Untitled Document
January 2, 2025 [GMT]
தமிழக ஆளுநரை தவெக தலைவர் விஜய் சந்தித்த நோக்கம் என்ன?
[Monday 2024-12-30 17:00]

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

  

அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், எல்லா சுழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக துணை நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேசினார்.

அப்போது அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை தொடர்பாக ஆளுநரிடம் மனு அளித்துள்ளார் இச்சந்திப்பின்போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக தமிழக வெற்றி கழகம் வெளியிட்ட அறிக்கையில், "இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து மனு அளித்தோம்.

எங்கள் மனுவில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம்.

மேலும், தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு முழுமையாக வழங்க வேண்டும் என மனுவில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்ட ஆளுநர், அவற்றைப் பரிசீலிப்பதாகக் கூறினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
[Thursday 2025-01-02 18:00]

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது.., அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கால்பந்து போல தூக்கி வீசி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம்: குஷ்பு ஆவேசம்!
[Thursday 2025-01-02 18:00]

அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.



உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 3 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
[Thursday 2025-01-02 18:00]

தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற நான்கு விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மானு பாக்கர் மற்றும் செஸ் உலக சாம்பியனான குகேஷ் ஆகியோருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான கேல் ரத்னா விருது (Khel Ratna Award) அறிவித்துள்ளது.



மு.க.ஸ்டாலின் அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
[Thursday 2025-01-02 18:00]

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.



சதுரங்க வேட்டை படப் பாணியில் ஓட்டுநரை ஏமாற்றிய இளைஞர்!
[Thursday 2025-01-02 07:00]

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் இரிடியம் கலந்த கலசம் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம் டிசம்பர் 31-ந்தேதி இரவு அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் விளாங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜி என்கின்ற ராஜசேகர் (27) என்பவர், விக்னேஷை அணுகி தன்னிடம் தனக்கு சொந்தமான கோயிலில் இருடியம் சக்தி கொண்ட ரூ. 10லட்சம் மதிப்பிலான இரண்டு கோபுர கலசங்கள் இருப்பதாகவும், அதனை விற்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.



“சனாதன தர்மம் சாதி அடிப்படையாகக் கொண்டது” - பினராயி விஜயன் விமர்சனம்!
[Thursday 2025-01-02 07:00]

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா நகரில் சிவகிரி யாத்திரை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தின் மிக முக்கியமான பகுதி ‘சதுர் வர்ணம்’ அடிப்படையிலான ‘வர்ணாஷ்ரம தர்மம்’ ஆகும். அது என்ன நிலைநாட்டியது? ஒருவரின் சாதி அடிப்படையிலான வேலைகள். ஆனால் ஸ்ரீ நாராயண குரு என்ன செய்தார்? ஒருவரின் மதத்தின் அடிப்படையில் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை மீறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.



“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சி” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
[Thursday 2025-01-02 07:00]

தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.



''2026ம் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்''-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!
[Wednesday 2025-01-01 16:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில கழக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து சொல்ல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆகியோர் திண்டுக்கல் நகரில் உள்ள அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



'ஆண்டுக்கு 10,701 அரசு வேலைவாய்ப்புகள், இளைஞர்களின் கனவை எப்படி நனவாக்கும்?' - பாமக ராமதாஸ் கேள்வி!
[Wednesday 2025-01-01 16:00]

'தமிழ்நாட்டில் 2024 & ஆம் ஆண்டில் 10,701 பேருக்கு அரசுப் பணிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பு கோரி சுமார் 60 லட்சம் பேர் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு பத்தாயிரம் பேருக்கு மட்டும் அரசு வேலை வழங்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்பு கனவுகளை ஒருபோதும் நனவாக்காது' என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



பாலியல் வழக்கில் தேடப்படுவோரை கட்சியில் சேர்ப்பதாக குற்றச்சாட்டு: சாட்டையால் அடித்துக்கொண்ட பாஜக நிர்வாகி!
[Wednesday 2025-01-01 16:00]

பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் பதவி வழங்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக நிர்வாகி ஒருவர் தனக்குத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் பாஜகவின் கிழக்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பாஜக உள்கட்சி நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டு எழுந்தது.



'7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்காத காவல்துறை' - அன்புமணி காட்டம்!
[Wednesday 2025-01-01 16:00]

'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என காவல்துறைக்கு பாமகவின் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.



'எங்கும் நலமே சூழட்டும்' - அரசியல் தலைவர்களின் புத்தாண்டு வாழ்த்துகள்!
[Wednesday 2025-01-01 08:00]

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.



பிறந்தது ‘2025’ புத்தாண்டு: ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் மக்கள்!
[Wednesday 2025-01-01 08:00]

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. இதனையடுத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் புத்தாண்டு பிறந்தது. அதே சமயம் இந்தியாவில் 2025ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டிருந்தன.



நர்சிங் மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்: சிங்கப்பூர் வரை நீளும் விசாரணை?
[Wednesday 2025-01-01 08:00]

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் கருக்காகுறிச்சி ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் சௌமியா (வயது 21). புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி 3ஆம் ஆண்டு நர்சிங் மாணவியான இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த 25ஆம் தேதி திடீரென காணாமல் போனார். 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து சௌமியாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!
[Tuesday 2024-12-31 17:00]

தமிழகத்தின் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.



மன்னிப்பு என்பது சீமான் வரலாற்றிலேயே கிடையாது? - சாட்டை துரைமுருகன் பதிலடி!
[Tuesday 2024-12-31 17:00]

மன்னிப்பு என்பது சீமானின் வரலாற்றிலேயே கிடையாது என்று டிஐஜி வருண்குமார் பேசிய கருத்துக்கு சாட்டை துரைமுருகன் பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தம்மிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒரு தொழிலதிபர் மூலம் முயற்சி செய்தார் என டிஐஜி வருண்குமார் புகார் தெரிவித்தார்.



தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது!
[Tuesday 2024-12-31 17:00]

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து, தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சீமான் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



தரமற்ற முறையில் தயாராகும் உணவு: சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு!
[Tuesday 2024-12-31 17:00]

நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகிறது. அதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் அம்மன் உணவகத்தை சீல் வைத்து மூடக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூரியின் அம்மன் உணவகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.



“சீமான் பேச்சில் குழப்பமும், பொய்யும்தான் இருக்கிறது” - வருண்குமார் ஐ.பி.எஸ்.!
[Tuesday 2024-12-31 07:00]

ஐ.பி.எஸ். அதிகாரியான வருண் குமாருக்கும், நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாகச் சீமான் மீது திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் வருண் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் இன்று 30.12.2024) வருண் குமார் ஆஜரானர். அப்போது நீதிபதியிடம் அவர் 30 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்துள்ளார். அதோடு சீமானின் அறிக்கை, வீடியோ உள்ளிட்ட 9 ஆவணங்களை நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



உடலில் கல் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம்: வலையை இழுத்த மீனவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
[Tuesday 2024-12-31 07:00]

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ளது ஆதிபட்டினம். இந்த பகுதியைச் சேர்ந்த முகமது யூசுப் மகன் இப்ராம்ஷா (வயது 38). மீனவரான இவரும், இவரது குழுவினர் 20 பேர் (30.12.2024) காலை 8 மணியளவில் கோடியக்கரை பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வலையை விரித்துவிட்டு கரையில் நின்று கரைவலை இழுத்துள்ளனர். காலை 10.30 மணிக்கு வலை கரைக்கு வந்து சேர்ந்துள்ளது. அப்போது வலையில் சிக்கியுள்ள மீன்களைச் சேகரிக்க வலை இழுத்த மீனவர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Logan-Kumaresh-Homelife-02-02-2021
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா