Untitled Document
November 29, 2026 [GMT]
சீதையாக நடித்ததால் எழுந்த கடும் விமர்சனங்கள்: பதிலடி கொடுத்த சாய் பல்லவி!
[Saturday 2026-11-28 16:00]

சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்ததற்காக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு சமீபத்திய பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ராமாயணா திரைப்படம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியானது. உலகளவில் இதுவரை ரூ. 1838 கோடி வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தை நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்திருந்தார். ஒரு பக்கம் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், இவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் அல்ல என கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்ததற்காக பல கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு சமீபத்திய பேட்டியில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியது என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ராமாயணா திரைப்படம் கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியானது. உலகளவில் இதுவரை ரூ. 1838 கோடி வசூல் செய்து பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தில் சீதா கதாபாத்திரத்தை நடிகை சாய் பல்லவி ஏற்று நடித்திருந்தார். ஒரு பக்கம் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், இவர் அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் அல்ல என கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

  

சமீபத்தில் நடைபெற்ற We The Women நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி பங்கேற்றபோது, ராமாயணா திரைப்படத்தில் சீதையாக நடித்த பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். "ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்கும்போது அந்த கதாபாத்திரத்தின் ஒரு பகுதியை நம் மனதில் சுமந்து செல்கிறோம். அதுபோல், சீதை கதாபாத்திரமும் என்னுள் சில தனிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அவை எனக்கு மட்டுமே உரியவை" என கூறினார்.

சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்தது குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும், சாய் பல்லவியை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது தவறு என்றெல்லாம் கூட விமர்சனம் கூறப்பட்டது. இந்த நிலையில், அதற்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் சாய் பல்லவி.

அவர் கூறியதாவது, "சீதா மாதா எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது போன்ற சமூக வலைதள கருத்துக்களை நான் பார்க்காமல் இல்லை. ஆனால், இதுபோன்ற விமர்சனங்கள் நம்முடைய மன உறுதியை குலைக்குமானால், நாம் நம்மை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை, ஒரு மனிதராக என்னால் முடிந்த அளவிற்கு மன உறுதியுடன் இருக்கிறேன். கருத்துக்கள் என்பது கருத்துக்கள்தான்; நமக்குள் தன்னம்பிக்கையும் மன உறுதியும் இருந்தால், உலகத்தின் விமர்சனங்களை எதிர்கொள்ளலாம்" என கூறினார்.

மேலும் பேசிய அவர், திரைப்படங்களில் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்றும், ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அதன் தனித்துவமும், கதைக்கு அது அளிக்கும் பங்களிப்பும் மிகவும் முக்கியம் என்றார்.

  
   Bookmark and Share Seithy.com



15 வருடங்களுக்கு பின் இணைந்த கரீனா கபூர் - ஷாருக்கான் ஜோடி!
[Saturday 2026-11-28 16:00]

ஷாருக்கான் மற்றும் கரீனா கபூர் இருவரும் 15 ஆண்டுகளுக்கு பின் கிங் படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின் டாடி கூல் பாடலில் கரீனா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கிங். இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.



சீன் திரைப்படம் 22 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-11-28 16:00]

சீன் திரைப்படம் வெளியாகி 22 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். திரையில் பல வருடங்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜோடி சூர்யா - நஸ்ரியா. இவர்கள் இருவரும் ரொமான்டிக் கதைக்களத்தில் உருவாகும் படத்தில் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான சீன் திரைப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தனர்.



விஜய் சேதுபதி மிஸ் செய்த மிகப்பெரிய ஹிட் படம்!
[Saturday 2026-11-28 07:00]

நடிகர் விஜய் சேதுபதி தனது கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே தனது நடிப்பு திறமையை நிரூபிக்கும் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. ஆனால் தன் கெரியரில் ஒரே ஒரு படத்தை மிஸ் செய்தது மட்டுமே வருத்தம் என அவர் பேசி இருக்கிறார்.



வாகை சூட வா படத்தில் நடித்த பையனா இது!
[Saturday 2026-11-28 07:00]

வாகை சூட வா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலாஜி. இவர் தற்போது நம் சினி உலகத்திற்கு Exclusive-ஆக பேட்டி அளித்துள்ளார்.



தமிழ்நாட்டில் சீன் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்!
[Friday 2026-11-27 16:00]

தமிழ்நாட்டில் சூர்யாவின் சீன் திரைப்படம் இதுவரை, அதாவது 21 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். சூர்யாவிற்கு இந்த ஆண்டு ஹாட்ரிக் வெற்றியின் மூலம் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் மற்றும் சீன் என தொடர் மூன்று வெற்றிகளை ஒரே ஆண்டில் கொடுத்துள்ளார். இதில் சீன் திரைப்படம் வெளியாகி 21 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த 21 நாட்களில் உலகளவில் ரூ. 276 கோடி வசூல் செய்துள்ள நிலையில், விரைவில் ரூ. 300 கோடியை எட்டுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



ராமாயணா திரைப்படம் 22 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Friday 2026-11-27 16:00]

ராமாயணா திரைப்படம் வெளியாகி 22 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். இந்திய சினிமாவை வியந்து பார்க்க வைக்கும் அளவிற்கு ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வெளியாகியுள்ள திரைப்படம் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கிய இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த நவம்பர் 5-ஆம் தேதி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க, வசூலில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது.



ரீ-ரிலீஸாகும் அண்ணாமலை, முரட்டுக்காளை படங்கள்!
[Friday 2026-11-27 16:00]

ரஜினிகாந்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களான அண்ணாமலை மற்றும் முரட்டுக்காளை வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகின்றன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 840 கோடிக்கும் மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளது.



விஜய்யின் ஆறு மாத ஆட்சி: விஜய் சேதுபதி சொன்ன விமர்சனம்!
[Friday 2026-11-27 07:00]

முதல்வராக விஜய் பதவியேற்று ஆறு மாதம் ஆகும் நிலையில், அது பற்றி விஜய் சேதுபதி பேசியது வைரல் ஆகி இருக்கிறது. நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசும்போது முதல்வர் விஜய்யை விமர்சித்ததாக சர்ச்சை வெடித்தது. அதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கடுமையாக விஜய் சேதுபதியை சமூக வலைத்தளங்களில் தாக்கி பதிவிட்டு வந்தனர். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் Train என்ற படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதன் ப்ரோமோஷனுக்காக அவர் கொடுத்த பேட்டியில் அரசியல் பற்றி சொன்ன கருத்துக்கள் வைரல் ஆகி இருக்கிறது.



ஆர்த்தி ரவி தொடர்ந்த அவதூறு வழக்கு: கெனிஷாவிற்கு நீதிமன்றம் புதிய உத்தரவு!
[Friday 2026-11-27 07:00]

தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் ரவி மோகன். விதவிதமான கதைக்களம் கொண்ட படங்கள் தேர்வு செய்து நடித்து அசத்திவந்த ரவி மோகன் வாழ்க்கையில் கடந்த வருடம் சில அதிரடி விஷயங்கள் நடந்துவிட்டன. ரவி மோகன் முதலில் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக பதிவு போட்டார்.



அமெரிக்காவில் 'ராமாயணா' செய்த புதிய வசூல் சாதனை!
[Thursday 2026-11-26 16:00]

ராமாயணா திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ. 1800+ கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், வட அமெரிக்காவில் புதிய பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ரூ. 2000 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ராமாயணா. இயக்குநர் நிதேஷ் திவாரி இப்படத்தை இயக்க, ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.



அனிருத் - காவ்யா திருமண வரவேற்பில் ஜோனிதா காந்தி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி!
[Thursday 2026-11-26 16:00]

இணையத்தில் பரவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார் பின்னணி பாடகி ஜோனிதா காந்தி. இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தொழிலதிபர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.



உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை பார்வதி!
[Thursday 2026-11-26 16:00]

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் பார்வதி திருவோத்து. மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம்வரும் இவர் தமிழில் பூ, மரியான், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் பொதுவெளியில் தனது சமூக கருத்துக்களை வெளிப்படையாக பேசும் நடிகைகளில் பார்வதியும் ஒருவர்.



சாய் பல்லவி நல்ல நடிகை தான், ஆனால் சீதையாக? - பிரபல நடிகை விமர்சனம்!
[Thursday 2026-11-26 07:00]

ராமாயணா, இந்திய சினிமாவில் அண்மையில் வெளியான ஒரு பிரம்மாண்ட படம். என்ன கதை, ராமர்-சீதாவின் அழகிய காதல் கதையும், ராவணன் என்பவர் அழிந்த கதையையும் சொல்லும் ஒரு இதிகாச கதையை தழுவிய படம் தான் ராமாயணா. இந்த கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், தொடர்கள் வந்தாலும் சலிக்காமல் மக்கள் இன்னமும் படத்தை கொண்டாடுகிறார்கள்.



பொன்னாடையை பிடுங்கிய நடிகர் சிவகுமார்: வைரலாகும் வீடியோ!
[Thursday 2026-11-26 07:00]

நடிகர் சிவகுமார் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ரசிகரின் செல்போனை தட்டி விட்டது தொடங்கி அவர் பல சர்ச்சைகளில் இதற்கு முன் சிக்கி இருக்கிறார். தற்போது அவர் மேடையில் பொன்னாடையை பிடுங்கிய வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.



பெரிய தொகைக்கு விலைபோன 'சீன்' ஓடிடி ரிலீஸ்!
[Wednesday 2026-11-25 15:00]

2026, நடிகர் சூர்யாவின் வருடமாக அமைந்துவிட்டது. கடந்த வருடங்களில் வெளியான படங்களில் சரியான வெற்றியை காணாத சூர்யா இந்த வருடத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வெற்றிகளை கண்டுள்ளார். கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் இப்போது சீன் என 3 படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படங்கள் வெற்றியை தாண்டி தனது குடும்ப வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்துள்ளது.



20 நாட்களில் ராமாயணா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்!
[Wednesday 2026-11-25 15:00]

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான வெளியான ராமாயணா திரைப்படம் 20 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி இந்த பதிவில் பார்ப்போம். பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்பீர் கபூர் ராமராக நடித்து கடந்த 5-ஆம் தேதி வெளியான திரைப்படம் ராமாயணா. இப்படத்தை இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்க, சாய் பல்லவி, யஷ், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Hans Zimmer மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.



போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
[Wednesday 2026-11-25 15:00]

மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன் நடிப்பில் போலீஸ் போலீஸ் வெப் தொடரின் சீசன் உருவாகிறது என ஜியோ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். ஹார்ட் பீட், கோர்ட், Brothers and Sisters என ஜியோ ஹாட்ஸ்டாரில் பல்வேறு கதையம்சங்கள் கொண்ட தமிழ் வெப் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆண்டு காவல் துறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட வெப் தொடர்தான் போலீஸ் போலீஸ். மிர்ச்சி செந்தில், ஜெய்சீலன், ஷபானா, சத்யா, ஜனனி, பார்வதி உள்ளிட்ட பலரும் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர்.



வீட்டை விற்ற நடிகை அனுஷ்கா ஷெட்டி?
[Wednesday 2026-11-25 07:00]

நடிகை அனுஷ்கா ஒருகாலத்தில் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயினாக வலம் வந்தவர். தற்போது அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டிருக்கிறார். அவர் உடல் எடையை குறைக்க தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.



"மனநோயாளி.. கடந்து செல்பவன் அல்ல நான்" - வாட்டர்மெலன் திவாகருக்கு சேரன் பதிலடி!
[Wednesday 2026-11-25 07:00]

டிவி நிகழ்ச்சியில் இயக்குனர் சேரன் தன்னை அவமானப் படுத்திவிட்டதாக பிக் பாஸ் புகழ் வாட்டர்மெலன் திவாகர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பற்றி இயக்குனர் சேரன் தற்போது முழு வீடியோவை வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறார். "ஒரு மனநோயாளி ரோட்டில் கிடப்பதை பார்த்து கடந்து செல்பவன் அல்ல நான்" என திவாகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.



Emmy விருது விழாவில் விஜய் சேதுபதி!
[Tuesday 2026-11-24 16:00]

ஹாலிவுட்டில் என்றாலே படங்கள் முதலில் நியாபகம் வரும், அடுத்து பிரம்மாண்டத்தின் உச்சமாக நடக்கும் ஆஸ்கர் விருது தான். இந்த ஆஸ்கர் விருதிற்கு இணையாக பார்க்கப்படும் இன்னொரு விருது விழா தான் Emmy Awards. அமெரிக்காவில் கடந்த 1949ம் ஆண்டு ஜனவரி 25 முதல் இந்த Emmy விருது வழங்கப்பட்டு வருகிறது. உலக அளவில் உள்ள சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகிறது, அண்மையில் நியூயார்க் நகரில் 54வது சர்வதேச எம்மி விருதுகள் விழா நடைபெற்றது.


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா