Untitled Document
December 3, 2024 [GMT]
மணிப்பூரில் மீண்டும் வன்முறை!
[Sunday 2024-11-17 05:00]

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரங்கேறி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அரங்கேறி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் ஜெரிபாம் மாவட்டத்தில் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பல இடங்களில் மீண்டும் வன்முறைகள் வெடித்திருக்கிறது. இதனால் அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் குறிவைத்து தாக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

  

முன்னதாகவே மணிப்பூர் மாநிலத்தில் ஆங்காங்கே இணையதள சேவைகள் முடக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் வன்முறை சம்பவம் காரணமாக பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இம்பால் மேற்கு, கிழக்கு, பிஷ்ணுபூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மெய்தி குக்கி இன மக்களிடையே வன்முறைகள் வெடித்து வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண உதவிகள் வழங்கிய தவெக தலைவர் விஜய்!
[Tuesday 2024-12-03 17:00]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழக அமைச்சர் மீது சேற்றை வீசிய மக்கள்: வெள்ள பாதிப்பு குறித்து கேட்க சென்றபோது பரபரப்பு!
[Tuesday 2024-12-03 17:00]

வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிய ஆய்வுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் - அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன்!
[Tuesday 2024-12-03 17:00]

திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் என அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலை இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான அனுமோகன் கூறியுள்ளார். நிலச்சரிவில் நிலைகுலைந்த திருவண்ணாமலை தமிழ்நாட்டின் கோயில் நகரமான திருவண்ணாமலையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் அண்ணாமலையார் மலையின் கீழ் சரிவு ஏற்பட்டது.



ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
[Tuesday 2024-12-03 17:00]

ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 472 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் 26-ம் திகதி விடுதலையானார்.



‘18 மீனவர்கள் கைது’ - இலங்கை கடற்படை அதிரடி!
[Tuesday 2024-12-03 08:00]

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-12-03 08:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



'நெஞ்சை பதற வைக்கிறது, ஆழ்ந்த அனுதாபங்கள்' - தவெக தலைவர் விஜய் இரங்கல்!
[Tuesday 2024-12-03 08:00]

திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. 20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது.



எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்திவைப்பு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



UPSC தேர்வில் வென்று பொறுப்பேற்க வந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் மரணம்!
[Monday 2024-12-02 16:00]

பயிற்சியை முடித்துவிட்டு பதவியேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் பர்தன் (26). இவர், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடக பொலிஸ் அகாடமியில் முடித்தார்.



இந்தியா - ரஷ்யா இணைந்து உருவாக்கிய அதிவேக BrahMos ஏவுகணையை வாங்க 3 நாடுகள் ஆர்வம்!
[Monday 2024-12-02 16:00]

இந்தியா மற்றும் ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (BrahMos) பிரபலமடைந்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி வரும் பிலிப்பைன்சுக்கு, பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளது.



எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு: 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.



‘பயணிகளின் கவனத்திற்கு’ - முக்கிய ரயில் சேவைகள் ரத்து!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.



‘10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் அறிவிப்பு!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.



27 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது!
[Monday 2024-12-02 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக குட்கா பொருட்களை பெரியநாயகி புரத்தைச் சேர்ந்த சுல்தான் மகன் பாரூக்(65), மொத்தமாக விற்பனை செய்வதாக வந்த புகார் வெளியானது.



கரையை கடந்தது ஃபெஞ்சல் புயல்: மிதமானது முதல் கன மழை தொடர வாய்ப்பு!
[Sunday 2024-12-01 06:00]

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையை கடந்துள்ளது. வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை நள்ளிரவில் மகாபலிபுரம் - புதுச்சேரி இடையே கரையை கடந்துள்ளது. இதனையடுத்து, புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.



'381 இடங்களில் தேங்கிய மழைநீர், 3 பேர் உயிரிழப்பு' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!
[Sunday 2024-12-01 06:00]

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. மரக்காணம் அருகே புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் அந்த பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. தொடர் கனமழை காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.



பட்டாக் கத்தியை காட்டி மிரட்டிய இந்து முன்னணி பொறுப்பாளர்!
[Sunday 2024-12-01 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கலைஞர் சாலையில் நகைக்கடை நடத்தி வருபவர் கௌரிசங்கர். சம்பவத்தன்று 3 பேர் கொண்ட ரவுடி கும்பல் ஒன்று கலைஞர் சாலையில் உள்ள ஒரு துணிக்கடையில் பணம் கேட்டு மிரட்டி விட்டு அந்தக் கடையில் விற்பனைக்காக தொங்கிய குல்லாவை எடுத்து மாட்டிக் கொண்டு அருகில் இருந்த கௌரிசங்கரின் நகைக் கடைக்குள் நுழைந்தனர். பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டடுள்ளனர். பணம் கொடுக்காததால் நகை எடை வைக்கும் தராசு மற்றும் கண்ணாடிகளை உடைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.



நாளை 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
[Saturday 2024-11-30 18:00]

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் என்று வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர புயலாக மாறியது. ஃபெங்கல் புயல் மணிக்கு 7 கி.மீ நகர்ந்த நிலையில் தற்போது 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.



இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு தெரியுமா?
[Saturday 2024-11-30 18:00]

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆர்யபட்டாவின் திட்டத்திற்கு ஏற்பட்ட செலவு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். ஏப்ரல் 19, 1975 -ம் ஆண்டில் ஆர்யபட்டா (Aryabhata) என்ற முதல் செயற்கைக்கோளை இந்தியா உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்டது.



எம்பியான பிறகு முதல்முறையாக அண்ணனுடன் சேர்ந்து வயநாடு வந்த பிரியங்கா காந்தி!
[Saturday 2024-11-30 18:00]

காங்கிரஸ் பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி எம்பியான பிறகு முதல்முறையாக வயநாட்டிற்கு வருகை தந்துள்ளார். கேரளாவில் உள்ள வயநாடு மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா