Untitled Document
January 10, 2025 [GMT]
சென்னை உயர் நீதிமன்ற கொலிஜியம் பார்ப்பனர்களை மட்டுமே நியமித்து சமூகநீதியை சவுக்கால் அடிக்கிறது! - நடிகர் சே. கருணாஸ்!
[Friday 2025-01-10 06:00]

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருந்த இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாக இருக்கும் இடங்களுக்கும்  அதற்குரிய நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, அதில் நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைக்க இருருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.  நீதியை நிலைநாட்ட  உருவாக்கப்பெற்ற நீதிமன்றம் சமூகநீதிக்கு எதிராக நிற்பது அநீதியின் உச்சம் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நிரப்பப்படாமல் இருந்த இடங்களுக்கும், அடுத்தடுத்து காலியாக இருக்கும் இடங்களுக்கும் அதற்குரிய நீதிபதிகளை நியமனம் செய்யும் போது, அதில் நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய சென்னை உயர்நீதிமன்றக் கொலிஜியம் பரிந்துரைக்க இருருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பெற்ற நீதிமன்றம் சமூகநீதிக்கு எதிராக நிற்பது அநீதியின் உச்சம் இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

  

ஏற்கனெவே 2018 இல் சட்டத்துறை சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 684 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், 21 பேர் பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் (3%), 14 பேர் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் (2%) மற்றும் 82 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் (11.9%) என்பதும், மீதமுள்ள 567 பேரில் (82.53%) முன்னேறிய வகுப்பைப் சார்ந்தவர்கள் என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் வெளிவந்த நிலையில், தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்திற்கு புதியதாக நீதிபதிகள் நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியத்திற்கு பரிந்துரைக்க உள்ள நீதிபதிகளில், நான்கு பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும், நடைமுறையில் பன்னிரெண்டு பிராமண சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் இருப்பதாகவும் தெரியவரும் நிலையில், இந்த கொலிஜியம் ஒவ்வொரு முறையும் சமூக நீதியை படுகுழிக்குள் தள்ளிவிட நினைக்கிறது.

தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் இல்லாத பல சமுதாயங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, சிறுபான்மையினர் சமுதாய மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லா நிலையை மேற்கண்ட கொலிஜியம் தொடர்ந்து உருவாக்க முனைகிறது. அது மட்டுமல்ல முக்குலத்தோர் சமுதாய தொகுப்பில் உள்ளடங்கிய தேவரினத்தில் (கள்ளர் மறவர் அகமுடையார்) நீதிபதிகளாக வருவதற்குரிய வாய்ப்பிருந்தாலும் அதை திட்டமிட்டே தட்டிக் கழிக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரப்படி, உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் அளிக்கப்படும் தீர்ப்புகளுக்குச் சட்ட வலிமை தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து சாதிய சிந்தனைப்போக்கு மங்காது உள்ள சமூகத்தில், அவற்றினுள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புறக்கணிக்கப் பட்ட சாதிகளுக்கு சமவாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதால்தான் இட ஒதுக்கீடு நிலை உருவானது. அதன் வழியாக சமூகநீதியை உறுதி செய்ய, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும் முறை சட்டத்தின் மூலம் செயலாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்தச் சட்டத்துறையே இடஒதுக்கீட்டை ஒதுக்கி வைத்து சமூக நீதியை காலால் எத்திவிடுவது என்பதுதான் படுபாதக செயலாக உள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் இந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்பற்றி முன்பே பல வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, சமூகநீதி பாதுகாக்கப்படவேண்டும் என்று தீர்ப்பும் உள்ளது. அவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்தகொள்ள கொலிஜியம் தவறிவிட்டதா?

நீதிபதி நியமனங்களில் சமூகநீதி கடைப்பிடிக்கப்பட வேண்டியது மிக முக்கியம் என்பதை மேற்கண்ட பரிந்துரை குழு உணரவேண்டும்! அது மட்டுமின்றி சமூகநீதிக்குள் பாலியல் நீதியையும், சமூகத்தில் மிக முக்கியத் துறையான நீதித் துறை நியமனங்களில், கடைப்பிடிப்பது மிகமிக முக்கியம் என்பதையும் உணரவேண்டும்.!

எனவே உயர் சாதியினரால் நிரப்பப்பட்டதாக உச்ச, உயர்நீதிமன்றங்கள் அமையக்கூடாது! அது நீதிக்கு புறம்பானது. அனைத்து சாதி மக்களுக்கும் எதிரானது.

உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து பிரிவினருக்கும் தகுந்த விகிதாச்சார அடிப்படையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு சமூக நீதியை உறுதிப்படுத்திடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

  
   Bookmark and Share Seithy.com



தமிழக மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
[Friday 2025-01-10 06:00]

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்களை இலங்கைக் கடற்படையினர் (08.01.2025) கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள 10 மீனவர்களையும், இலங்கை வசம் ஏற்கெனவே உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (09.01.2025) கடிதம் எழுதியுள்ளார்.



அண்ணா பல்கலை. விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!
[Friday 2025-01-10 06:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரை பேரில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.



அல்லு அர்ஜுன் விவகாரத்தை போல திருப்பதி கூட்ட நெரிசலிலும்.., முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!
[Thursday 2025-01-09 18:00]

புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்தது போல திருப்பதி கூட்ட நெரிசலில் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியுள்ளார். திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



பெரியார் விவகாரத்தில் சீமானுக்கு ஆதரவு குரல் கொடுத்த அண்ணாமலை!
[Thursday 2025-01-09 18:00]

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விவகாரத்திற்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். தந்தை ஈ.வெ.ரா பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீமானை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது திமுக சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திடீரென முடி உதிர்ந்து வழுக்கை தலையாவதால் கிராம மக்கள் பீதி!
[Thursday 2025-01-09 18:00]

இந்திய கிராமம் ஒன்றில் உள்ள மக்களுக்கு திடீரென முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கையாவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆண், பெண் என இருவரும் கடந்த சில வாரங்களாக முடி உதிர்தல் பிரச்சனைக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், பலருக்கு வழுக்கை தலை ஆகும் அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.



இலங்கை இந்திய கடற்பரப்பு: அத்துமீறி மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது!
[Thursday 2025-01-09 18:00]

இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு நடவடிக்கையில் ஒரு இந்திய மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டதுடன், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று (08) இரவு நேரத்தில் யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகில் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



இஸ்ரோவிற்கு புதிய தலைவர் நியமனம்!
[Thursday 2025-01-09 06:00]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்து வருபவர் சோம்நாத். இவரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். திருவனந்தபுரத்தின் வலியமலாவில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மையத்தின் (L.P.S.C.) எல்.பி.எஸ்.சி.யின் இயக்குநராக தற்போது பணியாற்றி வருகிறார். வரும் 14ஆம் தேதி இஸ்ரோவின் 11வது தலைவராக நாராயணன் பொறுப்பேற்க உள்ளார்.



திருப்பதியில் கூட்ட நெரிசல்: சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேர் பலி?
[Thursday 2025-01-09 06:00]

திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஏழுமலையானைத் தரிசிக்கத் தினந்தோறும் திருமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் திருப்பதி திருமலையில் மக்கள் கூட்டத்தால் ஏற்படும் நெரிசல் காரணமாக, ஏழுமலையானைத் தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இத்தகைய சூழலில் தான் திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு (10.01.2024) சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய இலவச தரிசன டோக்கன் வாங்க 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.



குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து: பரம்பூர் விவசாயிக்கு அழைப்பு!
[Thursday 2025-01-09 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அருகில் உள்ளது பரம்பூர் கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டு முதல் 40 பெண் விவசாயிகள் உள்பட 281 விவசாயிகள் நீர்ப்பாசன சங்கம் அமைத்து மழைநீரை பரம்பூர் பெரிய கண்மாயில் சேமித்து சிக்கனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் சுமார் 268 ஏக்கர் விவசாயம் செய்யப்படுகிறது.



இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன்: நாராயணன் உறுதி!
[Wednesday 2025-01-08 18:00]

இஸ்ரோவை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்வேன் என்று புதிய தலைவர் நாராயணன் உறுதி அளித்துள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.



அம்மாவுடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த இரு மகன்கள்: மூவருமே உயிரிழந்த சோகம்!
[Wednesday 2025-01-08 18:00]

இந்திய மாநிலம் கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் தாய், மகன்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் துமகுருவில் முகமது சாஹில் தனது தாய் மற்றும் சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அவர்களது வாகனம் கொரடகெரேவில் உள்ள ஓபலாபுரா கேட் அருகே சென்றபோது டிராக்டர் மீது மோதியுள்ளது.



திமுக - அதிமுக பிரச்சனை ஒரு தெரு சண்டை: சீமான் பேச்சு!
[Wednesday 2025-01-08 18:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் வள்ளலார் சத்ய ஞான சபையில் வழிபட்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசியுள்ளார். சீமான் கூறியதாவது.., "திமுக - அதிமுக பிரச்சனை தெரு சண்டை. 60 ஆண்டுகளாக இதை தான் செய்து வருகிறார்கள். திமுக வினர் பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு விவகாரம் என்கிறார்கள். அதிமுக வினர் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் என்று மாறி, மாறி கூறி வருகிறார்கள்.



பாலத்தின் மேலிருந்து 31 நாய்களை தூக்கி வீசிய மர்ம நபர்கள்!
[Wednesday 2025-01-08 18:00]

பாலத்தின் மேல் இருந்து 31 நாய்களை தூக்கி வீசியதில் 20 நாய்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தெலுங்கானா, சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட 30 நாய்களில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



“50 லட்சம் செட்டாப் பாக்ஸ்கள் வழங்க உத்தரவு” - தமிழக அரசு தகவல்!
[Wednesday 2025-01-08 06:00]

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 50 இலட்சம் உயர் வரையறை (HD - High Definition) செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. எனவே குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகளை பெற உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் பெற்று பயனடைந்திட கேபிள் ஆபரேட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ரூபாய் 140 + ஜி.எஸ்.டி என்கிற குறைந்த சந்தா கட்டணத்தில் கேபிள் டிவி சேவைகளை பொது மக்களுக்கு சிறந்த முறையில் வழங்கி வருகிறது.



அண்ணாநகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: அதிமுக நிர்வாகி, பெண் காவல் ஆய்வாளர் கைது!
[Wednesday 2025-01-08 06:00]

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் (30.08.2024) பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில், “தனது மகள் (10 வயது சிறுமி) பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதே சமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.



எச்.எம்.பி.வி. தொற்று: நீலகிரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
[Wednesday 2025-01-08 06:00]

எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் சென்னையில் ஒருவருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் என இருவருக்கு இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.



ரூ.25,700 கோடியை இந்தியாவில் முதலீடு செய்யும் மைக்ரோசாப்ட்!
[Tuesday 2025-01-07 18:00]

இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவில் 3 பில்லியன் டொலர்களை (சுமார் ரூ.25,700 கோடி) முதலீடு செய்ய உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சத்யா நாதெல்லா இந்தியா வந்துள்ள நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.



பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 சன்மானம்!
[Tuesday 2025-01-07 18:00]

பிச்சைக்காரர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் சன்மானமாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றுவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு பிச்சை வாங்குவதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.



ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான திகதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!
[Tuesday 2025-01-07 18:00]

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக பதவி வகித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து, அங்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.வாக இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை அடுத்து , இந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



"அரசியல் பேசுகிறோம் என்ற எண்ணத்தில் தரக்குறைவாக யாரையும் விமர்சிக்க கூடாது" - விஜய் உத்தரவு!
[Tuesday 2025-01-07 18:00]

தவெக தலைவர் விஜய் கட்சி வளர்ச்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் அரசியல் பணிகள் பற்றி கட்சி தலைவர் விஜய் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.


 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா