Untitled Document
November 9, 2026 [GMT]
ராமாயணா திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Monday 2026-11-09 17:00]

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். பாலிவுட் திரையுலகில் இருந்து இதுவரை பல்வேறு வகைகளில் ராமாயணா கதையை வைத்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் ராமாயணா பாகம் 1. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் வெளியான ராமாயணா திரைப்படம் 4 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம். பாலிவுட் திரையுலகில் இருந்து இதுவரை பல்வேறு வகைகளில் ராமாயணா கதையை வைத்து திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வெளியான திரைப்படம் ராமாயணா பாகம் 1. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர்.

  

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ராமாயணா திரைப்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக இப்படத்தில் செய்யப்பட்டுள்ள CG கிராஃபிக்ஸ் மற்றும் visuals-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ராமாயணா திரைப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், 4 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராமாயணா இதுவரை ரூ. 500+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுப்பு துறப்பு: ராமாயணா திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் குறித்த இங்கு பதிவிடப்பட்டுள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் Rolls Royce கார் வரும்: சீரியல் நடிகை பரபரப்பு புகார்!
[Monday 2026-11-09 17:00]

பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இப்போதெல்லாம் அதிகமாக நடக்கிறது. அதிலும் மீடியாவில் அதிகம் இருப்பதாக ஏகப்பட்ட பிரபலங்கள் முன்வந்து கூறுகின்றனர். ஒருகாலகட்டத்தில் MeToo என பல பிரபலங்கள் பற்றி அதிர்ச்சியூட்டும் தகவல்கள் எல்லாம் வந்தது. இப்போதும் இந்த பாலியல் தொல்லை பிரச்சனை இருந்துகொண்டு தான் இருக்கிறது.



3 நாட்களில் தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Monday 2026-11-09 17:00]

சீன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களில் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சூர்யா இந்த ஆண்டு கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் என தொடர்ந்து இரண்டு வெற்றிகளை தந்தார். இதன்பின், சீன் திரைப்படமும் இந்த ஆண்டே வெளியாகிறது என்ற செய்தி வந்த பின் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். கண்டிப்பாக இது சூர்யாவிற்கு ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.



முதல் முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை கத்ரீனா கைஃப்!
[Monday 2026-11-09 17:00]

நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கவுஷல் தம்பதிக்கு பிறந்த குழந்தை விஹானின் முகத்தை இதுவரை காட்டாமல் இருந்து வந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் முகத்தை காட்டினார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகி கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான Boom திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கத்ரீனா கைஃப். அன்று தொடங்கிய இவரது பயணத்தில், Ek Tha Tiger, தூம் 2, Bang Bang, Tiger 3 உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து Merry Christmas எனும் திரைப்படத்தில் நடித்தார். மேலும், இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.



அனிருத் - காவ்யா மாறன் திருமணம்: கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்ட இந்திய பிரபலங்கள்!
[Monday 2026-11-09 17:00]

அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக முன்னாள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கிரீஸ் நாட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இந்திய திரைத்துறை மற்றும் பிரம்மாண்ட தொழில்துறையின் இரு முன்னணி பிரபலங்களான பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் நெட்வொர்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் IPL-லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இணை உரிமையாளருமான காவ்யா மாறன் இடையிலான திருமணம் நவம்பர் 11ம் திகதி மத்திய தரைக்கடல் நாடான கிரீஸ் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.



ஓடிடியில் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் கசிந்த The Odyssey திரைப்படத்தின் HD Print!
[Sunday 2026-11-08 16:00]

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் The Odyssey. இப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி 1.8 பில்லியன் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், வருகிற நவம்பர் 17-ஆம் தேதி இப்படம் அதிகாரப்பூர்வமாக ஓடிடியில் வெளிவரவிருந்த நிலையில், இணையத்தில் கசிந்துள்ளது.



2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்!
[Sunday 2026-11-08 16:00]

வருகிற 2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவிலிருந்து வெளியாகப்போகும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு என்ன புதிய திரைப்படம் வெளியாகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதுவும் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் திரைப்படம் என்றால் சொல்லவே தேவையில்லை, அப்படத்தை முதல் நாள் முதல் ஷோவில் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.



25-வது நாளில் ஜெயிலர் 2 உலகளவில் செய்துள்ள வசூல்!
[Sunday 2026-11-08 16:00]

ஜெயிலர் 2 கடந்த மாதம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், இன்று ஜெயிலர் 2 வெளியாகி 25-வது நாள். இதுவரை இப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.



"இந்த தீபாவளிக்கு ஒரு ஸ்பெஷல் விஷயம் செய்யப்போகிறேன்" - த்ரிஷா போட்ட பதிவு!
[Sunday 2026-11-08 06:00]

தமிழ் சினிமாவின் குயினாக கொண்டாடப்படும் த்ரிஷா என்ன செய்தாலும் டிரெண்ட் தான். எங்கு சென்றாலும், என்ன புகைப்படம் வெளியிட்டாலும் த்ரிஷாவிற்கான வரவேற்பு வேற லெவலில் இருக்கும். கடைசியாக அவர் ஒரு பிரபலத்தின் திருமணத்திற்கு சென்றிருந்தார். அந்த திருமணத்திற்காக த்ரிஷா அணிந்த நகை எல்லாம் இப்போது அவரது பெயரில் டிரண்ட் ஆக தொடங்கிவிட்டது. கடைசியாக த்ரிஷா நடிப்பில் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி இருந்தது, இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை செய்து பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. அடுத்து த்ரிஷா நடிப்பில் ஒரு தெலுங்கு படமும், மலையாள படமும் வெளியாக இருக்கிறது.



சீன் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்!
[Sunday 2026-11-08 06:00]

வாரா வாரம் தமிழ் சினிமாவில் நிறைய புத்தம்புதிய படங்கள் வெளியாகிறது. இந்த வாரம் 3 பெரிய படங்கள் ரிலீஸ் ஆனது, ராமாயணா, சீன் மற்றும் மூக்குத்தி அம்மன். ஒவ்வொரு படமும் ஒரு விதமான கதைக்களத்தை கொண்டது. தற்போது நாம் இந்த பதிவில் சூர்யாவின் சீன் படம் குறித்து ஒரு விஷயத்தை காண்போம். ரோமாஞ்சம், ஆவேசம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்து தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் இயக்குனர் ஜித்து மாதவன். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் சூர்யாவுடன் கூட்டணி அமைத்து எடுத்துள்ள திரைப்படம் சீன்.



"மக்கள் என் பக்கம்" - தனுஷ் அரசியல் என்ட்ரி பற்றி அதிரடி பேச்சு!
[Saturday 2026-11-07 08:00]

ஓம் பட நிகழ்ச்சி மேடையில் தனுஷ் பேசும்போது தன் மீது இருக்கும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். நடிகர் தனுஷின் ஓம் படம் வரும் நவம்பர் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் ஏராளமான தனுஷ் ரசிகர்கள் கலந்துகொண்டனர். என்ன பேசலாம்.. நம்ம எது பேசினாலும் எதாவது சொல்லுவாங்க . நம்ம பேசாமலும் இருக்க முடியாது. அதனால பேசுவோம்.



கமலின் அடுத்த படம் "சண்டியர்": மீண்டும் தொடங்கும் சர்ச்சை?
[Saturday 2026-11-07 08:00]

நடிகர் கமல்ஹாசன் அடுத்து இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் என்ன என்பது இன்று அறிவிக்கப்பட்டு என நேற்று தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு சண்டியர் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வந்து இருக்கிறது.



பாலிவுட் தீபாவளி பார்ட்டியில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள்!
[Friday 2026-11-06 16:00]

வருகிற நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வரவிருக்கும் நிலையில், பாலிவுட் திரையுலகினர் ஒன்றுதிரண்டு பார்ட்டி வைத்து அதனை கொண்டாடியுள்ளனர்.



தமிழகத்தில் முதல் நாளில் ராமாயணா படம் செய்துள்ள வசூல்!
[Friday 2026-11-06 16:00]

இதிகாசப்படங்கள், வாழ்க்கை வரலாறு, தெய்வங்களின் கதைகள் என எல்லா மொழிகளிலும் நிறையப் படங்கள் வெளியாகியிருக்கிறது. அதைப்போன்ற படங்கள் எத்தனை முறை வெவ்வேறு குழுவை வைத்து எடுக்கப்பட்டாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அப்படி பாலிவுட் சினிமாவில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்திய இதிகாசப் படம் தான் ராமாயணா. ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.



மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி: திரைவிமர்சனம்!
[Friday 2026-11-06 16:00]

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா, துனியா விஜய், ஊர்வசி நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2 மஹாசக்தி. வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு இரவில் புரியாத புதிராக கனவுகள் வருகின்றன. இந்த கனவில் வரும் அமானுஷ்யங்கள் நயன்தாராவை மயிலாஞ்சி என்கிற ஊருக்கு போக சொல்கிறது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், மயிலாஞ்சி தனது அம்மாவுடன் செல்ல முடிவு செய்கிறார்.



திருமணத்திற்கு ஒன்றாக சென்ற CM விஜய் - த்ரிஷா!
[Friday 2026-11-06 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த சமயத்தில் அவரது விவாகரத்து வழக்கு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரது மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து வழக்கை பதிவு செய்திருந்தார். அது இணையத்தில் கசிந்து மிகப்பெரிய சர்ச்சை ஆனது. விஜய் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சர் ஆன பிறகு சமீபத்தில் தான் சங்கீதா விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறினார்.



அரசியலுக்கு வருகிறாரா வனிதா விஜயகுமார்?
[Friday 2026-11-06 07:00]

நடிகை வனிதா விஜயகுமார் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்குவதுண்டு. பிக் பாஸ் சர்ச்சைகள் தொடங்கி அவரது மூன்றாவது திருமண சர்ச்சை வரை பலவும் பெரிய அளவில் பேசப்பட்ட ஒன்று. தற்போது வனிதா படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பிசியாக நடித்து வருகிறார்.



மொத ராத்திரி பட ரசிகர்களுக்கு வந்த சூப்பர் குட் நியூஸ்!
[Thursday 2026-11-05 16:00]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமே வெற்றிப்பெறும் என்ற பேச்சுக்கே இப்போதெல்லாம் இடமில்லை. அப்படி இந்த வருடம் இளம் கலைஞர்கள் நடிக்க குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெளியான திரைப்படம் தான் மொத ராத்திரி. அறிமுக இயக்குனர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் நடிக்க வெளியான இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. புதியதாகத் திருமணமான தம்பதியின் முதல் இரவில் நடக்கும் நகைச்சுவையான கதைக்களத்துடன் உருவான இப்படம் மக்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.



ராமாயணா திரை விமர்சனம்!
[Thursday 2026-11-05 16:00]

இந்திய சினிமாவின் உச்சமாக ரூ 2000 கோடி பட்ஜெட்டில் நமித் மல்கோத்ரா தயாரிப்பில் நிதிஷ் இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் இன்று வெளிவந்துள்ளது இந்த பிரமாண்ட படைப்பான ராமாயண எப்படியுள்ளது? பார்ப்போம். ராமாயணம் பல வெர்சனில் பல காலங்களில் நாம் பார்த்து இருப்போம், தற்போது இந்த காலத்திற்கு ஏற்றவாறு விஷ்வல் விருந்தை பொருத்தி எடுத்துள்ளனர். இந்த கதை இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லோருக்கும் தெரிந்த கதை தான், இதில் நாங்கள் சொல்ல புதிதாக ஏதுமில்லை.



ஜெயிலர் 2 வெளிவந்த 21 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்!
[Thursday 2026-11-05 16:00]

ஜெயிலர் 2 நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி தீர்த்த படம். இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 17வது இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி ரஜினி திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல் படமாக அமைந்துள்ளது.



"சூர்யாவின் படங்களை நிராகரிக்கவே இல்லை" - விளக்கம் கொடுத்த நஸ்ரியா!
[Thursday 2026-11-05 07:00]

நடிகர் சூர்யாவின் சீன் படம் வரும் நவம்பர் 6ம் தேதி திரைக்கு வருகிறது. ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அந்த படத்தில் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார். சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, இதற்குமுன் நஸ்ரியா மூன்று முறை என்னுடைய படங்களில் நடிக்க மறுத்திருக்கிறார் என மேடையில் தெரிவித்தார்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா