Untitled Document
June 30, 2024 [GMT]
ரஜினியுடன் மோதும் சூர்யா!
[Friday 2024-06-28 06:00]

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பாட்னி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வரலாற்று காட்சிகள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என இரண்டுமே இருக்கும் வகையில் கதை இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் படம் கங்குவா. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பாட்னி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் வரலாற்று காட்சிகள் மட்டுமின்றி தற்போதைய காலகட்டத்தில் நடக்கும் காட்சிகள் என இரண்டுமே இருக்கும் வகையில் கதை இருப்பதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.

  

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் உடன் சூர்யா மோதுவதால் பாக்ஸ் ஆபிசில் ஜெயிக்கப்போவது யார் என்பது பற்றி எதிர்பார்ப்பு இப்போதே எழுந்திருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



தனது அப்பா முரளியின் கடைசி தருணம் குறித்து பேசிய அதர்வா!
[Sunday 2024-06-30 07:00]

தென்னிந்திய சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய பலர் இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் சினிமா பக்கமே வரவில்லை. அப்படி ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் முரளி, இதயம் முரளி என்று தான் எல்லோரும் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் கருப்பு வைரமாக இருந்த முரளி கடந்த 2010ம் ஆண்டு திடீரென நெஞ்சுவலி எற்பட்டு உயிரிழந்தார். ஷோபா என்பவரை திருமணம் செய்த முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும், காவ்யா என்ற மகளும் உள்ளனர்.



இந்தியன் 3 யில் இப்படியொரு விஷயம் இருக்கா?
[Sunday 2024-06-30 07:00]

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 வருகிற ஜூலை 12 -ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவுக்கு கடந்து இருக்கிறது.



கல்கி படத்தின் இரண்டு நாள் வசூல்!
[Saturday 2024-06-29 16:00]

கல்கி 2898 AD திரைப்படம் முதல் நாளே மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. உலகளவில் ரூ. 191.5 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தனர். இதன்மூலம் முதல் நாளே ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படங்கள் லிஸ்டில் கல்கியும் இணைந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி 2, சாஹோ, ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களும் முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.



செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கவிருந்து கைவிடப்பட்ட திரைப்படம்!
[Saturday 2024-06-29 16:00]

நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை துவங்கி இன்று ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார் சந்தானம். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இங்கு நான் தான் கிங்கு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால், டிடி returns மற்றும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக டிடி returns 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் இருக்கிறது.



பொய்யான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர் மீது புகார்!
[Saturday 2024-06-29 16:00]

மலையாள இயக்குனர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில் கடந்த 22 பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். மலையாள ரசிகர்களை தாண்டி தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களும் படத்தை கொண்டாடி தீர்த்தனர்.



குட் பேட் அக்லீ 2nd லுக் 24 மணி நேரத்தில் செய்த பெரிய சாதனை!
[Saturday 2024-06-29 06:00]

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் குட் பேட் அக்லீ. இதன் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு தனது இன்னொரு படமான விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு சென்று இருக்கிறார். அதன் ஷூட்டிங் அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.



மகாராஜா ஒடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு!
[Saturday 2024-06-29 06:00]

நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன நிலையில் ரசிகர்கள் அதை கொண்டாடினார்கள். பாசிட்டிவ் விமர்சனங்களால் படம் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. 10 நாட்களில் 81.8 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார். விரைவில் இந்த படம் 100 கோடி வசூலை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்திற்கு பின் இப்படி ஒரு காரணமா?
[Friday 2024-06-28 19:00]

சில மாதங்களுக்கு முன்னர் ஜி வி பிரகாஷ், சைந்தவி இருவரின் விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பியது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளின் பிரிவு இப்போதும் கூட வருத்தத்தை கொடுக்கிறது. அந்த சூடு குறையும் முன்பே ஜெயம் ரவி தன் மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்ற செய்தி படுவேகமாக பரவி வருகிறது. முதலில் இது சாதாரண கிசுகிசுவாக தான் இருக்கும் என அனைவரும் நினைத்தனர்.



"மகாராஜா படத்தை பார்க்க மாட்டேன்" - பாடகி சின்மயி சொன்ன காரணம்!
[Friday 2024-06-28 19:00]

விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் கடந்த ஜூன் 14ம் தேதி ரிலீஸ் ஆனது. நல்ல விமர்சனங்கள் வந்ததால் படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதனால் பெரிய அளவில் வசூல் குவிந்தது. விஜய் சேதுபதி கெரியரில் இது பெரிய கம்பேக் படம் என பலரும் கூறி வருகின்றனர்.



நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு!
[Friday 2024-06-28 19:00]

நடிகர் வடிவேலு உடன் ஏராளமான காமெடி காட்சிகளில் நடித்த வெங்கல் ராவ் தற்போது உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருக்கிறார். அவரது கை மற்றும் கால் செயலிழந்து சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக வெங்கல் ராவ் வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு சிம்பு இரண்டு லட்சம் ருபாய், KPY பாலா 1 லட்சம் ருபாய், ஐஸ்வர்யா ராஜேஷ் 25 ஆயிரம் என உதவி செய்திருந்தனர்.



இந்தியன் 2 படத்தில் நடிக்க கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?
[Friday 2024-06-28 06:00]

90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது இந்தியன் திரைப்படம். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் 2019 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தாமதம் ஆகி தற்போது படம் வெளியாக இருக்கிறது.



நடிகர் வெங்கல்ராவுக்கு பணம் அனுப்பிய பிரபலம்!
[Thursday 2024-06-27 06:00]

பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆந்திராவில் அவரது சொந்த ஊரில் சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். கை, கால் விழுந்துவிட்டது என கூறி அவர் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு முதல் ஆளாக அவருக்கு 2 லட்சம் ரூபாயை உதவியாக கொடுத்து இருக்கிறார்.



அஜித் - விஜய் சேர்ந்து நடிக்க இருந்த படம்!
[Thursday 2024-06-27 06:00]

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். அவர்கள் சேர்ந்து நடிப்பார்களா என கடந்த பல வருடங்களாகவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் அவர்கள் கேரியரின் ஆரம்ப கட்டத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். ஆனால் ஒரு முக்கிய படத்தில் விஜய் - அஜித் நடிக்க இருந்து அது வேறு ஒரு நடிகருக்கு சென்று இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது.



த்ரிஷா, விஜய் இடையே நடப்பது என்ன?
[Wednesday 2024-06-26 16:00]

நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள புகைப்படத்தினால் சர்ச்சைகள் எழும்பியுள்ள நிலையில், மீண்டும் விஜய்யின் விவாகரத்து விடயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமாவில் தந்தை சந்திரசேகர் இயக்கிய வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக நடித்தார்.



உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகருக்கு சிம்பு செய்த உதவி!
[Wednesday 2024-06-26 16:00]

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நடிகர் வெங்கல் ராவ் 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் சண்டை கலைஞராக பணியாற்றி வந்தார். பின் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியவர் தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி காட்சிகள் நடித்துள்ளார். இதில் வடிவேலுவுடன் மட்டுமே 30 படங்களில் நடித்திருக்கிறார்.



வெட்ட வெளியில் உடை மாற்றிய நடிகை மீனா: ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்!
[Wednesday 2024-06-26 16:00]

காந்த கண்ணழகி லுக்கு விட்டு கேக்கு ஏற்றும்.. என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப தனது கண்ணழகால் பலரையும் கவர்ந்த நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து முத்து, எஜமான் போன்ற படங்களில் நடித்து அசத்திய இவர் தனது அபார நடிப்பால் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தார்.



நயன்தாரா முன்னணி நடிகையாக மாறிய கதை: பலரும் அறியாத ரகசியம்!
[Wednesday 2024-06-26 06:00]

வாய்ப்புகள் விஷயத்தைப் பொறுத்தவரை மற்ற நடிகைகளுக்கு வாய்ப்புகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கக் கூடியவர்தான் நடிகை நயன்தாரா. அவர் சினிமாவில் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டு இருக்கிறார் என்றால் அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் ஒன்று அவர் தேர்ந்தெடுக்கும் கதை. மற்றொன்று நல்ல கதையாக இருந்து வேறு நடிகை அதில் நடித்தால் அதில் கண்டிப்பாக இவர் நடிப்பதற்கான முயற்சிகளை எடுப்பார் என்று சில பேச்சுக்கள் உண்டு.



இந்தியன் 2 பிரம்மாண்ட ட்ரெய்லர் வெளியானது! Top News
[Wednesday 2024-06-26 06:00]

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்ட ட்ரைலெர் இதோ.. இது இரண்டாவது சுதந்திர போர்.. இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.



கை, கால்கள் செயலிழந்த நிலையில் பிரபல நடிகர்!
[Tuesday 2024-06-25 18:00]

தமிழ் சினிமாவில் கொமடி மற்றும் சண்டை காட்சிகளில் நடித்த பிரபல நடிகர் ஒருவர் கை மற்றும் கால் செயலிழந்து அவதிப்படும் நிலையில், உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் தான் காமெடி நடிகர் வெங்கல்ராவ். இவர் கடந்த மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.



அஜித்தை நேரில் சந்தித்தது குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்!
[Tuesday 2024-06-25 18:00]

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதை முடித்தபின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் இணைவார்.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா