Untitled Document
November 29, 2026 [GMT]
இதயம் முதல் மூளை வரை ஆரோக்கியம் தரும் மத்தி மீன் குழம்பு!
[Saturday 2026-11-28 16:00]

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அதிலும் பாரம்பரிய கிராமத்து முறையில், வீட்டிலேயே அரைத்த மசாலாக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மத்தி மீன் குழம்பின் சுவைக்கு அடிமையாகாத அசைவ பிரியர்களே கிடையாது. தனித்துவமான மணமும், காரசாரமான சுவையும் நிறைந்த இந்தக் குழம்பு, சாப்பாட்டின் சுவையை மேலும் அதிகரிக்கும். சுவைக்கு மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் சிறந்த உணவாக மத்தி மீன் விளங்குகிறது.

மீன் குழம்பு என்றாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறத் தொடங்கிவிடும். அதிலும் பாரம்பரிய கிராமத்து முறையில், வீட்டிலேயே அரைத்த மசாலாக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் மத்தி மீன் குழம்பின் சுவைக்கு அடிமையாகாத அசைவ பிரியர்களே கிடையாது. தனித்துவமான மணமும், காரசாரமான சுவையும் நிறைந்த இந்தக் குழம்பு, சாப்பாட்டின் சுவையை மேலும் அதிகரிக்கும். சுவைக்கு மட்டுமன்றி, உடலுக்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் சிறந்த உணவாக மத்தி மீன் விளங்குகிறது.

  

அளவில் சிறியதாக இருந்தாலும், ஊட்டச்சத்துக்களைப் பொறுத்தவரையில் மத்தி மீன் மிகவும் சிறப்பானது. இதில் வைட்டமின் D, வைட்டமின் B12, பொட்டாசியம், நியாசின், செலீனியம், அயோடின் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.

இவை எலும்புகளின் வலிமையைப் பேணவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மூளையின் இயல்பான செயல்பாட்டிற்கு ஆதரவளிக்கவும் உதவுகின்றன.

குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அதேவேளை, அதிக ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால் மத்தி மீனை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்த தேர்வாக இருக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மத்தி மீனில் அசத்தல் குழம்பு எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மத்தி மீன் – ½ கிலோ

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

வெந்தயம் – 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 3

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 2

மிளகாய்த்தூள் – ½ தேக்கரண்டி

மல்லித்தூள் – 3 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 கொத்து

அரைத்த தேங்காய் விழுது – 50 கிராம்

செய்முறை

முதலில் மத்தி மீனை நன்றாகச் சுத்தம் செய்து, தண்ணீரில் கழுவித் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடுகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும்.

பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். தொடர்ந்து நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை வதக்கவும்.

அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கும் வரை கிளறி வதக்க வேண்டும். இப்போது புளிக்கரைசலையும் அரைத்த தேங்காய் விழுதையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

இந்தக் கலவையை சுமார் 5 நிமிடங்கள் கொதிக்கவிட வேண்டும். குழம்பு நன்றாகக் கொதித்ததும் சுத்தம் செய்து வைத்துள்ள மத்தி மீனைச் சேர்க்கவும்.

மீன் உடையாமல் இருக்க மெதுவாக ஒருமுறை மட்டும் கிளறி, பாத்திரத்தை மூடி மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேகவிடவேண்டும்.

மீன் நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து, சிறிது நேரம் ஆறவிட்டால், அவ்வளவுதான் மணமும் சுவையும் நிறைந்த காரசாரமான கிராமத்து பாணி மத்தி மீன் குழம்பு தயார்.

  
   Bookmark and Share Seithy.com



நாவில் எச்சில் ஊற வைக்கும் பச்சை மாங்காய் தேங்காய் சட்னி!
[Friday 2026-11-27 16:00]

புளிப்புச் சுவை கொண்ட பச்சை மாங்காயையும், தேங்காயையும் சேர்த்து தயாரிக்கும் இந்தச் சட்னி மிகவும் சுவையாக இருக்கும். மாங்காயின் இயற்கையான புளிப்புச் சுவையும், தேங்காயின் இனிமையான மணமும் சுவையும் ஒன்றோடொன்று கலந்து, நாவில் நீர் ஊற வைக்கும் தனித்துவமான சுவையை வழங்குகின்றன. குறிப்பாக, இட்லி, தோசை, உப்புமா, பணியாரம் போன்ற காலை மற்றும் மாலை நேர உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது இதன் சுவை இன்னும் அற்புதமாக இருக்கும்.



கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி ப்ரை!
[Thursday 2026-11-26 16:00]

கிராமத்து ஸ்டைல் காரசாரமான நாட்டுக்கோழி ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றான நாட்டுக்கோழியில் ஏராளமான சத்துக்கள் உள்ளது. சாதாரண பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். பொதுவாக வீடுகளில் நாட்டுக்கோழி குழம்பு, சூப், கிரேவி இவ்வாறு செய்து சாப்பிட்டிருப்போம். தற்போது கிராமத்து ஸ்டைலில் நாட்டுக்கோழி ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



அசைவப் பிரியர்களையும் கவரும் உருளைக்கிழங்கு பட்டர் மசாலா!
[Wednesday 2026-11-25 15:00]

பொதுவாகவே சைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்கள் மட்டுமின்றி, அசைவ உணவுப் பிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமான காய்கறிகளில் உருளைக்கிழங்குக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இதன் தனித்துவமான சுவையும், எந்த வகையான மசாலாக்களுடனும் எளிதில் ஒன்றிணைந்து ருசியை அள்ளித்தரும் தன்மையும் இதற்கான முக்கியக் காரணங்களாகும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உருளைக்கிழங்கைக் கொண்டு ஏராளமான சுவையான உணவு வகைகளைத் தயாரிக்கலாம்.



வெங்காயம் தக்காளி இல்லாமல் வேர்க்கடலை கார குழம்பு!
[Tuesday 2026-11-24 16:00]

வெங்காயம், தக்காளி இல்லாமல் வேர்க்கடலையை வைத்து கார குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் மதிய உணவிற்கு குழம்பு வைப்பது தான் குடும்ப தலைவிகளுக்கு குழப்பத்தினை ஏற்படுத்துவதாக இருக்கின்றது. சாம்பார், குருமா, புளிக்குழம்பு என்று வைத்து சாப்பிட்டிருப்போம். சில வேலையில் கத்தரிக்காய் காரக்குழம்பு, வெங்காய காரக்குழம்பு செய்திருப்போம். ஆனால் இவற்றிற்கு வெங்காயம், தக்காளி கட்டாயம் சேர்த்து தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் சற்று வித்தியாசமான வெங்காயம், தக்காளி சேர்க்காமல் வேர்க்கடலை காரக்குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



கேரளா ஸ்டைலில் சிக்கன் வறுவல்!
[Monday 2026-11-23 16:00]

அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான பாலக்காடு சிக்கன் ப்ரை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் அசைவ பிரியர்கள் அதிகமாக விரும்பி உண்ணும் உணவாக சிக்கன் இருக்கின்றது. சிறு குழந்தைகளும் சிக்கனை விரும்பி சாப்பிடுகின்றனர். சிக்கனில் வறுவல், சிக்கன் 65, குழம்பு, சில்லி சிக்கன், சுக்கா என்று தான் நமது வீட்டில் செய்து சாப்பிடுவோம். ஆனால் பாலக்காடு ஸ்டைலில் சிக்கன் அவ்வளவாக நாம் சமைத்திருக்க மாட்டோம்.



ஞாயிறு ஸ்பெஷல்: கேரளாவின் பாரம்பரிய சுவையில் பாலக்காடு சிக்கன்!
[Sunday 2026-11-22 18:00]

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பல வீடுகளில் அசைவ விருந்து களைகட்டிவிடும். அதிலும், சிக்கன் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை மதிய உணவு முழுமையடையாது என்று நினைப்பவர்கள் ஏராளம். வாரம் முழுவதும் வேலை, பள்ளி எனப் பரபரப்பாக இயங்கும் குடும்பத்தினர், ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ஒன்றாக அமர்ந்து ருசித்து மகிழ்வது ஒரு சிறிய கொண்டாட்டமாகவே அமைந்துவிடுகிறது. அப்படியிருக்க, இந்த ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கிச் சமைக்கத் திட்டமிட்டுள்ளீர்களா?



கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம்!
[Saturday 2026-11-21 18:00]

கார்த்திகை தீபம் அன்றும் செய்யப்படும் ஸ்பெஷல் நெய் அப்பம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்த கொள்வோம். கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் இம்மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கின்றது. வீடு முழுவதும் அகல்விளக்கினை ஏற்றி இறைவனை வழிபடுவது வழக்கமாக இருக்கின்றது. மேலும் முருகப்பெருமானுக்கும், சிவபெருமானுக்கு பிடித்தமான இனிப்புகளை படையலாக வைத்து வழிபடுவார்கள். அவ்வாறான இனிப்புகளில் ஒன்று தான் நெய் அப்பம்.



ஈரமான தலையுடன் தூங்கும் பழக்கம் இருக்கா? - இந்த பாதிப்புகள் குறித்து ஜாக்கிரதை!
[Friday 2026-11-20 16:00]

தலைமுடியைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் பராமரிப்பதற்கு வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது தலைக்கு குளிப்பது அவசியம். ஆனால், தலைக்குக் குளித்த பிறகோ அல்லது மழையில் நனைந்த பிறகோ தலைமுடியைச் சரியாக உலர்த்தாமல் ஈரத்துடனேயே தூங்குவது பலரும் செய்யும் தவறுகளில் ஒன்றாகும். ஈரமான தலைமுடியுடன் தூங்குவதால் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுவதில்லை என்றாலும், தலைமுடி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.



பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதம்!
[Thursday 2026-11-19 16:00]

காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் எளிமையானதும்ஆரோக்கியமானதுமான இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை ஒரு முறை செய்து கொடுங்கள். இந்த தக்காளி சாதம் நீங்கள் வழக்கமாக சாப்பிடும் தக்காளி சாதம் போல இருக்காது. கொங்கு பகுதிகளில் அரிசி பருப்பு சாதம் எப்படி பிரபலமானதோ அதேபோல மதுரை சுற்றுவட்டாரத்தில் இந்த தக்காளி சாதம் மிகவும் பிரபலமானது. இந்த மதுரை ஸ்பெஷல் தக்காளி சாதத்தை எளிய படிமுறையில் விரைவாக எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



அமைதியான உயிர்க்கொல்லி” இதயத் தமனி நோய் குறித்து விழிப்புணர்வு தேவை — முன்கூட்டிய மருத்துவ மதிப்பீட்டையும் சிகிச்சையையும் வலியுறுத்தும் புலம்பெயர் தமிழர் செய்திகள்!
[Thursday 2026-11-19 07:00]

இதயத் தமனிகளில் படியும் கொழுப்புத் தகடுகள், நோயைக் கண்டறியும் பரிசோதனைகள், செலவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து தமிழ் குடும்பங்கள் அறிந்துகொள்ள வேண்டுகோள் நியூயோர்க், நவம்பர் 17, 2026 — “Good Morning America” நிகழ்ச்சியின் ஊடகவியலாளர் ஜியோ பெனிடெஸ், தாம் ஆரோக்கியமாக உணர்ந்தபோதும் 41 வயதில் இதயத் தமனி நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் இளம் வயதிலேயே இதய நோயால் உயிரிழந்தவர்கள் இருந்ததால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக மருத்துவ மதிப்பீட்டின்போது, இதயத் தமனிகளில் படிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ் குடும்பங்கள் தமது இதய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு புலம்பெயர் தமிழர் செய்திகள் கேட்டுக்கொள்கிறது.



கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல்!
[Tuesday 2026-11-17 16:00]

கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக அசைவ பிரியர்கள் கடல்வகை உணவுகளை விரும்பி சாப்பிடுகின்றனர். அதிலும் கடலில் கிடைக்கும் ஒவ்வொரு உணவுகளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமானதாகவே இருக்கின்றது. மீன் பொரியல், குழம்பு, புட்டு இவ்வாறு செய்து சாப்பிடும் நிலையில், தற்போது தேங்காய் எண்ணெய் மணத்துடன் கன்னியாகுமரி ஸ்பெஷல் மீன் அவியல் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



சிக்கன் வாங்கினால் ஒருமுறை மலபார் சிக்கன் பிரியாணி செய்து பாருங்க!
[Monday 2026-11-16 16:00]

கேரளா மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமான மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது பலரும் நள்ளிரவு நேரத்திலும் பிரியாணி சாப்பிடுகின்றனர். சிலர் மகிழ்ச்சியாக இருந்தாலும் பிரியாணி, பிரச்சனையில் மனம் கஷ்டமாக இருந்தாலும் பிரியாணி சாப்பிட்டு தன்னை மாற்றிக் கொள்கின்றனர். பிரியாணியில் பல வகைகளில் இருக்கின்றது. ஒவ்வொரு ஊரை மையப்படுத்தி பிரலமாகியுள்ள பிரியாணியில் மலபார் பிரியாணி பிரபலமாகி வருகின்றது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் பல இடங்களில் பிரபலமாகிவரும் மலபார் பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காஃபி குடிக்கிறீங்களா?
[Sunday 2026-11-15 15:00]

உடற்பயிற்சிக்கு முன்பு பிளாக் காபி குடிப்பதால் உடம்பிற்கு ஆரோக்கியமா? தீமையா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் உடற்பயிற்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கியமாக இருக்கின்றது. ஏனெனில் தற்போதைய சூழ்நிலையில் ஆரோக்கியமான சாப்பாடு இல்லாமல் உடல் எடை அதிகரிக்கும் பிரச்சனையில் பலரும் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும் தங்களது உடலை ஃபிட்டாக வைக்கவும் இன்று அதிகமாக ஆசைப்படுகின்றனர். உடல் எடை குறைப்பு, கட்டுக்கோப்பான உடல் இவற்றிற்கு உடற்பயிற்சி கட்டாயமாக இருக்கின்றது.



மீன் வறுவலை மிஞ்சும் கருணைக்கிழங்கு வறுவல்!
[Saturday 2026-11-14 16:00]

மீன் வறுவல் பக்குவத்தில் கருணைக்கிழங்கை எவ்வாறு வறுவல் செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டு சமையலில் மதிய உணவிற்கு சாம்பார், புளிக்குழம்பு, ரசம் என்று சமைப்பது வழக்கம். ஆனால் இதற்கு சைடு டிஷ்ஷாக பொரியல், கூட்டு ஏதாவது செய்வதும் வழக்கம். அந்த வகையில் மீன் வறுவலுக்கு இணையான சைவ வறுவல் செய்து சாப்பிடலாம். இந்த வறுவலுடன் சாதம் சாப்பிடும் போது அட்டகாசமாகவே இருக்கும். குழந்தைகளும் இந்த சைவ உணவை விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு கருணைக்கிழங்கு வைத்து செய்யும் வறுவல் தான் இதுவாகும்.



விருந்தில் முதலில் வெள்ளரிக்காய், கேரட் வைப்பது ஏன்?
[Friday 2026-11-13 16:00]

திருமண நிகழ்வில் பரிமாறப்படும் உணவு விருந்தில் வெள்ளரிக்காய், கேரட் இவற்றினை முதலில் கொடுப்பது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம். பொதுவாக சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணம் இவற்றிற்கு சென்றால், உணவு பரிமாறும் போது வாழை இலையில், வெள்ளரிக்காய், கேரட் துண்டுகளை வைப்பார்கள். இவ்வாறு எதற்காக வைக்கப்படுகின்றது என்பது அவ்வளவாக யாருக்கும் தெரிவதில்லை. ஆனால் சில இடங்களில் வெங்காயம், தக்காளி, எலுமிச்சை துண்டுகளும் வழங்கப்படுகின்றது.



தினமும் வெறும் வயிற்றில் டீ பருகுவது நல்லதா?
[Thursday 2026-11-12 18:00]

காலை வெறும் வயிற்றில் டீ பருகுவதால் உடலுக்கு ஆரோக்கியமா? அல்லது தீங்கா என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக காலை பொழுது பெரும்பாலான நபர்களுக்கு ஒரு கப் காபி அல்லது டீ இல்லாமல் தொடங்குவதில்லை. இதவ்வாறு டீ குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். மேலும் டீ பருகாமல் இருந்த அந்த நாளே சிலருக்கு மந்தமாக இருப்பதாகவும் நினைத்துக் கொண்டு இந்த பழக்கத்தினை தொடர்ந்து செய்து வருகின்றனர்.



இடுப்பு வலி, மூட்டு வலிக்கு உடனடி நிவாரணம்!
[Wednesday 2026-11-11 16:00]

உடம்பிற்கு ஆரோக்கியத்தினை அளிக்கும் சத்தான உளுந்தோரை சாதம் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக வீட்டில் கலவை சாதம் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் எலும்பு ஆரோக்கியத்தினை உடனடியாக பெற வேண்டும் என்றால் உளுந்தம் பருப்பு சாதம் மிகவும் அருமையான தெரிவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஏற்றதாக இருக்கும். கால்வலி, இடுப்பு வலி, மூட்டு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் இருக்கின்றது. கருப்பு உளுந்தை பயன்படுத்தி இந்த சாதத்தினை எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டீங்களா? - வயிறை சுத்தம் செய்யும் பானம் இதோ!
[Tuesday 2026-11-10 16:00]

தீபாவளி பலகாரங்களை அதிகமாக சாப்பிட்டுவிட்ட நிலையில், மறுநாள் வயிறை சுலபமாக சுத்தம் செய்யும் பானத்தினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தீபாவளி பண்டிகையில் அதிகமான உணவுகளை கணக்கில்லாமல் சாப்பிடுவதை பெரும்பாலான நபர்கள் வழக்கமாக வைத்துள்ள நிலையில், மறுநாள் உடல்நிலையைக் குறித்து கவலைபடவும் செய்கின்றனர். ஏனெனில் வயிறுக்கு அதிகமாக பல உணவுகளை சாப்பிட்ட பின்பு வயிறு உப்புசம், செரிமான கோளாறு, உடல் சோர்வு, உடல் கனமாக இருக்கும் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும்.



பாய்வீட்டு மட்டன் பிரியாணி செய்ய வேண்டுமா?
[Monday 2026-11-09 17:00]

மட்டன் பிரியாணி மணக்க மணக்க பாய்வீட்டு ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக பிரியாணி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இன்றைய காலத்தில் நள்ளிரவில் கூட பிரியாணி சாப்பிடுவதற்கு மக்கள் அலைமோதுகின்றனர். அந்த அளவிற்கு பிரியாணியின் சுவை மக்களை கவர்ந்துள்ளது. அதிலும் விடுமுறை தினம் என்றால் வீட்டில் கட்டாயம் அசைவ உணவாக தான் இருக்கும். அந்த அசைவ உணவு பிரியாணியாகத்தான் இருக்கும். அதிலும் இன்று தீபாவளி என்பதால் பெரும்பாலான வீடுகளில் பிரியாணி தான் செய்து சாப்பிடுவார்கள். மேலும் சாதாரணமாக பிரியாணியை விரும்பாமல் பாய்வீட்டு பிரியாணி என்றால் சற்று விரும்பும் கூட்டம் தனியாகவே இருக்கின்றது. தற்போது பாய்வீட்டு பிரியாணி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.



குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம்: அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
[Sunday 2026-11-08 16:00]

இனிப்பு வகைகளில் ஒன்றாக இருக்கும் குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் குறித்தும் எவ்வாறு அந்த பெயர் வந்தது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக குலாப் ஜாமூன் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு பெரும்பாலான வீடுகளில் செய்யும் முக்கியமான இனிப்பாகவும் இந்த குலாப் ஜாமூன் இருக்கின்றது. அவ்வாறு பண்டிகை காலங்களில் செய்யப்படும் குலாப் ஜாமூனுக்கு ஒரு கிராமம் பிரபலமாகியுள்ளது. பலரும் அறிந்திடாத கிராமம் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா