Untitled Document
September 5, 2024 [GMT]
'இளைஞர்கள் சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள்'- கார்த்தி சிதம்பரம் பேச்சால் பரபரப்பு!
[Saturday 2024-07-20 07:00]

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் அவர்களின் கருத்துக்களை கேட்கவும் மாவட்டம் தோறும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.

  

கூட்டத்தில் மாஜி திருநாவுக்கரசர், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் தொகுதி ஜோதிமணி எம்.பி கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தில், சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் பேச்சு சலசலப்பை ஏற்டுத்தியுள்ளது.

அவர் பேசுகையில், ''தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகளால் தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. அதனால், நம் கட்சியில் பலம் இல்லை என்று கூறவில்லை. தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று சிறுபான்மையின மக்கள் விரும்பினார்கள்.

அதனால் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்தார்கள். தமிழ்நாட்டில் ஒரு நேரத்தில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் இருந்தது. தற்போது 3-வது இடத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறோம். அதே நேரத்தில் நம் கட்சியை சில கட்சிகள் தொட்டுவிடும் நிலையில் உள்ளது. கட்சியில் எம்.பிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கட்சி வளர்ந்துவிட முடியாது. உள்ளாட்சி தேர்தல்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள், எம்எல்ஏகள் அதிக அளவில் இருந்தால் தான் கட்சி வளரும். வளர்க்க முடியும்.

தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த கட்சி (திமுக) தற்போது ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் காங்கிரஸ் இடம்பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும். தேர்தலில் நம்மை பயன்படுத்திக் கொள்ளும் கட்சிகள் தேர்தல் முடிந்ததும் விட்டுவிடுகிறார்கள். கூட்டணி கட்சிகள் நம்மை கண்டுகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் சங்கடப்படுகிறார்கள். ஆனால், திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி கட்சிகள் பொது மக்களின் அடிப்படை தேவைகளை, பிரச்சனைகளை பற்றி அறிந்து அவர்களுக்காக பேசி தங்கள் கட்சியின் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.

அதேபோல, நம்முடைய கருத்தை ஆழமாக பதிவு செய்தால்தான் மக்கள் நம்மை திரும்பிப் பார்ப்பார்கள். மக்களிடம் மக்கள் மனதில் நாம் இடம்பிடிக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தட்டு மக்களின் மக்கள் பிரச்சினைகள், உரிமைகளுக்காக பேச வேண்டும். இளைஞர்கள் நம் கட்சியைவிட சீமான், விஜய் கட்சிக்கு செல்கிறார்கள். மக்களின் கவனத்தை இளைஞர்களின் கவனத்தை ஈர்க்க இன்று பல கட்சிகள் வந்துவிட்டது. அதனால் காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கான மாற்றம் வேண்டும்'' என்று பேசினார். இந்தப் பேச்சு கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

  
   Bookmark and Share Seithy.com



பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசு மருத்துவர் கைது!
[Thursday 2024-09-05 06:00]

திருச்சி மேலப்புதூர் பகுதியில், டிஇஎல்சி நிர்வாகத்துக்குட்பட்ட பிஷப் ஹைமன் நினைவு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இது அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியாகும். இங்குக் கிட்டத்தட்ட 50 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு விடுதி உள்ளது. வெளியூரைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் ஹாஸ்டலிலேயே தங்கியிருந்து படித்து வருகிறார்கள். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளவர் கிரேஸ் சகாயராணி. இவரது மகன் சாம்சன்டேனியல். இவருக்கு 31 வயதாகிறது.. லால்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.



பதக்கம் வென்று தாயகம் திரும்பிய வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!
[Thursday 2024-09-05 06:00]

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் பேட்மிட்டன் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் என்ற வீராங்கனையும் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார்.



பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி உறுதிமொழி வாபஸ்!
[Thursday 2024-09-05 06:00]

தமிழக அரசு அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை அண்மையில் நடத்தி இருந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில சர்ச்சைகள் எழுந்திருந்தது. குறிப்பாக விசாகவை சேர்ந்த ரவிக்குமார் எம்பி சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் தான் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மாணவர்கள் உறுதிமொழி ஏற்க பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.



விஜயை மறைமுகமாக விமர்சித்த அமைச்சர்!
[Wednesday 2024-09-04 19:00]

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலுக்கு நுழைந்த நிலையில் தமிழக அமைச்சர் தாமோ அன்பரசன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.



ஒரு மாத சம்பளத்தை வயநாட்டிற்கு கொடுத்த ராகுல் காந்தி!
[Wednesday 2024-09-04 19:00]

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை கொடுத்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.



நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை!
[Wednesday 2024-09-04 19:00]

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக்கூடும்.



பாராலிம்பிக்கில் மூன்று முறை பதக்கம் வென்ற தமிழர்!
[Wednesday 2024-09-04 19:00]

பாராலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்திய தமிழரை பற்றி பார்க்கலாம். தமிழக மாவட்டமான சேலம், பெரியவடகம்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கவேலு மற்றும் சரோஜா. இவர்களின் மூத்த மகன் தான் மாரியப்பன். இவர் 5 வயதில் பள்ளிக்கு நடந்து சென்று போது பேருந்து மோதிய விபத்தில் வலது காலின் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதி முற்றிலும் சேதமானது.



ஆந்திராவில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Wednesday 2024-09-04 06:00]

இந்தியாவில், கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்திய இளம்பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் எலும்புகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினம், அனக்கா பள்ளியை சேர்ந்தவர் 27 வயதுடைய இளம்பெண்ணொருவரின் வயிற்றிலிருந்தே குழந்தையின் எலும்புகள் அகற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மூன்றாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார்.



‘தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.1.5 கோடி அபராதம்’ - இலங்கை நீதிமன்றம் அதிரடி!
[Wednesday 2024-09-04 06:00]

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



ஆதார் புதுப்பித்தல் தொடர்பான வதந்தி: உண்மை கண்டறியும் குழு விளக்கம்!
[Wednesday 2024-09-04 06:00]

சமூக வலைத்தளங்களில், ‘ஆதாரில் கைரேகையைப் புதுப்பிக்கவில்லை என்றால் ரேஷனில் பொருட்கள் கொடுக்கமாட்டார்கள்’ என்று தகவல்கள் (வதந்தி) பரபரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது முற்றிலும் பொய்யான தகவல். ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி அடையாள சரிபார்ப்பின்போது தோல்வி அடையும் (Authentication failure) குடும்ப அட்டைதாரர்களுக்குத் தனியே பதிவேட்டில் கையொப்பம் பெற்று அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.



“சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி!
[Tuesday 2024-09-03 18:00]

திண்டுக்கல் தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும் தலைவருமான வெள்ளிமலை தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டியம்பலம், மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயன், பொதுக்குழு உறுப்பினர் அக்பர், மாவட்ட விவசாய அமைப்பாளர் இல்.கண்ணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வைத்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு மாவட்டச் செயலாளரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.



பெண் காவலர் மீது தாக்குதல்: போலீசார் தீவிர விசாரணை!
[Tuesday 2024-09-03 18:00]

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிக்குமார். இவர் நேற்று (02.09.2024), சரக்கு வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டம், கேசவநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த காளிக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற திருச்சுழி போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காளிக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டைகளை கண்டுபிடித்த அரசுப்பள்ளி மாணவர்கள்!
[Tuesday 2024-09-03 18:00]

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், காமன்தொட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலக் கல்திட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலைப் பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.



தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: உயிரை காப்பாற்றிய செயற்கை தொழில்நுட்பம்!
[Tuesday 2024-09-03 18:00]

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகே உள்ள மோகன் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.



பாரா ஒலிம்பிக்கில் கலக்கிய தமிழக வீராங்கனைகள்!
[Tuesday 2024-09-03 06:00]

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனையிடம் 21க்கு17, 21க்கு10 என்ற செட் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் டென்மார்க் வீராங்கனையை 21க்கு 12, 21க்கு8 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தியுள்ளார்.



எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!
[Tuesday 2024-09-03 06:00]

கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், ‘தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளனர்’ என்று கூறியிருந்தார். மேலும் இது தொடர்பாக மேலக்கரூர் பொறுப்பு சார்பதிவாளரும் கரூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில், ‘போலியான ஆவணங்களைக் கொண்டு தன்னை மிரட்டி நிலத்தைப் பதிவு செய்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.



“ஃபார்முலா 4 கார் பந்தயம் வரலாற்றில் முக்கிய மைல் கல்” - தமிழக அரசு பெருமிதம்!
[Tuesday 2024-09-03 06:00]

சென்னையில் நடத்திய ஃபார்முலா 4 கார் பந்தயம் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, தெற்கு ஆசியாவிற்கே புதிய பெருமை தந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்துள்ள ஃபார்முலா 4 கார் பந்தயம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.



“தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கடுகளவும் குறைந்த பாடில்லை” - இ.பி.எஸ் கண்டனம்!
[Monday 2024-09-02 19:00]

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர்படுத்துவதிலும், போதைப் பொருள் புழக்கத்தை ஒழிப்பதிலும் கவனம் செலுத்துமாறு அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “திமுக அரசின் விளம்பரங்களுக்கு அப்பால் செய்திகளைப் பார்த்தால், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளும் போதைப்பொருள் புழக்கமுமே அரசின் உண்மை அடையாளங்களாக நாளிதழ்களை அலங்கரிக்கின்றன.



நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுமி பரிதாப பலி!
[Monday 2024-09-02 19:00]

திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசிப்பவர் ஜான் ஜுடிமெயில். இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மகள், திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று (01-09-240 இரவு சிறுமி வழக்கம்போல் நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். காலையில் அவர் கண் விழிக்காததால் அவரது பெற்றோர் எழுப்பி பார்த்தபோது அவர் கண் விழிக்காததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அருகில் உள்ள ஒரு மருத்துவரை அழைத்து சோதித்துப் பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரியவந்தது.



இரவில் படிப்பு, பகலில் சமோசா விற்பனை: நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்!
[Monday 2024-09-02 19:00]

தினமும் 5 மணி நேரம் சமோசா விற்று வேலை செய்து கொண்டே மாணவர் ஒருவர் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், நொய்டாவை சேர்ந்த மாணவர் சன்னிகுமார்(18). இவர் 12 -ம் வகுப்பு படித்து வந்து பகுதி நேரமாக சமோசா கடை நடத்தி விற்பனை செய்து வந்தார். இவருக்கு மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு இருந்ததால் நீட் தேர்வுக்கும் படித்து வந்தார். அதன்படி கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார்.


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா