Untitled Document
November 15, 2026 [GMT]
நடிகர் சூரி குடும்ப திருமணத்தில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்!
[Saturday 2026-11-14 07:00]

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகி நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதனால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அடுத்து ஹீரோவாக அறிமுகம் ஆகி நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அதனால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

  

இந்நிலையில் நடிகர் சூரியின் உறவினர் திருமணம் மதுரையில் நடந்திருக்கிறது. அதில் விஜய் மகன் சஞ்சய் கலந்து கொண்டிருக்கிறார். சூரி பொன்னாடை போர்த்தி அவருக்கு மரியாதை செய்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



டேர் டெவில் திரைப்படத்தில் இணையும் கன்னட சூப்பர்ஸ்டார்!
[Saturday 2026-11-14 16:00]

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டேர் டெவில். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம் வாங்க.



1000 கோடியை தொட்ட ஜெயிலர் 2!
[Saturday 2026-11-14 16:00]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 உலகளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆபிஸில் அந்த விஷயம் நடக்கவில்லை. இந்நிலையில், ரூ. 1000 கோடியை ஜெயிலர் 2 தொட்டிருப்பதாக சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.



மூக்குத்தி அம்மன் 2 உலகளவில் 8 நாட்களில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-11-14 16:00]

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அந்த பாக்ஸ் ஆபிஸ் விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை நயன்தாரா முதல் முறையாக கைகோர்த்த திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. வேல்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ஊர்வசி, ரெஜினா, துனியா விஜய், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.



"எனக்கே கோபம் வருது" - வாட்டர்மெலன் திவாகரை விளாசிய இயக்குனர் சேரன்!
[Saturday 2026-11-14 07:00]

கஜினி பட சூர்யா போல வாட்டர்மெலன் சாப்பிட்டு ரீல்ஸ் வெளியிட்டு அதன் மூலமாக பிரபலமானவர் திவாகர். தன்னைத் தானே வாட்டர் மெலன் ஸ்டார் என அவர் அழைத்துக் கொள்கிறார். மேலும் அவருடைய ரீல்ஸ் வீடியோக்கள் அதிகம் பார்வைகளை பெறுவதால், தான் பல முன்னணி நடிகர்களை விட சிறப்பாக நடிப்பதாக அவர் கூறிக் கொள்கிறார். அதனால் அவரை நெட்டிசன்கள் கடுமையாக தொடர்ந்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.



மெதுவாக வசூல் வேட்டை செய்யும் மூக்குத்தி அம்மன் 2!
[Friday 2026-11-13 16:00]

சாமி படங்கள் என்றாலே தமிழ் மக்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பார்கள். பொதுவாக சாமி படங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது ரம்யா கிருஷ்ணன் பயங்கரமாக அம்மனாக நடித்த அம்மன் திரைப்படம் தான். அதன்பிறகு நிறைய படங்கள் வந்தாலும் சாமி படம் என்றாலே முதலில் ரசிகர்கள் அம்மன் படத்தை தான் கூறுவார்கள். அப்படி சாமியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களின் லிஸ்டில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் இடம்பெற்றுள்ளது.



ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வசூலை எட்டிய ரூ. 2000 கோடி பட்ஜெட் ராமாயணா!
[Friday 2026-11-13 16:00]

மனசுக்கு பிடித்த ஒரு படம் வெற்றியடைகிறது என்றால் அந்த சந்தோஷத்திற்கு ஒரு அளவே இல்லை. அதிலும் கடந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியான 3 படங்களுமே ஒவ்வொன்றும் ஒரு வித கதைக்கொண்டு வெளியானது. இதிகாச கதையான ராமாயணா, ஹிந்தியில் தயாராகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், சூர்யாவின் வித்தியாசமான நடிப்பில் தயாரான சீன் போன்ற படங்களும் வெளியாகி இருந்தது.



7 நாட்களில் சூர்யாவின் சீன் செய்த மாஸ் வசூல் வேட்டை!
[Friday 2026-11-13 16:00]

மலையாள சினிமா இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் சீன். சூர்யா ஹீரோவாக நடிக்க நஸ்ரியா, நஸ்லென், ஆனந்தராஜ், லால் என பலர் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றிப் படமாக இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.



20 ஆண்டுகளைக் கொண்டாடும் சூப்பர் சிங்கர்!
[Friday 2026-11-13 07:00]

சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ், நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐந்து ஊக்கமளிக்கும் முன்னாள் போட்டியாளர்களின் வெற்றிப் பயணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார். கடந்த இரண்டு தசாப்தங்களாக, சூப்பர் சிங்கர் என்பது ஒரு இசை ரியாலிட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு முக்கியமான மேடையாகவும் திகழ்ந்து வருகிறது. இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த பல இளம் பாடகர்களை, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உருவாக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, இந்தப் புகழ்பெற்ற மேடையின் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய திருப்பத்தைப் பெற்ற முன்னாள் போட்டியாளர்களின் அசாதாரண வெற்றிப் பயணங்களைக் கொண்டாடும் வகையில், ஐந்து நெகிழ்ச்சியான விளம்பரப் படங்களை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன.



சூப்பர்சிங்கர் சாம் விஷால் - ஸ்ரீநிஷா நிச்சயதார்த்தம் முடிந்தது!
[Friday 2026-11-13 07:00]

விஜய் டிவியின் சூப்பர்சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலம் ஆன பலரும் தற்போது முன்னணி பாடகர்களான வலம் வருகின்றனர். அப்படி முன்னணி பாடகர்களான இருக்கும் சாம் விஷால் மாற்று ஸ்ரீநிஷா ஜெயசீலன் இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது நிச்சயதார்த்தம் செய்து கொண்டிருக்கின்றனர்.



ரூ.5000 திருப்பி தர முடியாது: சர்ச்சைக்கு பிக் பாஸ் தாமரை வெளியிட்ட வீடியோ!
[Thursday 2026-11-12 18:00]

பிக் பாஸ் புகழ் தாமரை சின்னத்திரை சீரியல்களில் தற்போது நடித்து வருகிறார். அவர் தமிழ்நாட்டில் பல ஊர்களில் EXPO நடத்துவதாக கூறி பணம் வசூலித்து ஏமாற்றிவிட்டதாக சமீபத்தில் சர்ச்சை வெடித்தது. கடைக்காக 5000 ருபாய் அவரிடம் கொடுத்த பலரும் அது பற்றி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.



ராமாயணா ஓடிடி ரிலீஸ் எப்போது?
[Thursday 2026-11-12 18:00]

ராமாயணா, எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்களால் கொண்டாடப்படும் ஒரு காவியம். இந்தியாவில் இந்த ராமாயணா கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், சீரியல் வந்துவிட்டது, ஆனாலும் மக்களுக்கு இந்த கதையின் மீது உள்ள காதல், ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை. அதற்கு உதாரணமாக இப்போது வெளியாகியுள்ள ராமாயணா படத்தின் வசூலை கூறலாம்.



பயங்கர விபத்தில் சிக்கிய பிரபல நடன இயக்குனர்!
[Thursday 2026-11-12 18:00]

தெலுங்கு சினிமாவில் வலம்வரும் பிரபலமான நடன இயக்குனர்களில் ஒருவர் தான் சேகர் மாஸ்டர். இவர் அண்மையில் தனது காரில் பயணித்த போது பயங்கர விபத்தில் சிக்கியுள்ளார். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் Kaaka படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது Shamshabad அருகே அவரது காரை ஒரு லாரி வேகமாக வந்து மோதியுள்ளது.



தமிழ்நாட்டில் 5 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-11 16:00]

சீன் திரைப்படம் வெளியாகி இதுவரை 5 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வரும் நிலையில், இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம். இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் சீன். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நஸ்ரியா நடித்துள்ளார். மேலும், மலையாளத்தில் ரொமான்டிக் பாயாக வலம் வரும் நஸ்லன் இப்படத்தில் வில்லனாக மிரட்டியிருந்தார்.



5 நாட்களில் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-11 16:00]

மூக்குத்தி அம்மன் 2 இந்த ஆண்டு அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. சுந்தர் சி இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் இதுவரை 5 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருந்தது. இந்நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



காதலனை கரம்பிடித்த நடிகை பிரியா பவானி சங்கர்!
[Wednesday 2026-11-11 16:00]

நடிகை பிரியா பவானி சங்கர் இன்று தனது நீண்ட நாள் காதலனை கரம் பிடித்தார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கியவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான இருமுடி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.



மேடையில் கண்ணீர் விட்ட நடிகை திவ்யபாரதி!
[Wednesday 2026-11-11 07:00]

நடிகை திவ்ய பாரதி தமிழில் பேச்சிலர், மகாராஜா, கிங்ஸ்டன் போன்ற படங்களில் நடித்து இருப்பவர். தாராள கிளாமராக அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் போட்டோக்களும் அடிக்கடி வைரல் ஆகிறது. தற்போது தெலுங்கில் அவர் GOAT என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.



சீன் பட வெற்றி: சூர்யா படக்குழுவுக்கு கொடுத்த காஸ்ட்லீ கிப்ட்!
[Wednesday 2026-11-11 07:00]

சூர்யா கெரியரில் இந்த வருடம் மிகவும் பாசிட்டிவ் ஆக மாறி கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் கடந்த சில வருடங்களில் சரிவை சந்தித்து வந்த நிலையில் இந்த வருடம் கருப்பு மிகப்பெரிய ஹிட் ஆகி அவருக்கு கம்பேக் கொடுத்தது. அடுத்து வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.



தமிழ்நாட்டில் 4 நாட்களில் சீன் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-11-10 16:00]

சீன் திரைப்படம் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், 4 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள இப்படம் தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய இரண்டு திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது. இதுவே அவருடைய ரசிகர்களுக்கு பெரும் ஆனந்தம் என இருக்க, இந்த ஆண்டு இரண்டு அல்ல மூன்று என சொல்லி ட்ரிபிள் ட்ரீட் கொடுத்துள்ளார் சூர்யா.



திங்கட்கிழமையில் மட்டுமே மாஸ் ரெக்கார்ட் சாதனை செய்துள்ள ராமாயணா!
[Tuesday 2026-11-10 16:00]

நமீத் மல்கோத்ரா தயாரிப்பில் நித்திஷ் திவாரி இயக்க ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்க படு பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது ராமாயணா. ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த நவம்பர் 5ம் தேதி வெளியாகி இருந்தது. இப்படம் உலகம் முழுவதும் 3டி, ஐமேக்ஸ் உள்ளிட்ட ஏகப்பட்ட ஃபார்மேட்களில் வெளியானது.



பிளாக்பஸ்டர் இயக்குநருடன் முதல் முறையாக கைகோர்க்கும் நடிகர் சூர்யா!
[Tuesday 2026-11-10 16:00]

நடிகர் சூர்யாவின் 49வது திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். நடிகர் சூர்யாவிற்கு இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் 220+ கோடி மற்றும் சீன் 4 நாட்களில் உலகளவில் ரூ. 150+ கோடி என வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை சூர்யாவிற்கு தேடி தந்துள்ளன.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா