைஸ் பச்சை முட்டை, காய்கறி எண்ணெய், வினீகர் மற்றும் சில பொருட்களுடன் சேர்த்து தயாரிக்கப்படுவதால் இது உடலுக்கு ஆரோக்கிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனை பலரும் நமக்கு அறிவுறுத்திருப்பார்கள்.



நாவூரும் சுவையில் சில்லி பன்னீர்!
[Thursday 2025-04-24 17:00]

பன்னீரில் அதிகளவில் கால்சியமும், புரதச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதைத்தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றது. இதில் செலினியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நினைவாற்றல் இழப்பை கட்டுப்படுத்த இதிலுள்ள பொட்டாசியம் பெரிதும் துணைப்புரிகின்றது. செலினியம் கருவுறாமை பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் கால்சியம் அதிகளவு காணப்படுவதால் இது பற்கள் மட்டும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. பொதுவாக பன்னீர் சாப்பிடுவது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும் . பன்னீரை பொரித்தோ அல்லது மசாலா செய்தோ சாப்பிடுவது வழக்கம். சற்று வித்தியாசமாக நாவூரும் சுவையில் சில்லி பன்னீர் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



அசைவ பிரியர்களின் ஆட்டு ரத்தப்பொரியல்!
[Tuesday 2025-04-22 19:00]

அசைவ பிரியர்கள் என்றாலே அவர்களுக்கு ஆட்டு இறைச்சி முதல் ரத்தம் வரை அனைத்தையும் சாப்பிடுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் மட்டனை விரும்பி சாப்பிடுபவர்களில் ஆட்டுரத்த பொரியலை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சில பிரச்சனையும் வரக்கூடும். அது என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முந்திரி-பாதாம் ஊறுகாய்!
[Monday 2025-04-21 18:00]

பொதுவாகவே உணவின் சுவையை அட்டகாசமாக மாற்றுவதில் ஊறுகாய் வகைகள் முக்கிய இடம் வகிக்கின்றது. ஊறுகாய் வைத்து சாப்பிட்டால் சுமாரான உணவு கூட சூப்பராக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. பெரும்பாலும் மாங்காய், எலுமிச்சை, பூண்டு, நெல்லிக்காய், நாரதங்காய், மாவடு, ஏன் அன்னாசியில் கூட ஊறுகாய் சாப்பிட்டிருப்போம். ஆனால் நம்மில் பலருக்கும் முந்திரி-பாதாம் ஊறுகாய் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. மொறுமொறுப்புடன் மசாலாக்களின் காரமும் கலந்து ஆரோக்கிய பலன்களையும் அள்ளிக்கொடுக்கும். முந்திரி-பாதாம் ஊறுகாய் எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சிக்கன் குழம்பு!
[Sunday 2025-04-20 16:00]

பொதுவாகவே ஞாயிற்று கிழமை பெரும்பாலானவர்களுக்கு விடுமுறை என்பதால், நாவூக்கு ருசியாக சமைத்து ஆறுதலாக சாப்பிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என பலரும் நினைப்பார்கள். அந்த வகையில் இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக பொள்ளாச்சி பாணியில் அசத்தல் சுவையில் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



ஐயர் வீட்டு பாணியில் அசத்தல் சுவையில் மோர் குழம்பு!
[Saturday 2025-04-19 17:00]

கோடை காலம் ஆரம்பித்துவிட்டால், சூழல் வெப்பநிலை மட்டுமன்றி உடல் வெப்பநிலையும் வெகுவாக அதிகரித்து பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறிப்பாக கோடையில் அதிக வியர்வையால் நமது உடலில் நீர்ச்சத்துக்கள் குறைந்துவிடும். அதனை ஈடு செய்யும் அளவுக்கு நீரேற்றமான உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. அந்த வகையில் கோடையில் உடலை குளிர்மையாக வைத்துக்கொள்வதுடன் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ளும் மோர் குழம்பை ஐயர் வீட்டு பாணியில் எவ்வாறு அசத்தல் சுவையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



வீட்டில் அப்பளம் இருக்கா? அப்போ இந்த அசத்தல் குழம்பு செய்து பாருங்க!
[Friday 2025-04-18 16:00]

பொதுவாக வீட்டில் எல்லா நேரமும் காய்கறிகள் இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி சில சமயம் காய்கறி இல்லை என்றால் கொஞ்சமும் யோசிக்காமல் அப்பள குழம்பை செய்யலாம். வீட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் மிகவும் எளிமையான முறையில் எவ்வாறு அப்பள குழம்பு செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.



இலங்கையின் காரசாரமான அரைத்த மசாலா நண்டு குழம்பு!
[Wednesday 2025-04-16 18:00]

நண்டு என்றால் யாருக்குதான் பிடிக்காது. அதிலும் சளியை உடலில் இருந்து எடுக்கும் திறமை இந்த நண்டு குழம்பிற்கு உள்ளது. அந்த அளவிற்கு இதில் போடப்படும் மசாலா மிகவும் முக்கியமாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் இலங்கையை போல வேறு எங்கேயும் செய்திடாத சுவையில் காரசாரமான அரைத்த மசாலா நண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்ற ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.



செரிமான பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் இஞ்சி சட்னி!
[Tuesday 2025-04-15 19:00]

பொதுவாக சமையலில் வாசனைக்காகவும் சுவைக்காகவும் அதிகம் பயன்படுத்தப்படும் இஞ்சியில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது. வீக்கம் மற்றும் வலியைக் குறைப்பதில் இருந்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துவது வரை, இஞ்சி பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.



வேர்க்கடலை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்குமா?
[Monday 2025-04-14 18:00]

வேர்க்கடலை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை குறைப்பதில் ஆரோக்கியமான தேர்வாக நட்ஸ் வகைகள் காணப்படும் நிலையில், முந்திரி பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் வேர்க்கடலை ஆகியவை கொழுப்பின் உள்ளடக்கம் மக்களை சில சமயங்களில் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.



தர்பூசணி பழத்தில் பரோட்டா!
[Sunday 2025-04-13 18:00]

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் புது வகையான பரோட்டாவாக தர்பூசணி பரோட்டா அறிமுகமாகியுள்ள நிலையில், இந்த உணவு குறித்து பாதுகாப்பு துறை கூறிய விடயத்தை தெரிந்து கொள்வோம். பொதுமாக மதுரை என்றாலே கோவில் நகரம் என்றும் தூங்கா நகரம் என்றும் கூறப்படுகின்றது. இதற்கு அடுத்து உணவுகளுக்கு மிகவும் பிரபலமாகவும் இருக்கின்றது. இங்குள்ள ஜிகர்தண்டா, பன் பரோட்டா என பல வகையான உணவுகள் பிரபலமாக இருக்கின்றது. பரோட்டா வகையில் அதிகமாக இருந்தாலும் தற்போது தர்பூசணி பரோட்டா என்பதையும் செய்து அசத்துகின்றனர்.



வேப்பிலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் வராமல் தடுக்க முடியுமா?
[Saturday 2025-04-12 19:00]

வேப்பிலை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் முடியுமா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான நபர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு மரபணு, உடல் பருமன் என பல காரணங்களால் இந்நோய் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது. இந்நோயை முழுவதுமாக குணப்படுத்துவதற்கு எந்தவொரு வழிமுறையும் இல்லாத நிலையில், கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மருந்துகள் உதவி செய்கின்றது.



ஆண்களே உங்களை இளமையாக வைத்துக்கொள்ள முக்கியமான குறிப்பு!
[Friday 2025-04-11 18:00]

பரபரப்பான வாழ்க்கை முறையில் சிக்கிக் கொண்டிருப்பவர்கள் பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகம். எப்போதும் வேலை, ஓட்டம், பணம் என அவர்களின் வாழ்க்கையில் நிலையாக நின்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவே நேரம் இருக்காது. இத்தகைய சூழலில் தங்களை அழகாக வைத்துக் கொள்ள தனியாக நேரம் ஒதுக்குவார்களா என்ன?. ஆண்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்காது. இருப்பினும் இந்த வழிமுறைகளை பின்பற்றினால் ஆண்கள் தங்களை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளலாம்.



'வைட்டமின் டி' நிறைந்த மத்தி மீன் குழம்பு!
[Thursday 2025-04-10 19:00]

பொதுவாகவே அசைவ பிரியவர்களுக்கு மீன் குழம்பின் மீது ஒரு தனி பிரியம் இருக்கும். அதுவும் கிராமத்து பாணியில் மசாலாக்களை அரைத்து வைத்த மீன் குழம்பு என்றால், சொல்லவே வேண்டாம். குறிப்பாக மத்தி மீன், தமிழர்களின் பாரம்பரிய உணவில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த மீனில் சுமார் 270 IU அளவுக்கு வைட்டமின் டி நிறைந்து காணப்படுகின்றது. மத்தி மீன் பார்க்கத்தான் மிகச்சிறியது. ஆனால் இதிலுள்ள சத்துக்களும் சுவையும் வேறு எந்த மீனிலும் கிடைக்காது.



நீரிழிவு நோயாளிகள் கரும்புச் சாறு குடிக்கலாமா?
[Wednesday 2025-04-09 19:00]

தற்போது இருக்கும் வெயிலின் தாக்கம் காரணமாக மக்கள் அதிக நீர்ச்சத்து உணவுகளை விரும்புகிறார்கள். அதிலும் இப்போது எங்கு பார்த்தாலும் ரோட்டு கடைகளில் பொட்டி கடைகளில் குடிபான விற்பனையாளர்கள் அதிகம். அதில் மிகவும் பிரபலமானது இந்த கரும்பு சாறு தான். கோடை காலத்தில் கரும்பு சாறு நிறைய நற்பலனை தருகிறது. ஆனால் நீரிழிவு நோயாளிகளும் கரும்பு சாறு குடிக்கலாமா வேண்டாமா என்பது பலரும் அறியாத புதிர்.



பார்த்தாலே பசி எடுக்கும் பூண்டு ஊறுகாய்!
[Tuesday 2025-04-08 18:00]

பொதுவாகவே உணவிற்கு சுவை சேர்ப்பதில் ஊறுகாய்கள் எப்போதுமே முக்கிய இடத்தை பிடித்துவிடுகின்றது. எலுமிச்ரச ஊறுகாய், அன்னாசி ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், நெல்லிக்காய் ஊறுகாய், என பல வகைகளில் ஊறுகாய் காணப்படுகின்றது. அந்த வகையில் ஊறுகாய் பிரியர்கள் அதிகமாக விடும்பும் பூண்டு ஊறுகாயை எளிமையான முறையில் அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டை!
[Monday 2025-04-07 18:00]

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீடுகளில் மாலை நேரம் ஆனாலே ஏதாவது ஸ்நாக்ஸ் வாக்கிக்கொடுக்க சொல்லி நச்சரிப்பு ஆரம்பித்துவிடும். அப்படி கடைகளில் வாங்கிக்கொடுக்கும் ஸ்நாக்ஸ் எந்தளவுக்கு குழந்தைகளுக்கு ஆரேதக்கியமானது என்பதும், அது சுகாதாரமாக முறையில் செய்யப்பட்டதா என்பதும் கேள்விக்குறியே. இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க வீட்டிலேயே செய்யக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பழ கொழுக்கட்டையின் எளிமையான படிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.



காயங்களை கட்டி வைக்கலாமா? - பாட்டி வைத்தியத்தில் தீர்வு!
[Sunday 2025-04-06 16:00]

வழக்கமாக நமது உடலில் ஏதாவது காயங்கள் ஏற்பட்டால், உடனே அதற்கு மருந்து போட்டு கட்டி விடுவார்கள். இது சரியா? தவறா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் தொற்றுக்கள் உள்ளே செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதுவும் மேல் புறம் தோலில் இருப்பதால் அடுத்த தோலுக்கு செல்லும் முன்னர் ஆற்ற முயற்சிகள் செய்வார்கள். மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் என மூன்று அமைப்புக்கள் உள்ளன.



தினசரி புரத தேவையை பூர்த்தி செய்யும் பன்னீர் கிரேவி!
[Saturday 2025-04-05 16:00]

தினசரி பால் குடித்து வந்தால் அது உங்கள் உடலுக்கு தேவையான புரதச்சத்தை அளிக்கும். அதே போல் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரும் புரதத்தின் சிறந்த மூலமாக பார்க்கப்படுகின்றது. மேலும் இதில் நிறைந்துள்ள கால்சியம், எலும்புகளை வலுவாக்குவதுடன் பற்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. உடல் எடையை கட்டுகுள் வைக்க வேண்டும் என்று போராடுவர்களுக்கு பன்னீர் சிறந்த தெரிவாக இருக்கும்.



இறந்த செல்களை ஒரே தடவையில் நீக்கும் ஸ்க்ரப்!
[Thursday 2025-04-03 19:00]

பொதுவாக நம்முடைய சருமம் பல ஆயிரக்கணக்கான செல்களால் உருவாக்கபட்டது. அந்த செல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் உயிருடன் இருக்கும். அதன் பின்னர் படிபடியாக இறந்து விடும். இறந்த இந்த செல்களை நாம் முறையாக நீக்காவிட்டால் அது அப்படியே சருமத்தில் தங்கி, ஒரு வித கருமையை உண்டு பண்ணும். இதன் காரணமாக சிலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதனை ஸ்கிரப் மூலம் இல்லாமலாக்குகிறார்கள்.


Karan Remax-2010
Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா