Untitled Document
January 8, 2025 [GMT]
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 சன்மானம்!
[Tuesday 2025-01-07 18:00]

பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு பிச்சை வாங்குவதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு பிச்சை வாங்குவதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

  

இந்நிலையில் அங்கு பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது குறித்து அரசுக்கு தகவல் அளிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பொதுமக்கள் தகவல்களை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு 200 பேர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் அளித்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா ரூ.1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அவர்களின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும்.

கடந்த 4 மாதங்களில் இந்தூரில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கும், 64 பேர் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்: நாராயணன் உறுதி!
[Wednesday 2025-01-08 18:00]

இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று புதிய தலைவர் நாராயணன் உறுதி அளித்துள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.



அம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு மகன்கள்: மூவருமே உயிரிழந்த சோகம்!
[Wednesday 2025-01-08 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் துமகுருவில் முகமது சாஹில் தனது தாய் மற்றும் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவர்களது வாகனம் கொரடகெரேவில் உள்ள ஓபலாபுரா கேட் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோதியுள்ளது.



திமுக - அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை: சீமான் பேச்சு!
[Wednesday 2025-01-08 18:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார். சீமான் கூறியதாவது.., "திமுக - அதிமுக பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். திமுக வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அதிமுக வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.



பாலத்தின் மேலிருந்து 31 நாய்களை தூக்கி வீசிய மர்ம நபர்கள்!
[Wednesday 2025-01-08 18:00]

பாலத்தின் மேல் இருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலுங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட 30 நாய்களில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



“50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க உத்தரவு” - தமிழக அரசு தகவல்!
[Wednesday 2025-01-08 06:00]

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை (HD - High Definition) செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பெற உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் பெற்று பயனடைந்திட கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + ஜி.எஸ்.டி என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது.



அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் கைது!
[Wednesday 2025-01-08 06:00]

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.



எச்.எம்.பி.வி. தொற்று: நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
[Wednesday 2025-01-08 06:00]

எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் என இருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.



ரூ.25,700 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்!
[Tuesday 2025-01-07 18:00]

இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை (சுமார் ரூ.25,700 கோடி) முதலீடு செய்ய உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா இந்தியா வந்துள்ள நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திகதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!
[Tuesday 2025-01-07 18:00]

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, அங்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து , இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



"அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் தரக்குறைவாக யாரையும் விமர்சிக்க கூடாது" - விஜய் உத்தரவு!
[Tuesday 2025-01-07 18:00]

தவெக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.



“வரலாற்றுச் சின்னங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல உறுதி ஏற்போம்” - ஆய்வாளர் மணிகண்டன் பேச்சு!
[Tuesday 2025-01-07 06:00]

புதுக்கோட்டை கலைஞர் அரசு கலைக் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத் துறை சார்பில் நடந்த வரலாற்றுப் பேரவை கூட்டம் கல்லூரி முதல்வர் ஞான ஜோதி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத் தலைவர் காயத்ரி தேவி செய்திருந்தார். சிறப்பு விருந்தினராகப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல் அறிவியல் துறை ஆய்வாளர் ஆ. மணிகண்டன் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் தொல்லியல் எச்சங்கள் என்ற தலைப்பில் பேசினார்.



விண்வெளியில் இஸ்ரோ படைத்த புதிய சாதனை!
[Tuesday 2025-01-07 06:00]

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் கடந்த 30ஆம் தேதி (30.12.2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது தளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது. அதன்படி ஸ்பேடெக்ஸ் - ஏ மற்றும் பி என 2 சிறிய செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் சுமந்து சென்றது.



எச்.எம்.பி.வி பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை விளக்கம்!
[Tuesday 2025-01-07 06:00]

கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.



"யாராக இருந்தாலும் சட்டமன்ற மரபை பின்பற்ற வேண்டும்" - ஆளுநரை விமர்சித்த விஜய்!
[Monday 2025-01-06 18:00]

தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று துவங்கியது. அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.



இந்தியாவின் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Monday 2025-01-06 18:00]

இந்தியாவில் அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்து வருகிறது. இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் ஆகிறார். அதனால்தான் அவர்கள் தேசத்தில் மிக உயர்ந்த ஊதியம் பெறுகிறார்கள். குடியரசுத் தலைவருக்கு, அவரது சம்பளத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் உள்ளதால் அவருக்கு ரூ.500 ஆயிரம் வழங்கப்படுகிறது.



365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பள்ளி!
[Monday 2025-01-06 18:00]

ஆண்டுக்கு 365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின கிராமம் ஒன்றில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பள்ளி இயங்கி வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 365 நாட்களும், ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் இயங்குகிறது.



சீனாவின் புதிய வைரஸ் இந்தியாவில் பரவியதாக உறுதி!
[Monday 2025-01-06 18:00]

சீனாவில் வேகமாக பரவும் HMPV, இந்தியாவில் முதன்முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. அதாவது, மனித மெட்டாப்நியூமோவைரஸ் என அழைக்கப்படும் எச்.எம்.பி.வி (HMPV) வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.



“சாலைகளைப் பிரியங்கா காந்தியின் கன்னம் போல் மாற்றுவேன்” - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேச்சு!
[Monday 2025-01-06 06:00]

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தொகுதியான கல்காஜி சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.பி ரமேஷ் பிதுரியை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்திருந்தது.



கருப்பு துப்பட்டா சர்ச்சை: காவல்துறை விளக்கம்!
[Monday 2025-01-06 06:00]

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மாணவிகள் பலரும் வந்திருந்த நிலையில் முதல்வர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.



அண்ணா பல்கலை. பாலியல் சம்பவம்: ஞானசேகரன் மீது பாய்ந்த அதிரடி சட்டம்!
[Monday 2025-01-06 06:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.


Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா