Untitled Document
January 18, 2025 [GMT]
பயிற்சியின்போது படுகாயமடைந்ததால் விரக்தி: விபரீத முடிவெடுத்த இளம் கபடி வீரர்!
[Thursday 2025-01-16 18:00]

தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சேலத்தில் உள்ள கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கபடி பயிற்சியின்போது சந்துருவிற்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய சந்துரு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

தமிழக மாவட்டம் திருப்பூரில் இளைஞர் ஒருவர், கபடி விளையாட்டில் ஏற்பட்ட காயம் குணமாகாததால் விரக்தியடைந்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பூரின் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சேலத்தில் உள்ள கபடி பயிற்சி மையத்தில் சேர்ந்திருக்கிறார். கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு கபடி பயிற்சியின்போது சந்துருவிற்கு மார்பில் படுகாயம் ஏற்பட்டது. அதனை சரி செய்ய சந்துரு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.

  

ஆனாலும் காயம் சரியாகவில்லை. இதன் காரணமாக அவர் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சந்துரு திடீரென தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சந்துருவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



ரஷ்யாவுக்காக போரிட்டு உக்ரைனில் கொல்லப்பட்ட இந்தியர்கள்!
[Saturday 2025-01-18 06:00]

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் போரில் களமிறங்கிய 126 இந்தியர்களில் தற்போது 12 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மட்டுமின்றி, மேலும் 16 பேர்கள் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது.



சிறுக சிறுக காணாமல் போன நகைகள்: வீட்டில் வேலை செய்த பெண் துணிகரம்!
[Saturday 2025-01-18 06:00]

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத் (வயது 57). இவர் தனது வீட்டில் வைத்திருந்த சுமார் 2,50,000 லட்சம் மதிப்புள்ள 67 கிராம் தங்க நகைகளைக் கடந்த ஓராண்டாக சிறுக சிறுக காணாமல் போயுள்ளது என அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.



இன்ஸ்டா பிரபலம் சாலை விபத்தில் உயிரிழப்பு!
[Saturday 2025-01-18 06:00]

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் ராகுல் (வயது 27). நடன இயக்குநரான இவர் ராகுல் டிக்கி (Rahul Tikki) என்ற யூட்யூப் சேனலை நடத்தி வந்தார். அதோடு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வலம் வந்துள்ளார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதே சமயம், இவருக்கும் ஈரோடு கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணியின் மகள் தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.



ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு!
[Friday 2025-01-17 06:00]

தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதகளுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.



கடலில் குளித்த 2 பேர் உயிரிழப்பு: காணும் பொங்கல் தினத்தில் நேர்ந்த சோகம்!
[Friday 2025-01-17 06:00]

சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவரும், ஜெகன் என்பவரும் சிதம்பரம் அருகே உள்ள கொடியம்பாளையம் கடலில் காணும் பொங்கலையொட்டி நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அலையில் சிக்கி திடீரென காணாமல் போனார்கள். இதனை அறிந்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்களை தேடினர். ஆனால் இவர்கள் கிடைக்கவில்லை. மோகன கிருஷ்ணன் உடல் 2 மணி நேரத்திற்கு பிறகு அதே பகுதியில் கரை ஒதுங்கியது. இதில் ஜெகன் உடல் கிடைக்கவில்லை.



பிரசவமான குழந்தையின் உடலைக் கட்டை பையில் மறைத்து நாடகமாடிய பெண்!
[Friday 2025-01-17 06:00]

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்தவர் ஜோதி(31). இவரது கணவர் தமிழ்ச்செல்வன். ஜோதிக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி சேலத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. நான்காவதாக கர்ப்பிணியாக இருந்த ஜோதி, பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆற்காட்டில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.



நிறைவு பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதலிடத்தைப் பிடித்த வீரர் யார்?
[Thursday 2025-01-16 18:00]

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டை தொடர்ந்து மூன்றாம் நாளான காணும் பொங்கல் தினமான இன்று (16-01-25) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 10 சுற்றுகள் நடைபெறுவதாக இந்த போட்டி, 9வது சுற்றுறோடு முடிவடைந்தது.



8ஆவது ஊதியக்குழு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
[Thursday 2025-01-16 18:00]

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மாற்றியமைக்க 8-வது ஊதியக் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை இன்று (16-01-25) ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 8-வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.



விண்வெளியில் இந்தியா புதிய சாதனை!
[Thursday 2025-01-16 18:00]

விண்கல இணைப்பு சோதனையில் வெற்றி பெற்றதன் மூலம் விண்வெளி துறையில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது விண்வெளி ஆராய்ச்சி பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதாவது SpaDeX என்று அழைக்கப்படும் விண்வெளி இணைப்பு சோதனையை (Space Docking Experiment) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.



பெண் குழந்தைகளின் கொப்பிக் கொட்டல் திருவிழா!
[Thursday 2025-01-16 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில், ஊரைக் காக்க பெண் குழந்தைகள், பெண்கள் பங்கேற்று நடத்தும் வித்தியாசமான கொப்பித் திருவிழா காலங்காலமாக நடந்து வருகிறது. செரியலூர் கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்த கொப்பியம்மாள் என்ற பெண் குழந்தை தனது பெரியப்பா வீட்டிற்கு காட்டுப் வழியாக சென்று காணாமல் போய் பல நாட்களுக்கு பிறகு கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பழமையான பாலை மரத்தில் இருந்து அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விழுந்ததாக கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது.



“இனியேனும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும்” - இபிஎஸ்!
[Thursday 2025-01-16 06:00]

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பயின்று வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அண்மையில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து புதுச்சேரியில் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக வழக்கத்தில் இதேபோல் வடமாநில மாணவி ஒருவர் தன் சக நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது மூன்று பேரால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.



“அந்த வகையில் இது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி ஆகும்” - அன்புமணி ராமதாஸ்!
[Thursday 2025-01-16 06:00]

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்குதடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது, கிழக்குக்கடற்கரையை பறவைகள் வாழிடமாக அறிவிக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோவளத்தை மையமாக வைத்து நடத்தப்பட்டு வந்த தனியார் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தடை விதித்திருக்கிறார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறேன்.



திருவள்ளுவர் நாளில் சென்னையில் இறைச்சி கடைகள் மூடல்: சீமான் கண்டனம்!
[Wednesday 2025-01-15 17:00]

திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கக்கூடிய இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்கின்ற உத்தரவு கண்டிக்கத்தக்கது என்று சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "வள்ளுவனின் பாக்களைப் படித்துத் தெளிந்த தமிழ்ச் சமூகம் சூழலுக்கு ஏற்ப அவற்றைத் தங்கள் வாழ்வியலில் பின்பற்றி வள்ளுவத்தைக் காலந்தோறும் போற்றி வருகிறது.



வளர்ப்பு நாயின் பிறந்த நாளை ரூ.5 லட்சம் செலவில் பிரம்மாண்டமாக கொண்டாடிய பெண்!
[Wednesday 2025-01-15 17:00]

பெண் ஒருவர் வளர்ப்பு நாயின் பிறந்த நாளுக்கு ரூ.5 லட்சம் செலவு செய்து பிரம்மாண்டமாக விழா நடத்தியுள்ளார். இந்திய மாநிலமான ஜார்கண்ட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் செல்லப்பிராணியின் மீதான அன்பின் காரணமாக, தனது நாயின் பிறந்தநாளை ஆடம்பரத்துடன் கொண்டாடினார். இந்த நிகழ்விற்காக ரூ.5 லட்சம் செலவு செய்துள்ளார்.



ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களை நிறைவேற்ற இந்தியா திட்டம்!
[Wednesday 2025-01-15 17:00]

ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான 4 மெகா பாதுகாப்பு ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 31 அன்று நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், மொத்தமாக ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான நான்கு முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்ய உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் போர் திறன்களை மேம்படுத்துவதற்கும், இந்திய ஆயுதங்களின் கையிருப்பை ஊக்குவிப்பதற்குமான நீண்ட கால உத்தியின் ஒரு பகுதியாகும்.



2025 இல் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Wednesday 2025-01-15 17:00]

இந்திய ராணுவ அதிகாரி பதவி என்பது இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்கதும், நல்ல ஊதியம் பெறுவதும் ஆகும். இந்திய ராணுவம் உலகின் மிகப்பெரிய ஒன்றாகும், 10 லட்சம் வீரர்களையும் 900,000 வீரர்களையும் ரிசர்வ் நிலையில் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகள், பின்னணிகள் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கின்றனர்.



'1100 காளைகள், 900 காளையர்கள்' - இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு!
[Wednesday 2025-01-15 07:00]

பொங்கல் பண்டிகையையொட்டி, ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த போட்டியை காண பல பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வருகை தருவார்கள். அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர்.



பா.ஜ.க தலைவர் மீது பாய்ந்த கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு!
[Wednesday 2025-01-15 07:00]

டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஹரியானா பா.ஜ.க தலைவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் இருந்து நண்பருடன் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹோட்டலில் இருந்த போது, ஹரியானா பா.ஜ.க தலைவர் மோகன் லால் படோலி மற்றும் பாடகர் ராக்கி மிட்டல் ஆகியோர் தன்னை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்ததாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.



15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை: உளவியல் நிபுணரின் கொடூரச் செயல்!
[Wednesday 2025-01-15 07:00]

கடந்த 15 ஆண்டுகளில் 50 சிறுமிகளை, உளவியல் நிபுணர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர், உளவியல் நிபுணர் ராஜேஷ் மீது பாலியல் புகார் ஒன்றை ஹட்கேஷ்வர் காவல் நிலையத்தில் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ராஜேஷ் பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.



ரஷ்ய உக்ரைன் போரில் கேரளாவைச் சேர்ந்தவர் உயிரிழப்பு!
[Tuesday 2025-01-14 18:00]

ரஷ்ய உக்ரைன் போரில், இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்தவரான பினில் என்பவர் ரஷ்யாவில் எலக்ட்ரிஷியன் வேலைக்காக ரஷ்யா சென்ற நிலையில், அங்கு ஏற்கனவே பணி செய்துகொண்டிருந்த தனது சகோதரரான ஜெயினை (27) சந்தித்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா