Untitled Document
June 22, 2026 [GMT]
2 நாட்களில் வசூலில் மெகா ஹிட்டான 'எங்கள் தங்கம்' திரைப்படம்!
[Sunday 2026-06-21 17:00]

சமந்தா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 'மா இண்ட்டி பங்காரம்' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் வெளியானது. இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமந்தா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த 'மா இண்ட்டி பங்காரம்' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரைக்கு வந்தது. தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்பில் வெளியானது. இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  

கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், சமந்தாவின் கம்பேக் திரைப்படமாக ரசிகர்களால் 'எங்கள் தங்கம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் 2 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் 'எங்கள் தங்கம்' திரைப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இப்படம் 2 நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் மெகா ஹிட்டாகியுள்ளது. கண்டிப்பாக ரூ. 100 கோடியை தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



சேயோன் பட ஹீரோயின் தெலுங்கு நடிகர் உடன் காதலா?
[Monday 2026-06-22 16:00]

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மேலும் தமிழில் அவர் காந்தா படத்தில் நடித்து இருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.



வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்!
[Monday 2026-06-22 16:00]

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பான்-இந்தியன் ஸ்டாராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள திரைப்படம் 'எங்கள் தங்கம்'. இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தை சமந்தா தனது கணவருடன் இணைந்து தயாரித்துள்ளார். இப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து கவுதமி, ஸ்ரீமுகி ஆகியோர் நடித்துள்ளனர்.



நடிகர் விஜய் மிஸ் செய்த ஹிட் திரைப்படங்கள்!
[Monday 2026-06-22 16:00]

நடிகர் விஜய் பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடே கோலாகலமாக இருக்கும். இப்போது நடிகர் என்பதை தாண்டி தமிழக முதலமைச்சராக கெத்தாக வலம் வருகிறார். ஜுன் 22, இன்று படு கோலாகலமாக விஜய்யின் பிறந்தநாள் முன்னிட்டு பல நலத்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தினர் செய்து வருகிறார்கள். குழந்தை நட்சத்திரமாக தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படங்களில் நடித்து வந்தவர் அவரது இயக்கத்திலேயே ஹீரோவாகவும் என்ட்ரி கொடுத்தார்.



சீரியல் நடிகை வினுஷா தேவிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Monday 2026-06-22 07:00]

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் வினுஷா தேவி. அதற்க்கு பிறகு அவர் பிக் பாஸ் 7 ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். இருப்பினும் அந்த ஷோவில் அவரால் அதிகம் ஜொலிக்க முடியவில்லை. அதனால் நான்காவது வாரமே எலிமினேட் ஆகிவிட்டார்.



நீங்க சூர்யாவா, ரஜினியா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி!
[Monday 2026-06-22 07:00]

நடிகர் விஷ்ணு விஷால் கோலிவுட்டில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் நடிப்பில் அடுத்து கட்டா குஸ்தி 2 படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஜூலை 3ம் தேதி ரிலீஸ் ஆகும் அந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகளை விஷ்ணு விஷால் கொடுத்து வருகிறார். ஒரு பேட்டியில் தன்னிடம் ஒரு பிரபல இயக்குனர் திமிராக போனில் பேசியதாகும், அவருக்கு தான் உடனே பதிலடி கொடுத்ததாகவும் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.



24 நாட்களில் 'பிளாஸ்ட்' செய்துள்ள வசூல்!
[Sunday 2026-06-21 17:00]

அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவரும் திரைப்படங்கள் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயோத்தி, டூரிஸ்ட் பேமிலி, டாடா, போர் தொழில் போன்ற பல திரைப்படங்களை அறிமுக இயக்குநர்கள் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அந்த வரிசையில் கடந்த மாதம் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம்தான் பிளாஸ்ட். இப்படத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி நடித்திருக்கின்றனர்.



'பரிமளா & கோ' இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?
[Sunday 2026-06-21 17:00]

ஜெயராம், ஊர்வசி இணைந்து நடிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரிமளா & கோ. டார்க் காமெடி திரில்லர் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தில் சஞ்சனா, சாண்டி, அனந்திகா, மிஸ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FoxN இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



நடிகை கயாடு லோஹருக்கு என்னாச்சு? - அதிர்ச்சி முடிவு!
[Sunday 2026-06-21 07:00]

டிராகன் படம் மூலமாக தமிழில் அறிமுகமாகி, தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை கயாடு லோஹர். அவர் தற்போது தனது கைவசம் பல மொழிகளில் ஏராளமான படங்களை வைத்திருக்கிறார். துல்கர் சல்மான் ஜோடியாக 'ஐ ஏம் கேம்', தெலுங்கில் நானி ஜோடியாக 'தி பாரடைஸ்', தமிழில் அதர்வா ஜோடியாக 'இதயம் முரளி', ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக 'இம்மார்டல்' மற்றும் மாரி செல்வராஜின் 'மஞ்சணத்தி' உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை அவர் கைவசம் வைத்திருக்கிறார்.



டிசம்பரில் குழந்தை: கர்ப்பத்தை உறுதி செய்த சமந்தா!
[Sunday 2026-06-21 07:00]

நடிகை சமந்தாவின் 'எங்கள் தங்கம்' படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில் ஒரே நாளில் 13 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து இருக்கிறது. சமந்தா மற்றும் அவரது கணவர் தான் படத்தை தயாரித்து இருக்கின்றனர். படத்தின் வெற்றியை சமந்தா மற்றும் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். அதன் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் சமந்தா கர்ப்பமாக இருப்பது போல தெரிவதாக கூறினார்கள்.



முதல் நாளில் வசூலை குவித்த சமந்தாவின் "எங்கள் தங்கம்"!
[Saturday 2026-06-20 15:00]

பல வருட இடைவெளிக்கு பிறகு சமந்தா மாஸ் ரோலில் நடித்திருக்கும் 'மா இண்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்') திரைப்படம் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. உடல்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாகவே சமந்தா படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையிலேயே இந்த படம் அமைந்திருக்கிறது.



Cocktail 2: திரை விமர்சனம்!
[Saturday 2026-06-20 15:00]

ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, க்ரித்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Cocktail 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க. கல்லூரியில் இருந்து காதலித்து வரும் குணால் (ஷாகித் கபூர்), தியா (ராஷ்மிகா) இருவரும் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இது இரண்டு பேரின் குடும்பங்களுக்கும் தெரியும் என்பதால், சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதெல்லாம் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அப்போது குணால் தனக்கு தெரியாமல் யாருடனாவது தவறான உறவில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் தியாவிற்கு வருகிறது.



Toy Story 5 திரை விமர்சனம்!
[Saturday 2026-06-20 15:00]

ஹாலிவுட்டில் அனிமேஷன் படங்களுக்கு என பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர், ஏன் உலகளவில் கூட கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் பேவரட் ஆன டாய் ஸ்டோரி சீரிஸ் 5வது பாகம் தற்போது வெளிவர, படம் எப்படி? பார்ப்போம். டாய்ஸுகளின் ஓனர் போனி இவர் மட்டும் தான் இந்த டாய்ஸுகளை வைத்து விளையாடுகிறார். உலகமே டிஜிட்டல் மொபைல் நோக்கி நகர்ந்துவிட்டது. இதனால் போனிக்கு நண்பர்களே இல்லை. இதனால் எல்லோரும் விளையாடும் லில்லிபேட் ஒன்றை போனி அப்பா வாங்கி தருகிறார்.



7 வயது குறைந்த நடிகரை திருமணம் செய்த சீரியல் நடிகை சியாமந்தா கிரண்!
[Saturday 2026-06-20 07:00]

அயலி சீரியல் நடிகர் ஆனந்த் செல்வன் மற்றும் சீரியல் நடிகை சியாமந்தா கிரண் ஆகியோரது திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது. அவர்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பல முக்கிய சீரியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.



"எது உங்களை தடுக்கிறது?" - சூர்யா படத்திற்கு எதிராக குரல் கொடுத்த சனம் ஷெட்டி!
[Saturday 2026-06-20 07:00]

சூர்யாவின் முந்தைய படமான 'கருப்பு' மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கும் நிலையில், அடுத்து அவர் நடித்து வரும் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி இந்த படம் தெலுங்கு, தமிழில் திரைக்கு வருகிறது. தற்போது 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'பட்டாம்பூச்சி' வெளியிடப்பட்டிருக்கிறது.



Colony: திரை விமர்சனம்!
[Friday 2026-06-19 16:00]

ட்ரெயின் டு பூஸன் புகழ் யென் சங் ஹோ இயக்கத்தில் வெளியாகியுள்ள Colony கொரிய திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க. தென் கொரியாவில் செயின்ஸ் பயோ என்ற நிறுவனம் உயிரி-பயங்கரவாதம் குறித்த கான்பரென்ஸை நடத்துகிறது. சி.இ.ஓ காங் வூ-சுல் விளக்கக்காட்சியை நடத்தும் அந்த கட்டிடத்திற்கு வேலை வாய்ப்பு தேடி, தனது முன்னாள் கணவர் ஹான் உடன் வருகிறார் க்வோன் சே-ஜியோங். கான்பரென்ஸ் முடிந்து ஒரு அறைக்கு செல்லும் சி.இ.ஓ காங் வூ-சுலை எதர்ச்சையாக க்வோன் பார்க்க, அதே அறைக்குள் பயோ விஞ்ஞானி சியோ யங் நுழைவதைப் பார்க்கிறார். அந்த அறையில் தனது ஆராய்ச்சியை நீங்கள் திருடி விட்டீர்கள் என்று வூ-சுலுடன் வாதிடுகிறார் யங்-சேயல். ஒரு கட்டத்தில் யங் தான் மறைத்து வைத்திருந்த ஊசியை வூ-சுல் மீது செலுத்துகிறார்.



இந்த வாரம் ஞாயிறு சன் டிவியில் விஜய், ரஜினி படங்களின் ஸ்பெஷல்!
[Friday 2026-06-19 16:00]

வார நாட்களில் என்ன தான் விதவிதமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் வார இறுதியில் படங்கள் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கெனவே பார்த்த படங்களாக இருந்தாலும் குடும்பத்தினர்களுடன் சிரித்து பேசி படங்கள் பார்த்து ரசிக்கிறார்கள்.



கருப்பு திரைப்படத்தை விட அதிக வசூல் செய்த பிளாஸ்ட்!
[Friday 2026-06-19 16:00]

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே 15-ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மற்றொரு வெற்றிதான் பிளாஸ்ட். ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ப்ரீத்தி முகுந்தன், அபிராமி ஆகியோர் நடித்திருந்தனர்.



ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்!
[Friday 2026-06-19 07:00]

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி ரசிகர்களை வியக்க வைத்தவர் தான் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனராக வலம்வந்த ஷங்கர் இயக்கத்தில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் சற்று தோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸிவ் படு தோல்வியை சந்தித்தன.



தமிழ்–சிங்கள திரையுலகை இணைக்கும் ‘ராவண மகன்’!
[Friday 2026-06-19 07:00]

இலங்கைத் திரையுலகில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ராவண மகன்’ (தமிழ்) / ‘வீரா’ (சிங்களம்) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா அண்மையில் கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது. மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல நடன இயக்குநர் மாஸ்டர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படம், பெரும் பொருட்செலவில் தயாராகி வருகிறது. குட் பிரெண்ட்ஸ் சைன் புரொடக்ஷன் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் கே. சிவா இப்படத்தைத் தயாரிக்கிறார்.



நடிகை சமந்தா கர்ப்பமா?
[Thursday 2026-06-18 15:00]

முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, ஒரு சிறிய இடைவேளைக்கு பின் 'மா இண்ட்டி பங்காரம்' படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கதையின் நாயகியாக என்ட்ரி தந்துள்ளார். இப்படம் தமிழில் 'எங்கள் தங்கம்' என்கிற தலைப்புடன் நாளை வெளியாகிறது. இப்படத்தை தனது கணவர் ராஜ் நிடிமோருவுடன் இணைந்து சமந்தா தயாரித்துள்ளார். ஆக்ஷன் ஹீரோயினாக சமந்தா நடித்துள்ள நிலையில், பெரிதும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் இப்படத்தை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா