Untitled Document
October 6, 2024 [GMT]
“முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்” - அமைச்சர் உதயநிதி!
[Monday 2024-07-08 06:00]

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

  

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி அடுத்துள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்களின் மகிழ்ச்சியும், எழுச்சியும் திமுகவின் வெற்றியைக் காட்டுகிறது. விக்கிரவாண்டியில் உயர்மட்ட பாலம், சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கடந்த 3 வருடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள், மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டும். விக்கிரவாண்டியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். முண்டியம்பாக்கம் முதல் கொசப்பாளையம், ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

வாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும். புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். ரூ.62 கோடி மதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



“இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கை பார்க்குமோ?” - ராமதாஸ்!
[Saturday 2024-10-05 06:00]

இன்னும் எத்தனை குடும்பங்கள் வீதிக்கு வருவதை அரசு வேடிக்கைப் பார்க்குமோ? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளுக்கு நாள் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்து வருகிறது. தீபஒளி திருநாள், ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல் திருநாள் ஆகியவற்றையொட்டி அக்டோபர் 5-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை 100 நாட்களுக்கு ரூ. 100 கோடி பரிசு வெல்லலாம் என்று ஆசை காட்டி ஆன்லைன் சூதாட்ட நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்து வருகிறது.



“தமிழிசை செளந்தரராஜன் மீது மிகுந்த மதிப்பு உள்ளது” - திருமாவளவன்!
[Saturday 2024-10-05 06:00]

கடந்த அக்.2 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெற்றது. அதில் விசிக தலைவர் தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''காந்தி மது ஒழிப்பிற்கு போராடியவர். அவருக்கு இவர் மரியாதை செய்யவில்லை மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார். அவருடைய கொள்கைக்கு அது எதிராக இருக்குமோ என்று தமிழிசை சொல்லியுள்ளார்.



“அரசு மருத்துவமனைகளில் இத்தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” - இபிஎஸ்!
[Saturday 2024-10-05 06:00]

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு போடப்படும் DPT Diphtheria-pertussis-tetanus எனும் தடுப்பூசி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாட்டில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.



“கடவுள் பக்தி இருந்தால் சந்திரபாபு நாயுடு மன்னிப்பு கேட்க வேண்டும்” - ஜெகன் மோகன்!
[Friday 2024-10-04 20:00]

ஆந்திராவில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின் போது, திருப்பதி ஏழுமலையான கோயிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்தது.



கனல் கண்ணன் மீதான வழக்கு: நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு!
[Friday 2024-10-04 20:00]

இந்து முன்னணி அமைப்பு , ‘இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம்’ என்ற ஒன்றை கடந்த 2022ஆம் ஆண்டு மேற்கொண்டது. அப்பயணத்தின் நிறைவு விழாவில் பேசிய திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன், “ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனத்திற்காக செல்கின்றனர். ஆனால் அக்கோவிலின் எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அது எப்பொழுது உடைக்கப் படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்” என்று பேசியிருந்தார்.



மது போதையில் சாலையோரம் மயங்கிக் கிடந்த பள்ளி மாணவி!
[Friday 2024-10-04 20:00]

சேலம் பகுதியில் உள்ள ஒரு சாலையோரத்தில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மது போதையில் மயங்கிக் கிடந்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே மாணவி வன்கொடுமைக்கு ஆளானதாகத் தகவல் பரவியது. இதனைத் தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர்.



பவன் கல்யாணுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின்!
[Friday 2024-10-04 20:00]

சனாதன தர்மம் விவகாரத்திற்கு உதயநிதியை தாக்கி பவன் கல்யாண் பேசிய நிலையில், உதயநிதி பதில் கொடுத்துள்ளார். திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள். இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன்.



பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி!
[Friday 2024-10-04 06:00]

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று (03.10.2024) நடைபெற்றது. இதில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, ​​“சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ. 63 ஆயிரத்து 246 கோடியில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாகவும், முக்கியமான பொருளாதார மையமாகவும் உள்ளது. 119 கி.மீ. நீளமுள்ள 2 ஆம் கட்டத் திட்டம் 3 தாழ்வாரங்களாகப் பிரிக்கப்பட்டு 120 மெட்ரோ ரயில் நிலையங்களைக் கொண்டிருக்கும்.



ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்!
[Friday 2024-10-04 06:00]

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கைது செய்யப்பட்டனர்.



ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது!
[Friday 2024-10-04 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு தொடர்ந்து சாதித்து வரும் விவசாயிகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான ‘பசுமை முதன்மையாளர் விருது’ கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த சமவெளியில் மிளகு சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்பதை சாதித்துக் காட்டிய செந்தமிழ்செல்வன் மற்றும் நீர்நிலை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளில் செயல்பட்ட மரம் தங்க. கண்ணன் ஆகிய ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.



அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமிக்க முடிவு!
[Thursday 2024-10-03 18:00]

விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல அரசு பேருந்துகளில் பணிப்பெண்களை நியமனம் செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள அரசு சொகுசு பேருந்துகளில், விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்களை நியமனம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.



கையில் தேசிய கொடியுடன் சித்தராமையாவின் ஷூவை கழற்றிய உதவியாளர்!
[Thursday 2024-10-03 18:00]

கையில் தேசிய கொடியை வைத்துக்கொண்டே சித்தராமையாவின் ஷூவை கழற்றிய உதவியாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேச தந்தை காந்தியடிகளின் பிறந்த நாள் விழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 2 -ம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அரசு தினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று காந்தி ஜெயந்தி நாளில் இந்தியா முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.



"கட்சி பெயரை சொல்லி ரூ.5 கோடி வசூலித்திருக்கிறார்கள்" - நிர்வாகிகள் விலகிய நிலையில் சீமான் பேச்சு!
[Thursday 2024-10-03 18:00]

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் விலகினார். அதனை தொடர்ந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் கட்சியில் இருந்து விலகினார். இவர்கள் கட்சியில் இருந்து விலகியது மட்டுமல்லாமல் சீமான் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.



தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
[Thursday 2024-10-03 18:00]

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



‘மதுக்கடைகளை மூடுவது குறித்து முதல்வர் தெரிவித்தது என்ன?’ - திருமாவளவன் எம்.பி. பேச்சு!
[Thursday 2024-10-03 06:00]

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நேற்று (02.10.2024) நடைபெற்றது. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய அளவில் மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். மேலும் 13 தீர்மானங்களை வாசித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.



“எல்லா மாநிலமும் சேர்ந்தால் தான் மதுவை ஒழிக்க முடியும்” - அமைச்சர் ரகுபதி!
[Thursday 2024-10-03 06:00]

சென்னை காந்தி மண்டபத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு மது பாட்டில்கள் இருந்ததாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநரின் இந்த குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.



‘ஊராட்சிகள், பேரூராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு’ - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்!
[Thursday 2024-10-03 06:00]

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரத்தையொட்டியுள்ள சி. கொத்தங்குடி, உசுப்பூர், பள்ளிப்படை, லால்புரம், சி. தண்டேஸ்வர நல்லூர், அண்ணாமலை நகர் பேரூராட்சி உள்ளிட்ட 8 ஊராட்சி 1 பேரூராட்சியைச் சிதம்பரம் நகராட்சியுடன் இணைத்து சிதம்பரம் நகராட்சியைப் பெருநகராட்சியாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைத் தமிழக அரசு செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.



கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவர்களை வெயிலில் அமரவைத்த அவலம்!
[Wednesday 2024-10-02 17:00]

கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெயிலில் அமரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் 100 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தாததால் பள்ளிக்குள் அவர்களை அனுமதிக்கவில்லை.



தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
[Wednesday 2024-10-02 17:00]

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மாலாத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.



56 ஆண்டுகளுக்கு பிறகு விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கண்டுபிடிப்பு!
[Wednesday 2024-10-02 17:00]

விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலானது 56 ஆண்டுகளுக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசம், ரோதங் கணவாய் பகுதியில் அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற பயிற்சி மைய வீரர்கள் கடந்த 2003 -ம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டெடுத்தனர்.


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா