Untitled Document
July 8, 2024 [GMT]
ஜப்பானில் உள்ள அஸ்தி சுபாஷுடையதா என டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும்: - மகள் அனிதா போஸ் கோரிக்கை
[Tuesday 2016-01-26 19:00]

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு புத்த ஆலயத்தில் உள்ள அஸ்தி சுபாஷ் சந்திரபோஸுடையதா என கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் கூறுகையில், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தியை டிஎன்ஏ சோதனை செய்து, அது எனது தந்தையுடையதா என கண்டறிய வேண்டும் என்றார்.தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் அனிதா தொலைபேசி மூலம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.

ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு புத்த ஆலயத்தில் உள்ள அஸ்தி சுபாஷ் சந்திரபோஸுடையதா என கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என அவரது மகள் கோரிக்கை விடுத்துள்ளார். சுபாஷ் சந்திரபோஸின் மகள் அனிதா போஸ் கூறுகையில், ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு புத்தர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள அஸ்தியை டிஎன்ஏ சோதனை செய்து, அது எனது தந்தையுடையதா என கண்டறிய வேண்டும் என்றார்.தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் அனிதா தொலைபேசி மூலம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்தார்.

  

அடுத்த மாதம் இந்தியா வரவிருக்கும் அவர் இதுகுறித்து மத்திய அரசை வலியுறுத்திவார் எனத் தெரிகிறது.தாய்பேய் நாட்டில் கடந்த 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி நடைபெற்ற விமான விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்தார் என நம்பப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவந்த அனிதா போஸ், அந்த விபத்தில் சுபாஷ் சந்திரபோஸ் இறந்திருக்கலாம் என்றார்.சமீபத்தில் அரசு வெளியிட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்தகோப்புகள் அனைத்தையும் பார்வையிடவில்லை என்ற அனிதா, அதில் இறப்பு சான்றிதழ் இல்லை என்றார்.மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் சுபாஷ் சந்திரபோஸுக்கு வழங்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பொதுமக்கள் அவரை நினைவில் வைத்துள்ளனர் என்றார். ஐஎன்ஏவில் பணியாற்றியவர்களை இந்திய அரசாங்கம் நடத்திய விதம் அவமானத்துக்குரியது என்றார்.நேருவும், சுபாஷ் சந்திரபோஸும் நிறைய விஷயங்களில் ஒத்திருந்தனர். சில விவகாரங்களில் அவர்களுக்குள் ஒரே கருத்து இல்லை என்றார் அனிதா போஸ்.

  
   Bookmark and Share Seithy.com



இந்து மத விவகாரம்: ராகுலுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் சங்கராச்சாரியார்!
[Monday 2024-07-08 18:00]

இந்துக்களை வன்முறையாளர்கள் என்று ராகுல் காந்தி கூறவில்லை என்று சங்கராச்சாரியார் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது பேசிய ராகுல் காந்தி, " தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை, பொய்களை மட்டுமே பேசுகிறார்கள்.



40 ஆண்டுகளில் முதல் முறையாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் இந்திய பிரதமர்!
[Monday 2024-07-08 18:00]

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது குறித்து பதிவிட்டுள்ளார். விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்து வரும் சூழலில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.



ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும்: புதிய காவல் ஆணையர் முடிவு!
[Monday 2024-07-08 18:00]

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று சென்னை மாநகர புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காவலர் பயிற்சி கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.



"இந்த காரணத்தால் பாமகவை புறக்கணியுங்கள்" - மக்களுக்கு உதயநிதி வேண்டுகோள்!
[Monday 2024-07-08 18:00]

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் பாட்டாளி மக்கள் கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் செய்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.



‘மூளையைத் தின்னும் அமீபா’ - வழிகாட்டுதல்கள் வெளியீடு!
[Monday 2024-07-08 06:00]

அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையைத் தின்னும் அமீபா வகை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.



போட்டித் தேர்வர்களுக்கு உதவும் மாற்றுத்திறனாளி ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்!
[Monday 2024-07-08 06:00]

வயிற்றுப் பசியைப் போக்க நல்ல உணவு கிடைக்கிறது. நம் அறிவுப் பசியைப் போக்க நல்ல நல்ல புத்தகங்களும் கிடைக்கிறது. ஆனால் பார்வை மாற்றுத்திறனாளியான நமக்கு (பிரைலி) பாடப் புத்தகங்கள் மற்ற நல்ல புத்தகங்களை வாசிக்கும் வசதிகள் கிடைக்கவில்லையே! என்ற ஏக்கம் கல்லூரி மாணவரான பொன்.சக்திவேலுக்கு ஏற்பட்டது. ஒரு நாள் வகுப்புகளுக்குப் போகவில்லை என்றாலும் அந்தப் பாடத்தை அறிந்து கொள்ள முடியாத நிலை. நடத்தும் பாடத்தைக் கூட மறுபடி படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு சிறிய ஆடியோ ரெக்கார்டரை வாங்கி ஆசிரியருக்கே தெரியாமல் பதிவு செய்து விடுதியில் வந்து அதைத் திருப்பிக் கேட்கத் தொடங்கினார்.



“முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்” - அமைச்சர் உதயநிதி!
[Monday 2024-07-08 06:00]

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.



ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது!
[Sunday 2024-07-07 17:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் (05.07.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஏராளமான பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.



18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Sunday 2024-07-07 17:00]

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம்: பிரமிக்க வைக்கும் ஜியோ வேர்ல்ட் சென்டரின் வசதிகள்!
[Sunday 2024-07-07 17:00]

ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் ஊடகங்களில் பரபரப்பை கிளப்பி வருகின்றன. இந்த பிரமாண்ட திருமணம் ஜூலை 12ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் வைத்து நடைபெற இருக்கிறது. மும்பையின் பிரபலமான பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டர், இந்தியாவின் பிரமாண்ட நிகழ்வுகளுக்கான முன்னணி இடமாக திகழ்கிறது.



கணவன்-மனைவி மீது மோதிய கார்: மும்பையில் அதிகாலை நடந்த பயங்கரம்!
[Sunday 2024-07-07 17:00]

மும்பையில் இன்று அதிகாலை நடந்த வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மும்பையின் வொர்லி பகுதியில் இன்று அதிகாலை வேளையில் நடந்த வாகன விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற காவேரி நக்வா மற்றும் பிரதிக் நக்வா தம்பதியினர் சிக்கி கொண்டனர்.



ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
[Sunday 2024-07-07 08:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
[Sunday 2024-07-07 08:00]

திருப்பாதிரிப்புலியூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் சங்கர் என்கின்ற சிவசங்கர். கேபிள் டிவி தொழில் நடத்திவரும் இவர் பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கும் நிலையில் கடலூர் நகர முன்னாள் வன்னியர் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இவர் சனிக்கிழமை(6.7.2024) மாலை தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நான்கு மரர்ம நபர்கள் இவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். அருகில் உள்ளவர்கள் கூச்சல் இடவே அவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்தவர்கள் சங்கரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.



ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் தொடர்பான வழக்கு நாளை விசாரணை!
[Sunday 2024-07-07 08:00]

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று(5.7.2024) இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



"இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும்" - லாலு பிரசாத் யாதவ் உறுதி!
[Saturday 2024-07-06 16:00]

வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சி கவிழும் என்றும், தேர்தலுக்கு தயாராக இருங்கள் என்றும் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதில், பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.



வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்!
[Saturday 2024-07-06 16:00]

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார். இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.



பச்சிளம் குழந்தையை அடித்து கொன்று பாறையில் வீசிய தந்தை!
[Saturday 2024-07-06 16:00]

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்த விரக்தியில் பச்சிளம் குழந்தையை தந்தையே அடித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாதையன். இவர் தனது முதல் மனைவி முனியம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.



ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி அளிக்கிறது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!
[Saturday 2024-07-06 16:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தமிழக்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலை தொடர்பில் 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.



பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் படுகொலை - இ.பி.எஸ். கண்டனம்!
[Saturday 2024-07-06 08:00]

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்ததுள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் படுகொலை!
[Saturday 2024-07-06 08:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்து தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் அடையாளம் தெரியாத சிலரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளிக்கிழமை செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே கட்சித் தலைவர்களுடன் பேசிக் கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை பைக்கில் வந்த 6 பேர் தாக்கி வெட்டினர்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா