Untitled Document
November 24, 2024 [GMT]
திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியது என்ன?
[Saturday 2024-11-23 06:00]

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் (22.11.2024) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் (22.11.2024) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

  

மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.

நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கட்சியில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும், அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும். கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக, தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக, தொகுதி மக்களின் தேவைகளுக்காக, உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள்” எனப் பேசியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டு: முதல்வர் முக்கிய உத்தரவு!
[Sunday 2024-11-24 18:00]

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சிகள் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள் நடத்தப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்!
[Sunday 2024-11-24 18:00]

நேற்று பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. அது இன்று காலை 5.30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.



“தமிழ் விரோதி பிரச்சாரம் சிலருக்கு பழக்கமாகிவிட்டது” - நிர்மலா சீதாராமன்!
[Sunday 2024-11-24 18:00]

பொங்கல் திருநாளன்று பட்டய கணக்கருக்கான சி.ஏ. தேர்வுகள் நடத்துவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். அதோடு பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதைக் கைவிட வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதியிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.



“அ.தி.மு.க.வில் தொண்டர்கள் கூட முதல்வர் ஆகலாம்” - இபிஎஸ்!
[Sunday 2024-11-24 18:00]

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் சென்னை வானகரத்தில் இன்று (24.11.2024) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விழாவின் சிறப்பு மலரை வெளியிட்டார். அதனை எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடிகர் ரஜினி காந்த் காணொளி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார்.



சென்னையில் 6வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!
[Sunday 2024-11-24 07:00]

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 6வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள பாலிஹோல் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் 6வது நாளாக இன்றும் (24.11.2024) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.



அரசு அருங்காட்சியகத்தில் உலக மரபு வார விழா!
[Sunday 2024-11-24 07:00]

நவம்பர் 19 முதல் 25 வரை உலகம் முழுவதும் ஐநா சபையின் வழிகாட்டுதலின்படி உலக மரபு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக மரபு வாரத்தில் அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை பாதுகாப்பில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அனைவரின் பார்வைக்காக கட்டணம் இல்லாமல் இலவசமாக அனுமதிக்கப்படுகிறது. தொல்லியல் துறை, தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்களால் உலக மரபு நாள் (ஏப்ரல் 18) மற்றும் உலக மரபு வாரம் (நவம்பர் 19 முதல் 25 வரை) சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அவ்வகையில் சிவகங்கை தொல்நடைக்குழு இவ்விழாவை ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. சிவகங்கை அரசு அருங்காட்சியகம், சிவகங்கை தொல்நடைக் குழு, சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் இணைந்து உலக மரபு வாரத்தில் முப்பெரும் விழாவைக் கொண்டாடினர்.



“காங்கிரஸ் கட்சியை வீழ்த்த சதி நடந்துள்ளது” - ஜெய்ராம் ரமேஷ்!
[Sunday 2024-11-24 07:00]

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆளும் மகா யுதி கூட்டணி அரசான பா.ஜ.க - சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மீண்டும் கூட்டணியோடு இந்த தேர்தலை சந்தித்தது. அதே போல், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டது.



பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி!
[Saturday 2024-11-23 18:00]

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். கேரளாவின் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரி ஆகியோர் வயநாடு தொகுதியில் போட்டியிட்டனர்.



மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த விஜய்!
[Saturday 2024-11-23 18:00]

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு நடிகரும், அக்கட்சியின் தலைவருமான விஜய் இன்று விருந்தளித்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் வருகை தந்தனர்.



காதலியை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு: ரயில் முன் பாய்ந்த இளைஞர்!
[Saturday 2024-11-23 18:00]

தமிழக மாவட்டம் விருதுநகரில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய பெற்றோர் சம்மதிக்காததால், இளைஞர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (20). இவர் தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.



"அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி" - நடிகை கஸ்தூரி பேட்டி!
[Saturday 2024-11-23 18:00]

அவதூறு வழக்கில் கைதான நடிகை கஸ்தூரி நிபந்தனை ஜாமினில் வெளியான நிலையில் பேட்டி அளித்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசியது பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது. இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் இருந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



‘ஓய்வுபெற்ற ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்ட்’ - நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
[Saturday 2024-11-23 06:00]

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஓய்வுபெற்ற போலீஸ் ஐ.ஜி. முருகனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் இணை இயக்குநராக பணியாற்றிவர் போலீஸ் ஐ.ஜி. முருகன். இவர் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சம்பந்தப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



தென்காசியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
[Saturday 2024-11-23 06:00]

தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற இருக்கின்ற நிலையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



படகுடன் மோதிய இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்: 2 மீனவர்கள் மாயம்!
[Friday 2024-11-22 18:00]

கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் 13 பேர் கொண்ட மீன்பிடி படகு மோதியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவா கடற்கரை அருகே இந்திய கடற்படை நீர்மூழ்கிக் கப்பலுடன் மீன்பிடிக் படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து, கோவா கடற்கரையில் இருந்து 70 நாட்டிக்கல் மைல்கள் தூரத்தில் நடந்துள்ளது.



“ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - பா.ஜ.க மூத்த தலைவர் நோட்டீஸ்!
[Friday 2024-11-22 18:00]

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் நேற்று முன் தினம் (20-11-24) ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, பா.ஜ.க மூத்த தலைவர் வினோத் தாவ்டே, மற்றும் நபசோபரா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ராஜன் நாயக் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பின் போது ரூ.5 கோடி பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட வீடியோ ஒன்று சமுக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.



வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Friday 2024-11-22 18:00]

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ள நிலையில் நவம்பர் 26 -ம் திகதி அன்று தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது தமிழகம் மற்றும் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளளது.



மருத்துவமனை கழிப்பறையில் பிறந்த குழந்தையை கவ்வி செல்லும் நாய்!
[Friday 2024-11-22 18:00]

மருத்துவமனை கழிப்பறையில் 6 மாத குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை நாய் ஒன்று கவ்வி செல்லும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில், பங்குரா மாவட்டத்தில் உள்ள பெங்கால் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவர் அங்குள்ள கழிப்பறைக்கு சென்ற சமயத்தில் 6 மாத குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த நாய் ஒன்று பச்சிளம் குழந்தையை கவ்வி சென்றது.



'அடுத்தும் திமுக ஆட்சி தான்'- அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!
[Friday 2024-11-22 06:00]

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டியபட்டி, அனுமந்தராயன் கோட்டை, குட்டத்துப்பட்டி, மாங்கரை, புதுப்பட்டி, தெத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில் சுமார் 369.02 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளான அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை, மற்றும் சமுதாயக் கூடத்தினை திறந்து வைத்தார்.



ரஜினிகாந்த் சீமான் திடீர் சந்திப்பு!
[Friday 2024-11-22 06:00]

நடிகர் ரஜினிகாந்த் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்றுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருடன் சந்திப்பு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



அதானிக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்த கென்யா!
[Friday 2024-11-22 06:00]

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 - 24 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்க செய்தி நிறுவனம் குற்றச்சாட்டு வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 20 ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை லாபம் ஈட்டக்கூடிய சூரிய மின்நிலையத் திட்டம் உள்ளிட்ட ஒப்பந்தங்களை பெறுவதற்கு, கவுதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு 265 மில்லியன் டாலர் வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.


 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா