Untitled Document
December 4, 2024 [GMT]
பூத்துக்கு ஒரு அமைச்சர்: வெள்ளத்தில் எங்கே போனாங்க? கிடுக்குப்பிடி போட்ட ஆதவ் அர்ஜுனா!
[Wednesday 2024-12-04 08:00]

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு, இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை, இப்போது வெள்ளம் என்ற பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில், இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் ஏன் ஈடுபடவில்லை என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு, இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை, இப்போது வெள்ளம் என்ற பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில், இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் ஏன் ஈடுபடவில்லை என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

  

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் வட மாவட்டங்கள் பேரழிவைச் சந்தித்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழ்நாடு தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. "எந்த நிறுவனத்திலும் நான் பொறுப்பில் இல்லை.. ரைடு குறித்து ஆதவ் அர்ஜூனா விளக்கம் " ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்திற்குரியது. அதேநேரம், மோசமான இயற்கை பாதிப்புகளை எதிர்கொள்ளும் ஒடிசா மாநிலம் முறையான கட்டமைப்பு வசதிகளையும் மக்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறை திட்டங்களையும் ஏற்படுத்தியது.

அதனால், அங்கு மக்கள் பெரியளவில் இயற்கை பாதிப்புக்கு உள்ளாவதில்லை. ஆனால், தமிழ்நாட்டிலோ ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தால் மக்கள் பாதிக்கபடுவதும் அதற்கு அரசு காரணங்களை மட்டும் சொல்வதுமே வாடிக்கையாக உள்ளது. இதற்கு மனித உயிர்கள் பலியாகியிருப்பதோடு உணவு,உடை போன்ற அடிப்படைத் தேவைக்கே மக்கள் கை ஏந்தும் நிலைமை பெருந்துயர்.

நாம் இந்த பிரச்சனைகளிலிருந்து என்ன பாடம் கற்றோம் என்ற கேள்வியே எஞ்சுகிறது?... இப்பேரிடரால் பலியானவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் சார்ந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மேலும், இப்பகுதியின் எளிய மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது இந்தப் புயல். பலரும் அடிப்படை உணவுக்குக் கூட போராடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு போர்க்கால அடிப்படையில் தமது பணிகளை முடுக்கிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை விரைந்து அறிய அரசு துரித தகவல் மையங்களை (Call Center) உருவாக்குவது அவசியம். சாலைகள் பல பகுதிகளில் துண்டிக்கப்பட்டிருப்பதால் தன்னார்வலர்களால் கூட உதவிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் உள்ளது. எனவே அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி மையங்களை உருவாக்கி அதன் மூலம் தன்னார்வலர்கள் உட்பட அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும். எளிய கடைநிலை மக்கள் வரை மீட்பு பணிகள் சென்று சேர வேண்டிய நிலையில் அரசு இந்த துரித தகவல் மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தகவல்கள் மற்றும் தேவைகளை திரட்டுவது அவசியம்.

அதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை பெற்றுதரும் வாய்ப்பு உருவாகும். எங்களைப் போன்ற தன்னார்வலர்கள் இந்த பெரும் துயரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகள் செய்ய தயாராக இருக்கிறோம். அரசு அதை பயன்படுத்திக் கொள்வது அம்மக்களின் தேவைக்கான அறமான செயல். ஒரு இடைத்தேர்தல் வந்தால் ஆளும் தரப்பு எப்படி இருபது பூத்திற்கு ஒரு அமைச்சர், எம்பி என்று பொறுப்பாளர்களை நியமித்து பம்பரம் போல் களப்பணியை மேற்கொண்டு தேர்தல் வெற்றிக்காக அவர்கள் காட்டும் ஆர்வத்தை இப்போது பெரும் துயரில் மக்கள் சிக்கியுள்ள வேளையில், இடைத்தேர்தல் பாணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை தேவைகளை தீர்க்கும் பணியில் அரசு இயந்திரம் ஏன் செயல்படவில்லை?.

முழு அமைச்சரவையும் இந்த பணியில் பங்கெடுப்பதே அவசியம். "விசிக துணை பொதுச்செயலாளர் ஆனார் லாட்டரி மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா! முழு பின்னணி " குறிப்பாக மைக்ரோ லெவலில் கிளை, ஊராட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்களை பொறுப்பாளர்களை நியமித்து அடிப்படைத் தேவைகளுக்காக கையேந்தி நிற்கும் ஏழை, எளிய மக்களின் துயரை அரசு விரைந்து துடைத்திட வேண்டும். முதன்மையாக விளிம்புநிலை மக்களுக்கு வெள்ள பாதிப்பால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதால் உடனடியாக மருத்துவக் குழுக்களை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசிடம் பேரிடர் நிவாரண நிதி கேட்பது நமது உரிமை. அதில் எந்த சமரசத்திற்கும் இடமில்லை.

தொடர்ந்து, ஒன்றிய அரசு தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு தமிழ்நாட்டிற்கான நிவாரண நிதியை வழங்க மறுப்பது கண்டிக்கத்தக்கது. அதேநேரத்தில், சூழலைக் கருத்தில் கொண்டு இப்பெரும் துயரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தலித் மற்றும் ஏழை, எளிய விவசாய மக்களுக்கு விரைந்து விடியலை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு நம்மை வஞ்சிக்கிறது என்ற காரணத்திற்காகக் காலதாமதப்படுத்தி நம் மக்களை நாம் வஞ்சித்துவிடக் கூடாது. உணவு, உடை, இருப்பிடம் என நம் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உறுதிப்படுத்த வேண்டியது நம் பொறுப்பு. தமிழ்நாட்டிற்கே உரியத் தற்சார்பு பொருளாதாரம் மூலம் நிவாரணங்கள் போர்க்கால அடிப்படையில் வழங்க முடியும்.

கடந்த சில வருடங்களாகக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மக்கள் உயிர் இழப்பையும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து எதிர்கால வாழ்வியல் சிக்கலை சந்திக்கிறார்கள். இதை தடுக்க பேரிடர் நிபுணர்களையும், துறைசார் வல்லுநர்களையும் கொண்ட ஒரு குழுவை அமைத்து,இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையிலும்,மக்களின் வாழ்வியலுக்கு ஊறு விளைவிக்காத முறையில் ஒரு கொள்கை திட்டத்தை ஒடிசா போன்ற மாநிலங்களில் மேற்கொள்வது போல தமிழகத்திலும் மேற்கொள்வது அவசியம். இயற்கை பேரிடர்களை எதிர்கொள்வதில் அரசு இனி விழிப்போடு திட்டங்களை வகுக்க வேண்டும். ' தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’!” என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



மனைவியை காருடன் தீ வைத்து கொன்ற கணவர்: கேரளாவில் பயங்கரம்!
[Wednesday 2024-12-04 17:00]

கணவர் ஒருவர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பத்மராஜன் மற்றும் அனிலா (44). இதில், அனிலா நேற்று தனது ஆண் நண்பர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.



மறக்க முடியாத திருவண்ணாமலை மண் சரிவு: மண்ணில் புதைந்த உடல்களை மீட்ட கமாண்டர் வேதனை!
[Wednesday 2024-12-04 17:00]

திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்ணில் புதைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கமாண்டர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வ.உ.சி. நகர் மலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகள் மீது கடுமையான மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த மண் சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் ஸ்ரீதர் என்பவர் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.



விஜய் அளித்த நிவாரணம் கூட மற்றவர்கள் அளிக்கவில்லையே: விஜய்க்கு சீமான் ஆதரவு!
[Wednesday 2024-12-04 17:00]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நிவாரணம் அளித்ததற்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை சென்னை பனையூரில் தவெக அலுவலகத்திற்கு விஜய் வரவழைத்தார். பின் அவர்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்களை விஜய் வழங்கினார்.



ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சென்ற கார் தடுத்து நிறுத்தம்: பரபரப்பான மாநிலம்!
[Wednesday 2024-12-04 17:00]

சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கார் தடுத்து நிறுத்தம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா மசூதி உள்ளது. இந்த மசூதி உள்ள இடத்தில் கோயில் இருந்ததாகவும், கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாகவும் கூறி உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.



வேலையைக் காட்டிய வெள்ளம்: தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வுகள்?
[Wednesday 2024-12-04 08:00]

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே வங்கக்கடலில் போக்கு காட்டி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒருவழியாக பெஞ்சல் புயலாக உருமாறியது.



வெள்ள பாதிப்புக்கு ரூ.2 ஆயிரம் எப்படி போதும்? - தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை!
[Wednesday 2024-12-04 08:00]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது போதாது என்றும் ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கொடுக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். வங்க கடலில் உருவான 'ஃபெஞ்சல்'புயலால் சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.



ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நிவாரண உதவிகள் வழங்கிய தவெக தலைவர் விஜய்!
[Tuesday 2024-12-03 17:00]

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நிவாரணம் வழங்கினார். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழக அமைச்சர் மீது சேற்றை வீசிய மக்கள்: வெள்ள பாதிப்பு குறித்து கேட்க சென்றபோது பரபரப்பு!
[Tuesday 2024-12-03 17:00]

வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிய ஆய்வுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.



திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் - அதிர்ச்சியை கிளப்பிய அனுமோகன்!
[Tuesday 2024-12-03 17:00]

திருவண்ணாமலை மட்டுமல்ல, பெரிய பெரிய மலைகளும் இனி காணாமல் போகும் என அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலை இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான அனுமோகன் கூறியுள்ளார். நிலச்சரிவில் நிலைகுலைந்த திருவண்ணாமலை தமிழ்நாட்டின் கோயில் நகரமான திருவண்ணாமலையில் திங்கட்கிழமை பிற்பகல் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டது. முதலாவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் அண்ணாமலையார் மலையின் கீழ் சரிவு ஏற்பட்டது.



ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன்? - உச்சநீதிமன்றம் கேள்வி!
[Tuesday 2024-12-03 17:00]

ஜாமீன் பெற்ற உடனேயே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் திகதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால், அவருடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, 472 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி கடந்த செப்டம்பர் 26-ம் திகதி விடுதலையானார்.



‘18 மீனவர்கள் கைது’ - இலங்கை கடற்படை அதிரடி!
[Tuesday 2024-12-03 08:00]

தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
[Tuesday 2024-12-03 08:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேலம், கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (03.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



'நெஞ்சை பதற வைக்கிறது, ஆழ்ந்த அனுதாபங்கள்' - தவெக தலைவர் விஜய் இரங்கல்!
[Tuesday 2024-12-03 08:00]

திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன. 20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது.



எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் தற்போது நிறுத்திவைப்பு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்.ராஜா கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



UPSC தேர்வில் வென்று பொறுப்பேற்க வந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் மரணம்!
[Monday 2024-12-02 16:00]

பயிற்சியை முடித்துவிட்டு பதவியேற்க வந்துகொண்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் பர்தன் (26). இவர், கர்நாடகாவில் கேடராக 2023 பேட்ச் ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடக பொலிஸ் அகாடமியில் முடித்தார்.



இந்தியா - ரஷ்யா இணைந்து உருவாக்கிய அதிவேக BrahMos ஏவுகணையை வாங்க 3 நாடுகள் ஆர்வம்!
[Monday 2024-12-02 16:00]

இந்தியா மற்றும் ரஷ்யா ஒத்துழைப்பில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 3 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய உலகின் அதிவேக ஏவுகணையான பிரம்மோஸ் (BrahMos) பிரபலமடைந்து வருகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடி வரும் பிலிப்பைன்சுக்கு, பிரம்மோஸ் ஏவுகணையை ஏற்கனவே இந்தியா வழங்கியுள்ளது.



எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு: 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு!
[Monday 2024-12-02 16:00]

பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவை குற்றவாளி என்றும், அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 -ம் ஆண்டில் பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா, பெரியார் சிலையை உடைப்பேன் என கூறியது மற்றும் திமுக எம்பி கனிமொழி குறித்து விமர்சனம் வைத்தது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது.



‘பயணிகளின் கவனத்திற்கு’ - முக்கிய ரயில் சேவைகள் ரத்து!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.



‘10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் அறிவிப்பு!
[Monday 2024-12-02 07:00]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.



27 கிலோ குட்கா பறிமுதல் - 2 பேர் கைது!
[Monday 2024-12-02 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் உள்ள சில பெட்டிக் கடைகளில் விற்பனைக்காக குட்கா பொருட்களை பெரியநாயகி புரத்தைச் சேர்ந்த சுல்தான் மகன் பாரூக்(65), மொத்தமாக விற்பனை செய்வதாக வந்த புகார் வெளியானது.


NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா