Untitled Document
June 26, 2024 [GMT]
அவகாசம் கேட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்: வெளியான திடீர் அறிவிப்பு!
[Thursday 2024-06-13 18:00]

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க அவகாசம் நீட்டித்து தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில  பதிவு எண்  கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்களை இயக்க அவகாசம் நீட்டித்து தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில் வெளிமாநில பதிவு எண் கொண்ட 547 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

  

வெளிமாநில ஆம்னி பதிவு எண் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதால் தமிழக அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம், சாலை வரி கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்குவதற்கு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவை முழுமையாக பின்பற்றப்படாத சூழ்நிலையில் நாளை முதல் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயங்கக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கான கால அவகாசம் வேண்டும் எனக் கேட்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது வரும் திங்கட்கிழமை வரை அதற்கான அனுமதி வழங்கி இருக்கிறார்கள். எனவே திங்கட்கிழமை வரை தமிழகத்தில் வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கினால் போக்குவரத்து துறையினுடைய விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு!
[Wednesday 2024-06-26 16:00]

இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 18-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் இன்று வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிட்டனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: பெற்றோர் குற்றச்சாட்டு!
[Wednesday 2024-06-26 06:00]

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.



'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்!
[Wednesday 2024-06-26 06:00]

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.



மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு!
[Wednesday 2024-06-26 06:00]

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.



"வாழ்க உதயநிதி ஸ்டாலின்" - தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது முழக்கம்!
[Tuesday 2024-06-25 18:00]

மக்களவையில் தமிழ்நாட்டு எம்பி-க்கள் இன்று பதவியேற்கும்போது சில எம்பிக்கள் அண்ணா, பெரியார், கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர். இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, கடந்த 9-ம் திகதி பிரதமர் மோடி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. அவருடன் 72 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.



41 -வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
[Tuesday 2024-06-25 18:00]

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.



சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு: உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!
[Tuesday 2024-06-25 18:00]

சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.



குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சமா? - சீமான் ஆவேசம்!
[Tuesday 2024-06-25 18:00]

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பது தொடர்பாக சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



கள்ளச்சாராய மரணம்: மேலும் 6 பேர் கைது!
[Tuesday 2024-06-25 06:00]

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 59 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



முன்னாள் திமுக அமைச்சர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!
[Tuesday 2024-06-25 06:00]

திமுக முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஈரோடு மாணிக்கம்பாளையம் விஐபி நகரில் ஒரு வீடு உள்ளது. இதேபோல் மொடக்குறிச்சி அருகே சின்னம்மாபுரம் கிராமம் மினிகாடு என்ற இடத்தில் 25 ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு உள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதையடுத்து திமுக தலைமையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திமுகவை விட்டு விலகினார்.



சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொலை செய்த மகன்!
[Tuesday 2024-06-25 06:00]

தூத்துக்குடியில் சொத்துக்காக தந்தையை மகனே காரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் சின்னதுரை. ஆழந்தா எனும் கிராமத்தில் 80 வயதான கருப்பசாமிக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அதை விற்ற முதியவர் கருப்புசாமி அதிலிருந்து வந்த 24 லட்சம் ரூபாயை சின்னத்துரையின் இரண்டு மகன்களின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ததாகக் கூறப்படுகிறது.



10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
[Monday 2024-06-24 06:00]

தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் கேரளாவில் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்கள் போக்சோவில் கைது!
[Monday 2024-06-24 06:00]

கோபிசெட்டிபாளையம் அருகே சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பிணிகளாக்கிய வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கல்லாங்குளம் காலனி நல்லாம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சிறுமியை ஒருவரை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.



ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த அதிசய நீல நிற வைர நெக்லஸ்: சுவாரஸ்யமான பின்னணி!
[Monday 2024-06-24 06:00]

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், வைர வியாபாரி ரத்தன் தாஸ் மெர்ச்சண்ட் மகள் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு முன்னதாக, பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் ஒரு பிரமாண்டமான படகு சவாரி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.



‘முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு’ - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
[Sunday 2024-06-23 16:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.



‘ஹாட்ரிக் வெற்றி’ - இஸ்ரோ பெருமிதம்!
[Sunday 2024-06-23 16:00]

விண்ணுக்கு செயற்கைக்கோள்களைச் சுமந்து சென்று பூமிக்கும் என்று திரும்பும் ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு கட்ட சோதனைகள் வெற்றி பெற்ற நிலையில் இறுதி மற்றும் மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி அடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.



கள்ளக்குறிச்சி விவகாரம்: முக்கிய குற்றவாளி கைது!
[Sunday 2024-06-23 16:00]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 55 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: உயிருக்கு போராடும் 20 பேர்!
[Sunday 2024-06-23 16:00]

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் திகதி விஷச்சாராயத்தை அருந்திய பலர் உடல்நலம் மோசமாகி உயிரிழந்தனர். பின்னர் சேலம், புதுச்சேரி, விழுப்புரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் இன்னும் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.



இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது!
[Sunday 2024-06-23 07:00]

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.



முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!
[Sunday 2024-06-23 07:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.


 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா