Untitled Document
July 5, 2024 [GMT]
குறைகளை களைந்திடும் அம்மா அழைப்பு மையத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா!
[Tuesday 2016-01-19 22:00]

பொதுமக்களின் குறைகளை விரைவில் களைந்திடும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் அம்மா அழைப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். இதன்படி 1100 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புக் கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத்தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு   அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் குறைகளை விரைவில் களைந்திடும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் அம்மா அழைப்பு மையத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார். இதன்படி 1100 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்புக் கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்ஏழை எளிய மக்களும், சாமானியர்களும் அரசிற்கு தங்கள் குறைகளைத்தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கில் முதலமைச்சரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் வழியாகவும், முதலமைச்சரின் தனிப் பிரிவின் வலைதளம் மூலமாகவும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  

பொதுமக்களின் குறைகளை விரைந்து பெற்று, அதனைக் களைந்திடும் நோக்கில் கணினிவழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல் (Computer Telephony Integration), குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் (Voice Logger System) போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து நாள்களும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி (Toll Free) எண் 1100 மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொது மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் 'அம்மா அழைப்பு மையம்' அமைக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15,000 அழைப்புகளை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் இந்த வசதியை தொடக்கிவைத்தார்கள்.பொதுமக்களிடமிருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி (SMS) வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி, எந்ததுறையின், எந்தஅதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற விவரம் அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை குறித்து சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுத் துறை முதன்மைச் செயலாளர் யத்தீந்திர நாத் ஸ்வேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்டாகிராமில் பெண் போலப் பேசி மோசடி: இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
[Friday 2024-07-05 18:00]

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர், நத்தக்காட்டு வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன்(32). இவர், பெருமா நல்லூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பாஸ்கரன், இன்ஸ்டாகிராமில் பெண் போல பேசி ஏமாற்றி, கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் சிலரிடம் பணம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஆண் என்பதை தெரிந்துகொண்ட அவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு பாஸ்கரனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.



மோடியை கடுமையாக விமர்சித்த சிவசேனா மூத்த தலைவர்!
[Friday 2024-07-05 18:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்திற்கு செல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்திருக்கிறார் என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளில் நடந்த டி20 உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.



இந்திய மாநிலத்தில் 5 பேரின் உயிரை காவு வாங்கிய கிணறு!
[Friday 2024-07-05 18:00]

இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்ற நபர், கிணற்றுக்குள் விழுந்த மரக்கட்டையை எடுக்க இறங்கியுள்ளார்.



தமிழகத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!
[Friday 2024-07-05 18:00]

இன்று தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழகத்திற்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 40 கிலோ மீற்றர் வேகத்தில் தரைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.



அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள்: அதிமுக போராட்டம் அறிவிப்பு!
[Friday 2024-07-05 06:00]

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த 1 ஆம் தேதி (01.07.2024) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டத்தின் மூலம் இந்தித் திணிக்கப்படுவதை எதிர்த்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஹத்ராஸ் விரையும் ராகுல் காந்தி எம்.பி.!
[Friday 2024-07-05 06:00]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர்.



எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
[Friday 2024-07-05 06:00]

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-07-2024 அன்று தருமபுரி மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சியிலும், 15-07-2024 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் "முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட” விரிவாக்க நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அவற்றைத் தொடங்கி வைக்கவுள்ளார். அதேபோன்று அன்றையதினம் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்புடைய அமைச்சர்களும் இந்நிகழ்வினைத் தொடங்கி வைக்கவுள்ளனர். இந்நிலையில் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனித்தனியே கடிதம் அனுப்பியுள்ளார்.



விஜய் கட்சிக்கு விரைவில் மூடு விழா: விளாசும் அர்ஜுன் சம்பத்!
[Thursday 2024-07-04 18:00]

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விரைவில் மூடு விழா நடத்தப்படும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விருது விழாவில் பேசிய விஜய், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" என்றார்.



தமிழகத்தில் தொடரும் கள்ளச்சாராய மரணம்!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக மாவட்டமான விழுப்புரத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழக மாவட்டமான விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலம் கிராமத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதனை குடித்த உள்ளூரைச் சேர்ந்த ஜெயராமன் (65) மற்றும் 2 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.



விஜய் விழாவில் மணமணக்கும் சைவ விருந்து!
[Thursday 2024-07-04 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு விருது வழங்கிய விழாவில் சமைப்பதற்காக புதுச்சேரி கேட்டரிங் சர்வீஸை விஜய் புக் செய்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.



121 பேர் உயிரிழப்புக்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம்: போலே பாபா சாமியார் சர்ச்சை பேச்சு!
[Thursday 2024-07-04 18:00]

உத்தரப் பிரதேச மாநிலம் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு சமூக விரோதிகளின் சதி தான் காரணம் என்று போலே பாபா சாமியார் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்கிற சாமியார் ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.



அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!
[Thursday 2024-07-04 06:00]

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் சிறுநீரக பாதிப்புகளால் அவருக்கு வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு ஓய்வு எடுத்து வருகிறார். இத்தகைய சூழலில் தான் கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.



தமிழ்நாடு நாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு!
[Thursday 2024-07-04 06:00]

தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளினை ‘தமிழ்நாடு நாளாக’ கொண்டாடப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க 2022ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.



கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Thursday 2024-07-04 06:00]

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்டமான திருமணம்: 3 நாட்கள் விழாவில் என்ன நடக்கப்போகிறது?
[Wednesday 2024-07-03 18:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண அட்டவணையை பார்க்கலாம். Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.



ஆன்மீக நிகழ்ச்சியில் இறந்தவர்களின் உடல்களை பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு!
[Wednesday 2024-07-03 18:00]

உத்தர பிரதேசத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் பலியானவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில், இளம் காவலர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹத்ராஸில் ''போலே பாபா'' என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.



"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடத்தாமல் இவரை தேர்வு செய்யுங்கள்" - சீமான் அறிவுரை!
[Wednesday 2024-07-03 18:00]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் எனவும் அதற்கு பதிலாக இதனை செய்யுங்கள் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன. இந்தத் தேர்தலில் அதிமுக தனக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும், நமது பொது எதிரி திமுகவை அழிக்க இது தான் வழி என்றும் சீமான் வெளிப்படையாக பேசியிருந்தார்.



"நம் ஊரில் நாய் கூட பட்டம் பெறும் நிலை வந்துவிட்டது" - ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு!
[Wednesday 2024-07-03 18:00]

இப்போது நம்ம ஊரில் நாய்கூட பி.ஏ. பட்டம் வாங்கும் நிலை வந்துவிட்டது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று திமுக மாணவரணி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்தியாவின் புதிய திட்டம்!
[Wednesday 2024-07-03 06:00]

மலேசிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இந்திய அரசு புதிய விசா திட்டத்தை தொடங்கியுள்ளது. மலேசிய சுற்றுலா பயணிகளுக்காக இந்திய அரசு இரட்டை நுழைவுக்கான இலவச மின்னணு சுற்றுலா விசா (e-Tourist visa) திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி இரு நாடுகளுக்கிடையே சுற்றுலாத் துறையை மேம்படுத்த நோக்கம் கொண்டுள்ளது.



மத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 87 பேர் பலி: மேலும் உயரலாம் என அச்சம்!
[Wednesday 2024-07-03 06:00]

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், 87 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமம் ஒன்றில் மத சத்சங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா