Untitled Document
November 10, 2024 [GMT]
பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும்: - மத்திய நிதியமைச்சர்
[Friday 2016-05-06 15:00]

இந்தியப் பொருளாதாரம் இப்போது சிறப்பாக உள்ளது; எனினும் இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.மக்களவையில் நேற்று நிதி மசோதாவில் சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அருண் ஜேட்லி கூறியதாவது:
இந்தியப் பொருளாதார வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. எனினும், இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் யோசனை அரசுக்கு இல்லை. விவசாயத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

இந்தியப் பொருளாதாரம் இப்போது சிறப்பாக உள்ளது; எனினும் இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.மக்களவையில் நேற்று நிதி மசோதாவில் சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அருண் ஜேட்லி கூறியதாவது: இந்தியப் பொருளாதார வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது. எனினும், இந்த ஆண்டு பருவ மழை நன்றாகப் பெய்தால் பொருளாதார வளர்ச்சி மேலும் வேகமெடுக்கும். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விதிக்கும் யோசனை அரசுக்கு இல்லை. விவசாயத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

  

கடந்த இரு ஆண்டுகளாக பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை. ஆனால் இந்த ஆண்டில் மழை வழக்கமான அளவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை சிறப்பாக இருந்தால் கிராமப் பகுதிகளில் வேளாண் உற்பத்தி அதிகரித்து கிராமப் பொருளாதாரம் வலுப்படும். அரிசி, கோதுமை, சர்க்கரை, பருத்தி உற்பத்தியில் இந்தியா உலக அளவில் 2-ஆவது இடத்தில் உள்ளது.கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளிலும், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கருப்புப் பணத்தை தாமாக முன்வந்து ஒப்படைத்து வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் கடந்த ஆண்டு ரூ.71 ஆயிரம் கோடி வரி வரம்புக்குள் வந்துள்ளது.

பனாமா ரகசிய ஆவணத்தில் இடம் பெற்றுள்ள இந்தியர்கள் அனைவருக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வங்கிகளில் வாராக்கடன் பிரச்னை அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. சில கடன்கள் தவறாக வழங்கப்பட்டிருக்கலாம். இதற்கு யார் காரணம் என்று ஆராயப்போவதில்லை. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை, இந்தியாவில் சில தொழில்களிலும் எதிரொலிக்கிறது.உருக்கு உற்பத்தி போன்ற சில தொழில்களில் சீனாவின் போட்டியைச் சமாளிப்பது கடினமாகவே உள்ளது என்றார் அருண் ஜேட்லி.

  
   Bookmark and Share Seithy.com



பிரபல எழுத்தாளர் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
[Sunday 2024-11-10 17:00]

பிரபல எழுத்தாளரான இந்திரா சௌந்தர்ராஜன் (வயது 65) மதுரையில் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் அவரது வீட்டில் எதிர்பாராத விதமாகத் தவறி விழுந்த நிலையில் அவரது உயிர் உயிரிழந்தார். இவர் ஏராளமான நாவல்கள் மற்றும் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திரா சௌந்தர்ராஜன் மறைவிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



‘எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ்’ - சிகிச்சைக்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Sunday 2024-11-10 17:00]

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் காளி பாண்டி. இவர் உணவகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான், இவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரது கையில் உள்ள எலும்பில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அவர் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர் காளி பாண்டியிடம் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைத்துள்ளார்.



திரு டெல்லி கணேஷின் திடீர் மறைவு பேரிழப்பு: தவெக தலைவர் விஜய்!
[Sunday 2024-11-10 17:00]

மறைந்த நடிகர் டெல்லி கணேஷிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் தனது 80 வயதில் காலமானது தமிழ் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உட்பட பலர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Sunday 2024-11-10 17:00]

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வானிலை மையம் கூறியதாவது.., "தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று இரவு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.



இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 23 பேர் கைது!
[Sunday 2024-11-10 08:00]

தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் இன்று தமிழக மீனவர்கள் 23 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.



ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவு: உடல் நசுங்கி உயிரிழந்த ஊழியர்!
[Sunday 2024-11-10 08:00]

பீகார் மாநிலத்தில் பரவுனி என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் லக்னோ-பரவுனி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை, எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்கை (COUPLING) பிரிக்கும் பணியில் ரயில்வே ஊழியர் அமர் குமார் ராவ் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரயில் ஒட்டுநர் ரயில் எஞ்சினை முன்னோக்கி இயக்குவதற்குப் பதிலாகப் பின்னோக்கி இயக்கியதாகக் கூறப்படுகிறது.



செய்தியாளரின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகல பதில்!
[Sunday 2024-11-10 08:00]

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவினையொட்டி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (09.11.2024) 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் பெருமழை வந்தால் அரசு சந்திக்கத் தயாராக உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், “ இன்னும் புயல் ஏதும் உருவாகவில்லை. நீங்கள் உருவாக்காமல் இருந்தால் சரி. எச்சரிக்கை விட்டிருக்கின்றார்கள்.



ட்ரம்பிற்காக கட்டப்பட்ட கோயிலில் வழிபாடு செய்த இந்திய கிராம மக்கள்!
[Saturday 2024-11-09 18:00]

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில் இந்திய கிராமம் ஒன்றில் அவரது சிலைக்கு வழிபாடு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் போட்டியிட்டனர். இதில், டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார்.



இந்தியாவின் முடிவால் உலக நாடுகளுக்கு பலன்: இந்திய அமைச்சர் கருத்து!
[Saturday 2024-11-09 18:00]

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் உலக நாடுகளுக்கு பலன் என்று இந்திய அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 2022 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்க ஆரம்பித்தது. இதனை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன.



காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்த உரிமையாளர்!
[Saturday 2024-11-09 18:00]

ரூ.4 லட்சம் செலவு செய்து காருக்கு நல்லடக்கம் செய்த நிகழ்வில் சுமார் 1500 -க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்திய மாநிலமான குஜராத், அம்ரேலி மாவட்டத்தைச் சேந்தவர் சஞ்சய் பொலாரா. இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பாக வேகன் ஆர் காரை வாங்கியுள்ளார். இந்த காரை வாங்கிய பின்னர் தனக்கு அதிர்ஷ்டம் ஏற்பட்டதாகவும், சமுதாயத்தில் தனக்கு மதிப்பு ஏற்பட்டதாகவும் பொலாரா கூறுகிறார். இந்த காரால் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டு குடும்பமும் வளர்ச்சி அடைந்துள்ளது.



மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின் உயிருடன் எழுந்த பெண்!
[Saturday 2024-11-09 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் யோகா ஆசிரியை ஒருவர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட பின்னர் மூச்சுப் பயிற்சி மூலம் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிக்கு, யோகா ஆசிரியை அர்ச்சனா என்பவரை காரில் கும்பல் ஒன்று அழைத்துச் சென்றுள்ளது. அங்கு அவரை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் குழி தோண்டி, சேறு மற்றும் கிளைகளால் மூடி அர்ச்சனாவை புதைத்துவிட்டு, அவரது பொருட்களை திருடி தப்பிச்சென்றுவிட்டது.



தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
[Friday 2024-11-08 18:00]

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்டை சென்னை வானிலை விடுத்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.



இனி பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்க கூடாது: இந்திய மாநிலம் ஒன்றில் முடிவு!
[Friday 2024-11-08 18:00]

பெண்களுக்கு ஆண் டெய்லர் அளவு எடுக்கக் கூடாது என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பெண்களுடைய பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன சேர்க்கலாம் என்று உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணையம் உறுப்பினர்கள் விவாதம் செய்துள்ளனர்.



ஒரே பள்ளியில் படிக்கும் 120 இரட்டையர்கள்!
[Friday 2024-11-08 18:00]

ஒரு பள்ளியில் மொத்தம் 120 இரட்டையர்கள் படித்து வருவதால் ஆசிரியர்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 60 இரட்டை குழந்தைகள் என்று மொத்தமாக 120 இரட்டையர் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரட்டையர்களின் எண்ணிக்கை 47 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.



கடுமையாக விமர்சித்த நிலையில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்!
[Friday 2024-11-08 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.



சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!...
[Friday 2024-11-08 06:00]

தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் இரா. மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில், ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சி நடைபெறும். இந்த திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.



‘பாமகவினர் திட்டமிட்டே பதற்றத்தை உருவாக்குகின்றனர்’ - திருமா ஆவேசம்!
[Friday 2024-11-08 06:00]

சமூக நல்லிணக்கத்தைச் சிதைக்கும் நோக்கில் செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வி.சி.க.வின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள மஞ்சக்கொல்லையில் கடந்த சில மாதங்களாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தைச் சேதப்படுத்திய பிரச்சினை தொடர்கிறது. கடந்த 23.08.2024 அன்று சிறுத்தைகளின் கொடியை அறுத்தெறிந்தனர். அது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை.



அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகார்!
[Friday 2024-11-08 06:00]

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் சேகர் ரெட்டி மற்றும் பிரமானந்தாதண்டா ஆகிய இருவருக்கும் சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தில் 'ஜோதிர் மை பார்க்கிங்க்' என்ற பெயரில் சேகர் ரெட்டியின் பி.ஏ. ரிஷிகுமார் என்பவர் பார்க்கிங் நடத்தி வருகிறார்.



‘தெருக்களில் மாடுகளை விடக்கூடாது’ - உரிமையாளர்களுக்கு பேரூராட்சி எச்சரிக்கை!
[Thursday 2024-11-07 18:00]

சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அண்ணாமலை நகர் காவல்துறை சார்பில் மாடு வளர்ப்போர் மற்றும் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.



‘அரோகரா’ முழக்கத்துடன் திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு!
[Thursday 2024-11-07 18:00]

முருகப்பெருமானிற்கு உகந்த திருவிழாவாகக் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் முருகப்பெருமானின் திருத்தலங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 2ஆம் தேதி (02.11.2024) தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா