Untitled Document
June 29, 2024 [GMT]
மக்களவை சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு!
[Wednesday 2024-06-26 16:00]

இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 18-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் இன்று வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிட்டனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் 18-வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக மக்களவை தலைவருக்கான தேர்தல் இன்று வாக்குப்பதிவு முறையில் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் பிர்லாவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கே. சுரேஷும் போட்டியிட்டனர். இதில், கே.சுரேஷ் 8 முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  

ஜுன் 24-ம் தேதி கூடிய நாடாளுமன்ற முதல் நாள் கூட்டத்தில் தற்காலிக மக்களவைத் தலைவராக கே.சுரேஷை தேர்ந்தெடுக்காதது தான் எதிர்க்கட்சிகளின் புகாராக இருந்தது.

மேலும், துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கோரியது. இதில், இருவருக்கும் ஒருமித்த கருத்து வராததால் இப்பதவிக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், அதிக வாக்குகளை பெற்ற ஓம் பிர்லா 18-வது மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இவர், இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இணைந்து ஓம் பிர்லாவை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

  
   Bookmark and Share Seithy.com



8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்!
[Saturday 2024-06-29 06:00]

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.



'வெளியே வந்த ஹேமந்த் சோரன்' - தமிழக முதல்வர் வரவேற்பு!
[Saturday 2024-06-29 06:00]

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.



'மதுவிலக்கு அமலாக்க சட்டத்திருத்தம்'- முதல்வர் அறிவிப்பு!
[Saturday 2024-06-29 06:00]

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



தமிழக அரசியலில் எம்ஜிஆரை பின்பற்றும் விஜய்: அரசியல் பரப்பில் எழுந்துள்ள கேள்விகள்!
[Friday 2024-06-28 19:00]

தமிழக நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய்யின் அரசியல் நகர்வுகள், முன்னாள் நடிகர்களாக இருந்து பின்னர் முதலமைச்சர்களாக உயர்ந்த எம்.ஜி.ராமசந்திரன் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ஆம் மற்றும் 12 ஆம் தரங்களில் சித்திபெற்ற மாணவர்களை கௌவிக்கும் நிகழ்வை இன்று (28) விஜய் நடத்தியுள்ள நிலையிலேயே இந்த கருத்து வெளிப்பட்டுள்ளது.



சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய விவகாரம்: கர்நாடக முன்னாள் முதல்வருக்கு எதிராக குற்றச்சாட்டு!
[Friday 2024-06-28 19:00]

சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பா உட்பட்ட மூவர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தகாத முறைக்கு உட்படுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் குற்றப் புலனாய்வுத் துறையினர், தமது குற்றப்பத்திரிகையில் இந்த குற்றத்தையும் சேர்த்துள்ளனர்.



சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்திலேயே எச்சிலை துப்பும் தமிழக அமைச்சர்!
[Friday 2024-06-28 19:00]

தமிழக சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் இடத்தின் கீழேயே எச்சிலை துப்பும் அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ பரவி வருகிறது. கடந்த 20 -ம் திகதி கூடிய தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. இரு வேளைகளும் பல்வேறு துறை மீதான விவாதம் நடத்தப்படுகின்றன.



9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் மோதிரத்தை பரிசாக வழங்கிய விஜய்!
[Friday 2024-06-28 19:00]

தமிழக வெற்றி கழகத்தின் விருது வழங்கும் விழாவில் 9 மாணவர்களுக்கு வைர கம்மல் மற்றும் வைர மோதிரத்தை விஜய் வழங்கினார். தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இன்று நடைபெற்று வருகிறது.



வனப்பகுதி ஓரத்தில் கிடந்த சாக்கு மூட்டை: போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
[Friday 2024-06-28 06:00]

தாளவாடி அருகே வனப்பகுதி ஓரத்தில் சாக்கு மூட்டையில் மனித எலும்புகள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாப்புரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது.



கள்ளக்குறிச்சி சம்பவம்: உயிரிழப்பு மேலும் அதிகரிப்பு!
[Friday 2024-06-28 06:00]

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் மேலும் 60க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள சாராய குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.



அதிமுகவுக்கு திடீரென ஆதரவு குரல் கொடுத்த சீமான்!
[Friday 2024-06-28 06:00]

கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக மேற்கொண்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்திற்கு சிபிஐ விசாரணை கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் 61 பேர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.



வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கல்: முதியவர் கைது!
[Thursday 2024-06-27 06:00]

ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.



நடிகர் விஜய்க்கு ராகுல்காந்தி நன்றி!
[Thursday 2024-06-27 06:00]

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக மோடி கடந்த 9ஆம் தேதி பதவியேற்றார். அதனை தொடர்ந்து 18வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (24-06-24) தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



'சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்' - பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்!
[Thursday 2024-06-27 06:00]

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். அதில், “இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் சம உரிமையும், சம வாய்ப்பும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற வழிவகை செய்ய சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று இப்பேரவை கருதுகிறது.



தமிழக பாஜக தலைவரின் லண்டன் மர்மம்!
[Wednesday 2024-06-26 16:00]

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது.



பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
[Wednesday 2024-06-26 16:00]

நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் தேர்தல் இன்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மக்களவையின் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவை பிரதமர் மோடியும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுயும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து அவரை வாழ்த்தினர்.



கள்ளச்சாராய விவகாரத்தில் குஷ்பு ஆவேசம்!
[Wednesday 2024-06-26 16:00]

தினக்கூலி தொழிலாளர்களுக்கு கள்ளச்சாராயம் கிடைக்கிறது என்றால் பொலிஸுக்கு எப்படி தெரியாமல் இருக்கும் என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக கள்ளச்சாராய வியாபாரிகள் உட்பட 20 -க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும், இதை விசாரிக்க சிபிசிஐடி விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: பெற்றோர் குற்றச்சாட்டு!
[Wednesday 2024-06-26 06:00]

திருச்சியில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் இந்த உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்து டோல் பிளாசா அருகே தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி,பொறியியல் கல்லூரி, கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் தெருவைச் சேர்ந்த அமமுக நகர செயலாளர் பாலாஜியின் மகள் தாரணி (வயது 19) விடுதியில் தங்கி பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.



'இந்திரா காந்தி சிலையின் சர்ச்சைகளும் சென்டிமென்ட்களும்'- கேள்விகளை அடுக்கிய கராத்தே தியாகராஜன்!
[Wednesday 2024-06-26 06:00]

சென்னையில் இந்திரா காந்திக்கு சிலையை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சுவாமிநாதன் அறிவித்திருக்கும் நிலையில், இந்திரா காந்தி சிலை அமைப்பதில் சர்ச்சைகள் மற்றும் சென்டிமென்ட்கள் இருப்பதாக பாஜக நிர்வாகியான கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக சட்டமன்றத்தில் 24 ஆம் தேதி செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சுவாமிநாதன் சென்னையில் 50 லட்சம் ரூபாய் செலவில் இந்திரா காந்திக்கு சிலை அமைக்கப்படும் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டார். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்பதாக தெரிவித்திருக்கிறார்.



மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு!
[Wednesday 2024-06-26 06:00]

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.



"வாழ்க உதயநிதி ஸ்டாலின்" - தமிழக எம்பிக்கள் பதவியேற்கும் போது முழக்கம்!
[Tuesday 2024-06-25 18:00]

மக்களவையில் தமிழ்நாட்டு எம்பி-க்கள் இன்று பதவியேற்கும்போது சில எம்பிக்கள் அண்ணா, பெரியார், கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் வாழ்க என்று முழக்கமிட்டனர். இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, கடந்த 9-ம் திகதி பிரதமர் மோடி தலைமையிலான புதிய கூட்டணி அரசு பதவி ஏற்றது. அவருடன் 72 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர்.


NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா