Untitled Document
September 21, 2024 [GMT]
'மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்' - ராமதாஸ் வலியுறுத்தல்!
[Saturday 2024-09-21 07:00]

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க  தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

  

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவு-களை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மருத்துவக் கழிவுகளை அறிவியல்பூர்வமாக கையாள்வதாகக் கூறி தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லாததால், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சேகரித்து வரப்படும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு பதிலாக நிலத்தில் புதைக்கின்றனர். மனித உடல்களின் பாகங்களைக் கூட பூமியில் புதைப்பது, பாதுகாப்பற்ற முறையில் எரிப்பது போன்ற செயல்களில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதனால், அந்தப் பகுதியில் நிலத்தரி நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் நோய் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும் என்றாலும் கூட, சுற்றுச்சூழலை கெடுக்கும் அந்த தனியார் நிறுவனத்தை அகற்றுவதற்கு பதிலாக தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்கள் விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, மூடப்பட்ட நிலையில், அதே நடவடிக்கையை போச்சம்பள்ளி மருத்துவக் கழிவு மேலாண்மை ஆலை மீது எடுக்க அரசு தயங்குவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிறுவனத்திற்கு அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தான் என்று இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கழிவுகள் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, வழியாக கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் கேரளத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் அப்பட்டமாக கொட்டப்படுகின்றன. இரு மாநில எல்லையில் சோதனைச் சாவடிகள் இருந்தாலும் கூட, அவற்றைத் தாண்டி மருத்துவக் கழிவுகள் ஏற்றப்பட்ட சரக்குந்துகள் தமிழ்நாட்டுக்குள் எளிதாக நுழைகின்றன. கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் எந்த பயனும் ஏற்படுவது இல்லை.

மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக்கழிவுகள் முறையாக அழிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும்படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

அத்தகைய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராக இருப்பதாக நீதிமன்றங்களில் தமிழக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் கூட, இன்று வரை அது சாத்தியமாகவில்லை. கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதையும், தமிழகத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களில் அரைகுறையாக கையாளப்பட்டு புதைக்கப்படுவதையும் தடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளும், அது சார்ந்த சிக்கல்களும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி: பாஜக முக்கிய நிர்வாகி மீது போலீசில் புகார்!
[Saturday 2024-09-21 07:00]

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து வெளியான தகவல் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலின் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது குறித்தும், கடந்த ஆட்சியின்போது லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்தும் இன்று (20.09.2024) மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலருக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். திருப்பதி ஏழுமையான் கோயிலின் மாண்பு, பக்தர்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மாணவன் மீது பிளேடால் தாக்குதல்: பள்ளியில் நிகழ்ந்த விபரீதம்!
[Saturday 2024-09-21 07:00]

பள்ளியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், சக மாணவர் பிளேடால் கிழித்ததில் மாணவர் ஒருவர் வெட்டு காயத்துடன் மருத்துமனையில் அனுமதி. வேலூர் மாவட்டம் அரியூர் அடுத்த ஊசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பிரில் படிக்கும் இரு மாணவர்களிடையே பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட தகராறில் (திலீப் குமார்) என்ற மாணவனை சக மாணவன் பிளேடால் சரமாரியாக கிழித்துள்ளார். இதில் மாணவனுக்கு (திலீப் குமார்) தலை, முதுகு மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.



பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு? - தமிழக அரசு கொடுத்த விளக்கம்!
[Friday 2024-09-20 18:00]

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் சேர்க்கப்படும் நெய்யில் பன்றி இறைச்சி கொழுப்பு கலப்படம் செய்யப்படுவதாகவும் தகவல் பரவியது.



பள்ளி மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ்: ஆசிரியர் மீது நடவடிக்கை!
[Friday 2024-09-20 18:00]

அரசு மகளிர் பள்ளியில் 12 -ம் வகுப்பு மாணவிக்கு வளைகாப்பு நடத்துவது போல ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளில் சிலர், சக மாணவி ஒருவருக்கு வளைகாப்பு நடத்துவது போன்று அழைப்பிதழை செல்போனில் தயார் செய்துள்ளனர்.



2024-ல் இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகள் எவை தெரியுமா?
[Friday 2024-09-20 18:00]

2024-ம் ஆண்டில் பொதுமக்கள் பலரால் விரும்பப்படும் இந்திய பிராண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2024 -ம் ஆண்டின் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலின் தரவரிசையில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உள்ளது.



நெடுஞ்சாலையின் பெரிய பள்ளத்திற்கு எலி தான் காரணம்: அதிகாரியின் பதிலால் உடனே பணிநீக்கம்!
[Friday 2024-09-20 18:00]

டெல்லி - மும்பைக்கு இடையே போடப்பட்ட நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பள்ளத்திற்கு எலி காரணம் என்று கூறிய அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். டெல்லி - மும்பைக்கு இடையே 1,386 கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலை போடப்பட்டு வருகிறது. இந்த நெடுஞ்சாலை அமைத்தால் டெல்லியில் இருந்து மும்பைக்கு செல்வதற்கு 24 மணிநேரம் என்பதில் இருந்து 12 முதல் 14 மணிநேரமாக குறையும்.



கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!
[Friday 2024-09-20 06:00]

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.



திருந்தாத பைக் திருடன்: சுருட்டி அள்ளிய கீரமங்கலம் போலீஸ்!
[Friday 2024-09-20 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலையுயர்ந்த பைக்களை கஞ்சா கடத்தல் கும்பல்கள் திருடி கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திவிட்டு சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டு வேறு பைக்களை திருடிக் கொள்கின்றனர். அதேபோல் சிசி குறைவான பைக்களை திருடும் கும்பல் விலை குறைவாக விற்றுச் செல்கின்றனர்.



'கிழிந்த ஓலைக் குடிசை; அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் சீட்'-வேதனையளிக்கும் அங்கன்வாடிகள்!
[Friday 2024-09-20 06:00]

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழிந்த ஓலைக் கொட்டகையிலும், அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் கொட்டகையிலும் சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது வேதனை அளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சியில் சிறு குழந்தைகள் பயிலும் 4 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இதில் கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் 1997-1998 ம் ஆண்டு கட்டிடம் கட்டி பிரகதம்பாள்புரம் அங்கன்வாடி மையம் செயல்பட்டுள்ளது.



வள்ளலார் தெய்வ நிலைய நிலம் ஆக்கிரமிப்பு: 269 பேரையும் எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவு!
[Thursday 2024-09-19 18:00]

வடலூரில் சர்வதேச வள்ளலார் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் பல்வேறு வழக்குகள் சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகிறது.



பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து தைத்த மருத்துவர்கள்!
[Thursday 2024-09-19 18:00]

பிரசவத்தின் போது வயிற்றில் துணிவைத்து மருத்துவர்கள் தைத்ததால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதனை அகற்றியுள்ளனர். இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், அம்லா பகுதியில் காயத்ரி ராவத் என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கடுமையான வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



சென்னையில் பயங்கரம்: பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர்!
[Thursday 2024-09-19 18:00]

சென்னை துரைப்பாக்கத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து அடைக்கப்பட்ட சூட்கேஸ் கிடைத்துள்ளது. சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.



திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு: சந்திரபாபு நாயுடு பகீர் குற்றச்சாட்டு!
[Thursday 2024-09-19 18:00]

ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டு பிரசாதத்தில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது.



வக்ஃப் போர்ட்டின் புதிய சேர்மன் யார்?
[Thursday 2024-09-19 06:00]

தமிழ்நாடு வஃக் போர்டின் புதிய சேர்மனாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் நவாஸ்கனியை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. நவாஸ்கனி, ராமநாதபுரம் எம்.பி.யாக இருக்கிறார். தலைவராக இருந்த அப்துல் ரஹ்மான் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய தலைவராக திமுகவை சேர்ந்த ஒரு முஸ்லீம் பிரமுகருக்கு தர வேண்டும் திமுக தலைமையிடம் காய்கள் நகர்த்தப்பட்டிருந்தன.



பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை இறந்தது: போலீசார் தேடிய வாலிபர் கைது!
[Thursday 2024-09-19 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள ஒரு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 15 ந் தேதி மாலை வீட்டில் இருந்த மாணவிக்கு திடீர் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவரது தாயார் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற 108 ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.



விஏஓ கொலை வழக்கு: நீதிமன்றத்தை நாடிய குற்றவாளிகள்!
[Thursday 2024-09-19 06:00]

கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளின் ஜாமீன் மற்றும் தண்டனை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அடுத்துள்ள முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த லூர்து பிரான்சிஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.



"உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என தெரிந்தது தான்" - சீமான் காட்டம்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல் பரவி வருவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.



‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
[Wednesday 2024-09-18 17:00]

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.



இஸ்ரோவின் அடுத்த இலக்கு - ரெட் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சரவை!
[Wednesday 2024-09-18 17:00]

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தொடர் முயற்சியால் இறுதிக்கட்டத்தை எட்டி, திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் 14/09/2023 அன்று இறங்கி சாதனை படைத்தது. இதனால் நிலவில் தென் துருவத்தில் முதன் முதலில் கால் பதித்து சாதித்து காட்டியது இஸ்ரோ.



அம்பானி வீட்டு திருமணத்திற்கு வர நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டாதா?
[Wednesday 2024-09-18 17:00]

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு நடிகை பதில் அளித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா