Untitled Document
January 5, 2025 [GMT]
'7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்காத காவல்துறை' - அன்புமணி காட்டம்!
[Wednesday 2025-01-01 16:00]

'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என காவல்துறைக்கு பாமகவின் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

'பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 நாட்களாகியும் குற்றவாளிகளை பிடிக்கவில்லை என காவல்துறைக்கு பாமகவின் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மாவரம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் கொடிய முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தக் கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

  

சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த திசம்பர் 26-ஆம் தேதி இரவு 7 மணிக்கு அவரது வீட்டிற்கு அருகில் உள்ள கூட்டுறவு பால் சங்கத்திற்கு பால் விற்பனை செய்வதற்காக சென்றிருக்கிறார். ஆனால், அன்றிரவு அவர் வீடு திரும்பாத நிலையில், அடுத்த நாள் காலையில், அங்குள்ள சோளக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் கொடியவர்கள் சிலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து சின்னசேலம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நிர்மலா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு 7 நாட்களுக்கு மேலாகும் நிலையில், குற்றவாளிகள் யார் என்பது இதுவரை அடையாளம் கூட காணப்படவில்லை என்றும், அதற்கான முயற்சிகளில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை தீவிரம் காட்டவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதற்கு வேதனையான எடுத்துக்காட்டு நிர்மலாவின் படுகொலை ஆகும். சின்னசேலத்தை அடுத்த திம்மவரம் சிறிய கிராமம் ஆகும். அங்கு வீட்டிலிருந்து மிகக் குறைந்த தொலைவில் உள்ள கூட்டுறவு பால் சங்கங்த்திற்கு சென்று திரும்புவதற்குள் ஒரு பெண்ணை கொடிய மிருகங்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்திருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று தான் பொருள் ஆகும். கொலை நடந்து ஒரு வாரத்திற்கு மேலாகியும் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை என்றால் காவல்துறையினர் அவர்களின் அடிப்படையான புலனாய்வுத் திறனை இழந்து முடங்கிக் கிடக்கின்றனர் என்று தான் தோன்றுகிறது.

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்படும் கொடிய நிகழ்வுளில் சில அறிவியல்ரீதியிலான ஆய்வுகளும், ஆதாரம் திரட்டும் பணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை திரட்டப்படவில்லை என்றால் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமாகி விடும். புலனாய்வுக்கு உதவும் வகையில் ஏராளமான புதிய தொழில்நுட்பங்கள் வந்து விட்ட நிலையில், ஒரு கொடிய குற்றத்தை செய்தவர்களை காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. குற்றவாளிகளை தப்ப வைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் தான் எழுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் கொடியவன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் ஏற்பட்ட பதற்றமும், வேதனையும் இன்னும் விலகவில்லை. அதற்குள்ளாக அதைவிட கொடிய நிகழ்வு சின்ன சேலத்தில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. அதற்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டிய காவல்துறையும், தமிழக அரசும் அதை மூடி மறைக்க முயல்வது வெட்கக் கேடான விஷயங்கள் ஆகும். இதற்காக அவை தலைகுனிய வேண்டும். இவற்றை வைத்து பார்க்கும் போது நாம் வாழ்வது நாடா, சுடுகாடா? என்ற ஐயம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதற்கு முதன்மைக் காரணம் மதுவும், கஞ்சா, அபின், மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் கிடைப்பது தான். இரண்டாவது காரணம் காவல்துறை அதன் செயல்திறனை இழந்துவிட்டது தான். கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல கொடிய குற்றங்களில் காவல்துறையினரால் துப்புதுலக்க முடியவில்லை. இத்தகைய வழக்குகளின் பட்டியல் மேலும், மேலும் நீண்டு கொண்டே செல்கிறது. இத்தகைய தோல்விகள் குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது காவல் உயரதிகாரிகள் மற்றும் அத்துறையை கவனிக்கும் முதலமைச்சரின் கடமை ஆகும்.

ஆனால், இதுபோன்ற வழக்குகளில் ஆலோசனை வழங்குவது ஒருபுறம் இருக்கட்டும்... இத்தகைய செய்திகளை அறிந்து கொள்வதற்குக் கூட முதலமைச்சர் விரும்புவதில்லை என்பது தான் உண்மையாகும். ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டைக் கூட 2023 அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதலமைச்சர் நடத்தவில்லை. தமிழ்நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஓடுகின்றன; மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர் என்ற பொய்யைத் தவிர வேறு எதையும் கேட்க விரும்பாத மாய உலகில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட முதலமைச்சரை பெற்றதற்கு தமிழ்நாடு என்ன புண்ணியம் செய்ததோ தெரியவில்லை.

தமிழகத்தில் இப்போது நிலவும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இனியும் தொடரக்கூடாது. திம்மவரத்தில் நிர்மலா பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், இனிவரும் காலங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட நிர்மலாவின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், முறையே 4, 3 வயது கொண்ட குழந்தைகள் ஆதரவற்றவர்களாகியுள்ளனர். அவர்களில் கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி!
[Saturday 2025-01-04 18:00]

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்!
[Saturday 2025-01-04 18:00]

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.



பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்!
[Saturday 2025-01-04 18:00]

தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) துறையானது தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பானிபூரி விற்பனையாளர் கடந்த 2023 முதல் 2024-ம் ஆண்டில் ஒன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
[Saturday 2025-01-04 18:00]

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். தமிழக மாவட்டமான திருவள்ளூர், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்யா. இவரது மகள் டான்யா (9) அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின.



'குழந்தை தொட்டியில் விழுந்து சாகவில்லை?' - சந்தேகம் கிளப்பும் ஊர் மக்கள்!
[Saturday 2025-01-04 07:00]

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது.



சடலமாக கிடந்த பத்திரிகையாளர்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!
[Saturday 2025-01-04 07:00]

சத்தீஸ்கர் மாநிலத்தில், செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு எதிராக அறிக்கையை பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி, சுரேஷ் சந்திரகர் செயல்பாடுகள் குறித்து அம்மாநில அரசு விசாரணை நடவடிக்கையை தொடங்கியது.



“குறை சொல்பவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்” - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பதிலடி!
[Saturday 2025-01-04 07:00]

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



“கெஜ்ரிவால் போல் நானும் கண்ணாடி மாளிகை கட்டியிருக்கலாம்” - பிரதமர் மோடி விமர்சனம்!
[Friday 2025-01-03 18:00]

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



லாலு பிரசாத் விடுத்த அழைப்பு: இந்தியா கூட்டணிக்கு வருவாரா நிதிஷ் குமார்?
[Friday 2025-01-03 18:00]

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான பா.ஜ.க மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு, இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு மீண்டும் இணையுமாறு ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில், நிதிஷ் குமாரை ஓரங்கட்டி, வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க திட்டமிட்டு வருவதாகக் கூறப்படும் நிலையில், நிதிஷ் குமாருக்கு லாலு பிரசாத் அழைப்பு விடுத்திருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்: துர்நாற்றம் வீசுவதாக புகார்!
[Friday 2025-01-03 18:00]

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகளை ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து, பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி வழங்கவில்லை.



ராணி வேலு நாச்சியாரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன்- பிரதமர் மோடி!
[Friday 2025-01-03 18:00]

சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட, வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த தினம் இன்று. வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் வேலு நாச்சியார் சிறந்து விளங்கியவர். ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடியவர் வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.



பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்!
[Friday 2025-01-03 06:00]

பேஸ்புக் காதலியை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்ற இந்திய இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாதல் பாபு என்ற இளைஞர், பாகிஸ்தானைச் சேர்ந்த சனா ராணி(21) என்ற பெண்ணுடன் 2.5 ஆண்டுகள் பேஸ்புக் மூலம் காதலித்து வந்துள்ளார்.



அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
[Thursday 2025-01-02 18:00]

தமிழக அரசு ஊழியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெளியான செய்தி குறிப்பில் கூறியதாவது.., அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



கால்பந்து போல தூக்கி வீசி பெண்களை கேவலப்படுத்த வேண்டாம்: குஷ்பு ஆவேசம்!
[Thursday 2025-01-02 18:00]

அண்ணா பல்கலை கழக மாணவி வன்கொடுமை விவகாரம் குறித்து பாஜக நிர்வாகி குஷ்பு கருத்து தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.



உலக செஸ் சாம்பியன் குகேஷ் உட்பட 3 பேருக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
[Thursday 2025-01-02 18:00]

தியான் சந்த் கேல் ரத்னா விருது பெற்ற நான்கு விளையாட்டு வீரர்களில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மானு பாக்கர் மற்றும் செஸ் உலக சாம்பியனான குகேஷ் ஆகியோருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது. 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அளவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான கேல் ரத்னா விருது (Khel Ratna Award) அறிவித்துள்ளது.



மு.க.ஸ்டாலின் அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
[Thursday 2025-01-02 18:00]

பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்ட பாட்டாளி மகளிர் சங்கத்தினர் கைது கண்டிக்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து அதிமுக நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.



சதுரங்க வேட்டை படப் பாணியில் ஓட்டுநரை ஏமாற்றிய இளைஞர்!
[Thursday 2025-01-02 07:00]

சதுரங்க வேட்டை திரைப்படம் பாணியில் இரிடியம் கலந்த கலசம் இருப்பதாக கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநரை ஏமாற்ற முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரிடம் டிசம்பர் 31-ந்தேதி இரவு அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் விளாங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த ராஜி என்கின்ற ராஜசேகர் (27) என்பவர், விக்னேஷை அணுகி தன்னிடம் தனக்கு சொந்தமான கோயிலில் இருடியம் சக்தி கொண்ட ரூ. 10லட்சம் மதிப்பிலான இரண்டு கோபுர கலசங்கள் இருப்பதாகவும், அதனை விற்பதற்கு தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.



“சனாதன தர்மம் சாதி அடிப்படையாகக் கொண்டது” - பினராயி விஜயன் விமர்சனம்!
[Thursday 2025-01-02 07:00]

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம் வர்கலா நகரில் சிவகிரி யாத்திரை தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “சனாதன தர்மத்தின் மிக முக்கியமான பகுதி ‘சதுர் வர்ணம்’ அடிப்படையிலான ‘வர்ணாஷ்ரம தர்மம்’ ஆகும். அது என்ன நிலைநாட்டியது? ஒருவரின் சாதி அடிப்படையிலான வேலைகள். ஆனால் ஸ்ரீ நாராயண குரு என்ன செய்தார்? ஒருவரின் மதத்தின் அடிப்படையில் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை மீறுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.



“அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுக்க முயற்சி” - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!
[Thursday 2025-01-02 07:00]

தமிழகத்தில் 500 அரசுப்பள்ளிகள் தனியாருக்கு தத்துக்கொடுக்கும் முயற்சி நடப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.



''2026ம் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும்''-அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!
[Wednesday 2025-01-01 16:00]

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், மாநில கழக துணைப் பொதுச் செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்து சொல்ல திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆகியோர் திண்டுக்கல் நகரில் உள்ள அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா