Untitled Document
June 22, 2026 [GMT]
சிக்கன் சாப்பிட்டதும் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாதுனு தெரியுமா?
[Monday 2026-06-22 16:00]

சிக்கன் சாப்பிட்ட பின்பு எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிக்கன் தான். சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா என பல வகைகளில் செய்து அசத்துவார்கள். இவ்வாறு விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும், சில நேரத்தில் உடல்நல பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதாவது சிக்கனை சாப்பிட்ட பின்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சிக்கன் சாப்பிட்ட பின்பு எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சிக்கன் தான். சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா என பல வகைகளில் செய்து அசத்துவார்கள். இவ்வாறு விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும், சில நேரத்தில் உடல்நல பிரச்சனையை ஏற்படுத்திவிடும். அதாவது சிக்கனை சாப்பிட்ட பின்பு சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

  

சிக்கனை சாப்பிட்டு மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனையை ஏற்படுத்துவதுடன், புரதச்சத்து முழுமையாக கிடைக்காமலும் போய்விடும்.

சிக்கன் சாப்பிட்ட பின்பு உடனே இனிப்பு பலகாரம் சாப்பிடுவது கூடாது. ஏனெனில் சிக்கன் சாப்பிடுவதற்கு முன்பு இனிப்பு பலகாரத்தின் சர்க்கரை வயிற்றிலுள்ள இடத்தினை அடைத்து மந்தமாக்கிவிடும். இதனால் உடல்சோர்வு பிரச்சனை ஏற்படும்.

மேலும் டீ மற்றும் காபி போன்றவற்றினை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதிலுள்ள டானின் இரும்புச்சத்தை உடல் ஏற்பதற்கு தடைசெய்யுமாம்.

ஆரஞ்சு, எலுமிச்சை, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவது கூடாது. ஏனெனில் சிக்கன் செரிமானம் ஆவதற்கு தாமதமாகும் நிலையில், பழங்கள் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.

சிக்கன் சாப்பிட்ட உடன் பால், தயிர் மற்றும் மோர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் கோழியில் உள்ள புரதம் மற்றும் பாலில் உள்ள புரதம் செரிமானம் ஆவதற்கு அதிகமான நேரம் எடுப்பதுடன், வயிறு உப்புசம், வாயு பிரச்சனை, வயிறு வலி ஏற்படும்.

சிக்கன் சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து சீரகம் அல்லது பெருஞ்சீரகம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் செரிமானம் மேம்படும்.

இனிப்பு சாப்பிட வேண்டும் என்றால் சிறிய துண்டு வெல்லம் சாப்பிடலாம். செரிமான அமிலத்தை தூண்டி ஜீரணத்தை எளிதாக்கும்.

ஒருமணி நேரம் கழித்து வாழைப்பழம் அல்லது பப்பாளி போன்றவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.

  
   Bookmark and Share Seithy.com



வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடித்தால் என்ன நன்மை?
[Sunday 2026-06-21 17:00]

காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடித்தால் உடல் நலத்திற்கு மிகவும் நன்மை தரும் என்று பல ஆயுயள்வேத மருத்துவங்கள் கூறுகின்றன. மஞ்சள் என்பது உணவின் சுவையையும் நிறத்தையும் மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் ஒரு சமையல் மசாலாப் பொருளாகும். இது பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் தண்ணீர் குடிப்பதன் நன்மைகளை பதிவில் பார்க்கலாம்.



தொப்புளில் எண்ணெய் தடவுவது உடல் எடை குறைக்க உதவுமா?
[Saturday 2026-06-20 15:00]

தொப்புளில் எண்ணெய் தடவுவதன் மூலம் உடல் எடையைக் குறைத்து, உடலை மெலிதாக்கலாம் என்று சமூக வலைத்ள பக்கத்தில் செய்தி ஒன்று பரவுகிறது. சமூக ஊடகங்களில் உடல்நலம், உடற்பயிற்சி மற்றும் உடல் எடை குறைப்பு பற்றிய லட்சக்கணக்கான வீடியோக்களை நாம் பார்க்கலாம். இவை பெரும்பாலும் நம்ப தகுந்த காணொளிகள் போலவே இருக்கும். இதனால் மக்கள் இவற்றை உண்மை என நம்பி அதை பின்பற்றவும் ஆரம்பிக்கின்றனர்.



கறி சுவையை மிஞ்சும் பலாக்காய் கறி!
[Friday 2026-06-19 16:00]

சைவ கறிகளில் அசைவததின் சுவையை அப்படியே கொடுப்பது பலாக்காய் கறி தான். இதை சரியாக சமைத்தால் ​ எந்தவொரு அசைவ அல்லது சைவக் குழம்பையும் மிஞ்சும். இன்று, பலாப்பழக் குழம்புக்கான ஒரு தனித்துவமான செய்முறையை பதிவில் விரிவாக பார்க்கலாம். இந்த ரெசிபி செய்ய மிகவும் எளிது.



மாம்பழம் சாப்பிட்ட உடன் சாப்பிடக்கூடாத உணவுகள்!
[Thursday 2026-06-18 15:00]

மாம்பழம் சாப்பிட்டதும் சாப்பிடக்கூடாத உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மாம்பழம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாம்பழ சீசனில் மட்டும் தான் மாம்பழத்தினை சாப்பிட முடிகின்றது. மற்ற நாட்களில் மாம்பழம் அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. மாம்பழ சீசனின் போது ஊறுகாய், இனிப்பு பச்சடி, ஜாம், ஜுஸ் என பல வகைகளில் செய்து சேமித்து வைத்துவிடுகின்றனர்.



நாக்கில் எச்சில் ஊற வைக்கும் மீன் குருமா!
[Wednesday 2026-06-17 16:00]

மீன் சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பல மீன் ரெசிபிகள் நமக்கு தெரிந்திருக்கும். எனவே அனைவரது வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறையாவது மீன் வாங்கி சமைப்பது வழக்கம். அசைவம் என்றால் மீனுக்கு இடமிருக்கும். பலரும் மீன் வாங்கினாலே பொதுவாக குழம்பு, வறுவல் என செய்வது வழக்கம். ஆனால் நீங்கள் எப்போதாவது மீன் வைத்து குருமா செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா. இந்த பதிவில் சொன்னதை போல மீன் குருமா செய்து சாப்பிட்டால் வீட்டில் சாதம் கொஞ்சம் கூட மிஞ்சாது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.



கிராமத்து ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு!
[Tuesday 2026-06-16 17:00]

கோழியில் பிராய்லர் மற்றும் நாட்டுக்கோழி என இரண்டு வகை உள்ளன. நகரங்களில் பிராய்லர் அதிகம் கிடைத்தாலும், நாட்டுக்கோழியில் அதிக புரதம், குறைந்த கொழுப்பு மற்றும் தனித்துவமான இயற்கை சுவை உள்ளது. அதனால் பலரும் நாட்டுக்கோழியை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதைக் கொண்டு செய்யப்படும் குழம்பு மிக ருசியானது. அந்த வகையில் நாட்டுக்கோழி குழம்பு கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.



வயிறு, தொடை, இடுப்பு கொழுப்பு கரைக்கணுமா?
[Monday 2026-06-15 16:00]

உடல் பருமன் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. வயிறு, தொடைகள் மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பு கரைக்கும் ஒரு சிறந்த தேனீர் பற்றி பார்க்கலாம். இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை, ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, உடல் எடை அதிகரிப்பு ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது.



மாதுளை டீ குடித்தால் இவ்வுளவு நன்மைகளா?
[Monday 2026-06-15 07:00]

மாதுளை டீ குடித்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ள நிலையில் இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது. மாதுளை பழத்தில் வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்றவை உள்ள நிலையில் இவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு வீக்கத்தை குறைத்து இதய நலனை பாதுகாக்கிறது.



பிளாக் காபி குடிக்க சரியான நேரம் எது?
[Thursday 2026-06-11 15:00]

சிலர் தங்கள் காலைப் பொழுதை ஒரு கப் பிளாக் காபியுடன் தொடங்குகிறார்கள். ஆனால் இதை குடிப்பதற்கான சிறந்த நேரம் என்னவென்பதை பதிவில் பார்க்கலாம். நம்மில் பலர் நமது நாளை பிளாக் காபியுடன் தொடங்குகிறோம். சிலர் இதை உடல் எடை குறைப்பிற்கான ஒரு சிறந்த பானமாகக் கருதி, ஒரு நாளைக்கு 3-4 கோப்பைகள் அருந்துகின்றனர். மற்றவர்கள் அலுவலகத்தில் ஏற்படும் தூக்கக் கலக்கம் மற்றும் மந்தநிலையைப் போக்க இதை குடிக்கின்றனர்.



உடம்பு இரும்பு மாதிரி இருக்க எள்ளு பொடி சாதம்!
[Wednesday 2026-06-10 16:00]

சத்துக்கள் அதிகம் கொண்ட எள்ளுப் பொடி சாதம் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அவர்களின் மதிய உணவிற்கு என்ன சாதம் செய்து கொடுப்பது என்ற யோசனை பெரும்பாலான பெற்றோர்களுக்கு இருக்கும். கலவை சாதத்தினை மாற்றி மாற்றி கொடுத்து வருவார்கள். அதில் ஒரு சாதத்தினை தான் தற்போது தெரிந்து கொள்ள போகின்றோம்.



தினமும் ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா?
[Tuesday 2026-06-09 08:00]

அரிசி அல்லது சிறுதானியங்களை அதிக தண்ணீரில் வேகவைத்து, களிம்பு பதத்திற்கு தயாரிக்கப்படும் ஆரோக்கியமான மற்றும் எளிதில் செரிமானமாகும் பாரம்பரிய உணவு தான் கஞ்சி. இது இந்திய வீடுகளில் ஒரு பொதுவான காலை உணவு வகையாகும். அந்த வகையில் ஓட்ஸ் வைத்து கஞ்சி செய்தல் தற்போது வழக்கமாகி விட்டது. இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்த வகையில் தினமும் ஓட்ஸ் கஞ்சியை சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மை என்பதை பார்க்கலாம்.



ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?
[Monday 2026-06-08 16:00]

தினமும் சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடம்பில் நடைபெறும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உணவுமுறை என்பது பலருக்கும் வித்தியாசமாக மாறியுள்ளது. அதாவது எண்ணெய்யில் பொரித்த உணவுகள், ஜங்க் புட், ஃபாஸ்ட் புட் உணவுகள் இவற்றினை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் இவை ரத்த நாளங்களில் கொழுப்பை படிய வைத்து இதயத்திற்கு செல்லும் ரத்தத்தினை தடைசெய்கின்றது.



அதிக சத்துக்கள் கொண்ட பாசா மீன்!
[Sunday 2026-06-07 18:00]

பாசா மீன் சாப்பிடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். கடல் உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதிலும் மீன் பற்றி சொல்லவா வேண்டும். குழம்பு மீனை விட வறுத்த மீனை தான் அசைவ உணவு பிரியர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த பாசா மீனில் முள்ளே இருக்காது. இந்த மீனில் ஒரே ஒரு நடு முள் மட்டும் தான் இருக்கும். இதில் ஒமேகா-3, உயர்தர புரதங்கள், நிறைய ஆரோக்கியத்தை உள்ளடக்கியுள்ளது. இந்த மீனானது பெரியோர் முதல் சிறியோர் வரை விரும்பி சாப்பிடும் ஒரு மீன்.



சத்துக்கள் நிறைந்த கருப்பு கவுனி அரிசி அல்வா!
[Saturday 2026-06-06 15:00]

செட்டிநாடு ஸ்பெஷலாக இருக்கும் கருப்பு கவுனி அரிசி வைத்து செய்யப்படும் அல்வா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா.. ஈசியா டக்குன்னு வீட்டில் செய்யலாம். கருப்பு கவுனி அரிசியோட டேஸட்டும் சூப்பரா இருக்கும். அதோட ஊட்டச்சத்தும் உடலுக்கு கிடைக்கும். 5 நிமிடத்தில் டக்குன்னு எப்படி சமைக்கிறதுனு வாங்க சொல்லுறேன்.



எடையை குறைக்கவும், முடி கருமையையும் தரும் பூண்டு தொக்கு!
[Friday 2026-06-05 16:00]

சுவையான பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் விரிவாக காணலாம். பொதுவாக தென்னிந்திய மக்களின் காலை மற்றும் இரவு உணவு என்றால் அது இட்லி மற்றும் தோசையாகவே இருக்கும். இந்த உணவுகளுக்கு விதவிதமான சட்னி செய்து சாப்பிடுவார்கள். சில தருணங்களில் சாம்பார் வைப்பதும் உண்டு. இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பூண்டு தொக்கு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



"இந்த எண்ணெய்களில் சமைக்காதீங்க" - கொழுப்பு வேகமாக உடலில் அதிகரிக்குமாம்!
[Thursday 2026-06-04 17:00]

பதிவில் கூறப்படும் சமையல் எண்ணெய்கள் உண்மையில் சமையலுக்கு பயன்படுத்தக்கூடாதவையாகும். இதை பயன்படுத்தினால் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தற்போது மக்கள் தங்கள் உடல்நலத்தில் மிகவும் மோசமாக நடந்துகொள்கிறார்கள். இதில் பல விடயங்களை மக்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்ற மறக்கிறார்கள். அந்த வகையில் நாம் சமைக்கும் உணவில் பயன்படுத்தும் எண்ணையில் மிக கவனமாக இருக்க வேண்டும்.



காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை!
[Wednesday 2026-06-03 16:00]

தோசை' என்ற வார்த்தையைக் கேட்டாலே, அரிசி மற்றும் உளுத்தம் பருப்பால் செய்யப்படும் பாரம்பரிய தோசைதான் நினைவுக்கு வரும். ஆனால், நீங்கள் எப்போதாவது பலாப்பழ தோசையை சாப்பிட்டு இருக்கீங்களா?தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவின் மங்களூர் பகுதியில் செய்யப்படும் இந்தத் தனித்துவமான தோசை, சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்தது. எனவே இதை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.



உலகில் விலை உயர்ந்த கோழி இறைச்சி!
[Tuesday 2026-06-02 16:00]

உலகில் லட்சங்களில் விற்கப்படும் கோழி இறைச்சவி இது தான். இது அதிக விலைக்கு விற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. உலகில் மிகவும் எளிய விலையில் கிடைப்பது கோழி இறைச்சி தான். சந்தைக்கு சென்றால் ஒரு கிலோ கோழி வாங்கி வருவோம் அதன் விலை ரூபா 200 ஆக இருக்கும். மற்றைய நாடுகளிலும் மற்ற இறைச்சிகளை விட கோழி இறைச்சி மிகவும் குறைவான விலையில் தான் கிடைக்கும். ஆனால் ஒரு விதமான கருப்பு நிற அரிய இனத்தை சேர்ந்த கோழி மிகவும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.



நீரிழிவு நோயாளிகள் ஏன் பாகற்காய் சாறு குடிக்க வேண்டும்?
[Monday 2026-06-01 16:00]

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய் சாறு குடிப்பது மிகவும் நல்லது எனப்படுகின்றது. இதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம். பாகற்காயில் பி-இன்சுலின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. இயற்கையாகக் காணப்படும் இந்த சேர்மம், நம் உடலில் உள்ள இன்சுலினைப் போலவே செயல்படுகிறது. இது அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க நேரடியாக உதவும் எனப்படுகின்றது. பாகற்காயில் சாரன்டின் மற்றும் வைசின் என்ற பதார்த்தம் உள்ளது. இதில் சாரன்டின் எனப்படும் சேர்மம் இரத்தச் சர்க்கரை அளவை சீராகக் குறைந்த மட்டத்தில் பராமரிக்க உதவுகிறது.



வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மை?
[Sunday 2026-05-31 15:00]

வெறும் வயிற்றில் கொத்தமல்லி நீர் குடித்தால் உடலுக்கு அதிக நன்மை கிடைக்கும். அதை விரிவாக பார்க்கலாம். உடல் எடையைக் குறைக்க விரும்பினால், கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பது நல்லது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. மேலும், இது பசியைக் கட்டுப்படுத்தும். காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும். கொத்தமல்லி நீர் செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி, செரிமான நொதிகளைத் தூண்டுகிறது.


Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா