Untitled Document
July 1, 2024 [GMT]
இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் கைதிகளை காணவில்லை!
[Saturday 2016-01-02 08:00]

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் நேற்று சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். 

இருநாடுகளிடையே கடந்த 2008 மே 31-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட தூதரக அளவிலான ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்று மற்றும் ஜூலை 1-ம் தேதி இருநாட்டு சிறைகளிலும் உள்ளவர்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஜனவரி 1-ம் தேதியான நேற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நல்லெண்ண அடிப்படையில் நேற்று சிறைக்கைதிகள் மற்றும் மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். இருநாடுகளிடையே கடந்த 2008 மே 31-ம் தேதி ஏற்படுத்தப்பட்ட தூதரக அளவிலான ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி ஒன்று மற்றும் ஜூலை 1-ம் தேதி இருநாட்டு சிறைகளிலும் உள்ளவர்களை பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஜனவரி 1-ம் தேதியான நேற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

  

அதன்படி இருதரப்பிலும் வழக்கமான முறையில் சிறையில் உள்ள மற்றநாட்டு கைதிகளின் பட்டியலை பரிமாறினர். ஆனால் இதில் இந்திய தரப்பில் முரண்பாடு உள்ளதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. 17 மீனவர்கள் உட்பட 271 பாகிஸ்தான் கைதிகள் சிறைகளில் உள்ளதாக இந்திய தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 460 கைதிகள் இந்திய சிறைகளில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 113 மீனவர்களும் இந்திய சிறைகளில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் 189 கைதிகள் காணவில்லை என்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான வெளியுறவுச் செயலாளர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தை வருகிற ஜனவரி 25-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கைதிகள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக இந்திய அரசிடம் பேச பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. மோடியின் லாகூர் பயணத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையில் தற்போது புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறிவரும் நிலையில் கைதிகள் காணவில்லை என்ற விவகாரம் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

  
   Bookmark and Share Seithy.com



“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!
[Monday 2024-07-01 06:00]

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது.



முன்னாள் கவுன்சிலர் கொலை: கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!
[Monday 2024-07-01 06:00]

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீட் தேர்வு வினாத்தாள் கசிவு: குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது!
[Monday 2024-07-01 06:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.



15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-06-30 18:00]

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



தொடர் கனமழையால் இடிந்து விழுந்த பாலம்!
[Sunday 2024-06-30 18:00]

நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் திடீரென உடைந்தது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.



"விஜய் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை" - தொல். திருமாவளவன்!
[Sunday 2024-06-30 18:00]

தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என்று கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு தவெக சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் நடைபெற்றது.



உயிரை மாய்த்துக்கொள்வதாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த இளைஞர்: இறப்பிற்கு பின் தெரிய வந்த விடயம்!
[Sunday 2024-06-30 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் காதலை ஏற்க மறுத்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தின் கனசாவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). இவர் நேற்றைய தினம் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.



11 நாட்களில் 5 பாலங்கள்: பீகாரில் தொடர் அதிர்ச்சி சம்பவம்!
[Sunday 2024-06-30 07:00]

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுபானி மாவட்டத்தின் ஆற்றின் குறுக்கே ரூ.3 கோடி செலவில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்தப் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. பீகாரில் தொடர்ச்சியாக பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் தர்ணா!
[Sunday 2024-06-30 07:00]

நகராட்சி அலுவலகம் முன்பு சுமார் 100 துப்புரவு பணியாளர்கள் இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை எனத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினந்தோறும் குப்பைகளைத் தரம் பிரித்துச் சேகரிப்பதற்காக தற்காலிக துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.



“துரைமுருகன் சமூகப் பொறுப்பு இல்லாமல் பேசுவது நியாயமல்ல” - அன்புமணி ராமதாஸ்!
[Sunday 2024-06-30 07:00]

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையைக் காட்டுகிறது என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியும், உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை, டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் கூறியிருக்கின்றனர். அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே அமைச்சரின் கருத்துகள் காட்டுகின்றன.



தோள் மீது கை போட விஜய்க்கு யார் உரிமை கொடுத்தது? - பாஜக நிர்வாகி கேள்வி!
[Saturday 2024-06-29 16:00]

மாணவியின் தோளில் கை போட்டு போஸ் கொடுக்க யார் கொடுத்த உரிமை என்று பாஜக நிர்வாகி சவுதாமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.



2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம் - முதலமைச்சர் ஸ்டாலின்!
[Saturday 2024-06-29 16:00]

தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு சட்டசபையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்ததை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.



லண்டன் செல்லும் அண்ணாமலை: தலைவர் பதவியை தமிழிசை பெறுவாரா?
[Saturday 2024-06-29 16:00]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் படிப்புக்காக லண்டன் சென்று அங்கு 6 மாதம் தங்கவுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச அரசியல் படிப்புக்காக இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.



12-ம் வகுப்பு படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றிய போலி மருத்துவர்: அம்பலமான உண்மை!
[Saturday 2024-06-29 16:00]

அரசு மருத்துவமனையில் 7 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள ரூகேலா அரசு மருத்துவமனையில் 7 மாதங்களாக, ஜார்க்கண்ட் மாநிலம், சிங்பூம் மாவட்டத்தில் உள்ள தியாசராவைச் சேர்ந்த பத்மநாபன் முகி கருவா என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.



8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்!
[Saturday 2024-06-29 06:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.



'வெளியே வந்த ஹேமந்த் சோரன்' - தமிழக முதல்வர் வரவேற்பு!
[Saturday 2024-06-29 06:00]

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.



'மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம்'- முதல்வர் அறிவிப்பு!
[Saturday 2024-06-29 06:00]

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



தமிழக அரசியலில் எம்ஜிஆரை பின்பற்றும் விஜய்: அரசியல் பரப்பில் எழுந்துள்ள கேள்விகள்!
[Friday 2024-06-28 19:00]

தமிழக நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள், முன்னாள் நடிகர்களாக இருந்து பின்னர் முதலமைச்சர்களாக உயர்ந்த எம்.ஜி.ராமசந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ஆம் மற்றும் 12 ஆம் தரங்களில் சித்திபெற்ற மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வை இன்று (28) விஜய் நடத்தியுள்ள நிலையிலேயே இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது.



சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம்: கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு!
[Friday 2024-06-28 19:00]

சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா உட்பட்ட மூவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தகாத முறைக்கு உட்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுத் துறையினர், தமது குற்றப்பத்திரிகையில் இந்த குற்றத்தையும் சேர்த்துள்ளனர்.



சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்!
[Friday 2024-06-28 19:00]

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி வருகிறது. கடந்த 20 -ம் திகதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதம் நடத்தப்படுகின்றன.


Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா