Untitled Document
April 6, 2025 [GMT]
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!
[Saturday 2025-04-05 16:00]

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்ற வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35°C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு: பிரதமர் பங்கேற்பு!
[Sunday 2025-04-06 16:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



மோடி வருகையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்!
[Sunday 2025-04-06 16:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் கைது!
[Sunday 2025-04-06 16:00]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை சரிவர வழங்கப்படவில்லை.



உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
[Sunday 2025-04-06 16:00]

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: 11 பேர் கைது!
[Sunday 2025-04-06 07:00]

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17வது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (05.04.2025) மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது.



இன்று தமிழகம் வரும் பிரதமர்!
[Sunday 2025-04-06 07:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



மது போதையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி!
[Sunday 2025-04-06 07:00]

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரகக்கணக்கானோர் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளிகளாக குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். அன்றாடம் உழைப்பில் கிடைக்கும் வருவாயை அன்றே செலவு செய்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் கல்வியின் அருமையும் அறியாததால் தங்கள் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களுடனே வேலை செய்யும் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இந்த மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாமல் உள்ளனர். இதிலும் கொஞ்சம் விபரமான ஆட்கள் இது போன்ற உழைக்கும் குடும்பங்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வரும் அவலநிலையும் உள்ளது.



தொடரும் உயிரிழப்பு: மாணவர்களை காக்க அரசு என்ன செய்யப் போகிறது?
[Saturday 2025-04-05 16:00]

நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.



"அவனை விட்டுவிடாதீர்கள்" - சுவரில் எழுதிவைத்துவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்!
[Saturday 2025-04-05 16:00]

மேற்கு டெல்லியில், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காததுடன், தன்னை துன்புறுத்தியும் வந்த ஒருவரை விடவேண்டாம் என சுவரில் எழுதிவைத்துவிட்டு, தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு இளம்பெண். மேற்கு டெல்லியில் உள்ள உத்தம் நகர் என்னுமிடத்தில், தன் தாய் மற்றும் சகோதரிகளுடன் வாழ்ந்துவந்துள்ளார் 27 வயது இளம்பெண் ஒருவர்.



மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்: திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம்!
[Saturday 2025-04-05 16:00]

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே. இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகனும் 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.



டாஸ்மாக் வாசலில் இளைஞர் படுகொலை!
[Saturday 2025-04-05 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மழையூர் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர் மகன் முருகேசன் (20). இவர் மரம் வெட்டும் தொழிலாளி ஆவார். இவர் (04.04.2025) இரவு வேலை முடிந்து அதே ஊரில் தனது வீட்டில் இருந்து 200 மீ தூரத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று வெளியே வரும் போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மர்ம கும்பல் முருகேசனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு இனி உயிர் பிழைக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த முருகேசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று பார்த்த போது முருகேசன் உயிர் பிரிந்திருந்தது. அங்கு வந்த போலிசார்உடனே முருகேசன் சடலத்தை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



திடீர் மழை: 1500 ஏக்கருக்கு மேல் பயிர்கள் சேதம்!
[Saturday 2025-04-05 06:00]

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர், முகையூர், சிறுகாலூர், கொடியாளம், வடம்பூர், மணலூர் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் உளுந்து, பச்சை பயிரை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் தற்போது உளுந்து, பச்சை பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.



‘இரட்டை இலை கிடைக்குமா?’ - எடப்பாடி பழனிசாமி மீண்டும் புதிய வழக்கு!
[Saturday 2025-04-05 06:00]

சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தடையானையை நீக்கி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது அந்த உத்தரவு தேர்தல் ஆணையத்தின் முன் உள்ளது. சமீபத்தில் தேர்தல் ஆணையத்தில், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த புகழேந்தி தடையானை நீக்கிய உயர்நீதிமன்ற உத்தரவினை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து விரிவான விசாரணையைத் துவங்க வேண்டும் என மனு அளித்திருந்தார்.



"பள்ளிவாசல் அலங்கார விளக்கு மறைப்பு" - காரணம் என்ன?
[Friday 2025-04-04 06:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.



காலையில் விசாரணைக்கு காவல் நிலையம் சென்றவர் மாலையில் விஷம் குடித்து உயிரிழப்பு!
[Friday 2025-04-04 06:00]

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகில் உள்ளது பட்டத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் மூதாட்டி உள்படச் சிலர் மது விற்பனை செய்வதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து (02.04.2025) மதுவிலக்கு போலீசார் பட்டத்திக்காடு கிராமத்திற்கு மாற்று உடையில் சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட மூதாட்டி வீட்டில் 4 மதுப்பாட்டில்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த சிங்காரம் மகன் மகேந்திரன் (வயது 40) உள்ளிட்ட சிலர் மாற்று உடையில் இருந்த போலீசாரிடம், “நீங்கள் யார்?. போலீஸ் என்றால் சீருடை இல்லையே எப்படி நம்புவது உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்” என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.



மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்!
[Friday 2025-04-04 06:00]

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ரயில்வே ஊழியர் ஒருவர், மனைவி மற்றும் அவரது குடும்பத்தால் சித்ரவதை அனுபவித்ததை வீடியோ எடுத்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலம் பன்னாவைச் சேர்ந்தவர் லோகேஷ் (30). இவருக்கும் ஹர்ஷிதா (27) என்ற பெண்ணுக்கும் 2023யில் திருமணம் நடந்தது. சில மாதங்கள் கழித்து மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் லோகேஷ் கொடுமைகளை அனுபவிக்க ஆரம்பித்தார்.



ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் உயிரிழந்த சிறுவன்!
[Thursday 2025-04-03 19:00]

ஓடும் ரயிலில் இருந்து பயணி வீசிய தண்ணீர் போத்தலால் 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான மத்திய பிரதேசம் ராஜ்கோட்டில் வசிக்கும் 14 வயது சிறுவன் பாதல். இந்த சிறுவன் கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 2.45 மணியளவில் ராஜ்கோட் பகுதி தண்டவாளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்திருந்தான்.



விஜய் முதலமைச்சராக வேண்டும்" - வேளாங்கண்ணியில் மண்டியிட்டு வழிபாடு செய்த தொண்டர்!
[Thursday 2025-04-03 19:00]

விஜய் முதலமைச்சராக வேண்டும் என வேளாங்கண்ணியில் தவெக தொண்டர் முழங்காலால் மண்டியிட்டு வழிபாடு செய்துள்ளார். வருகிற 2026ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என கூறினார்.



தடை செய்யப்பட்ட அந்தமான் தீவுப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு இளைஞர்!
[Thursday 2025-04-03 19:00]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் தடைசெய்யப்பட்ட பூர்வகுடி பகுதியான வடக்கு சென்டினல் தீவிற்குள் நுழைந்ததாக அமெரிக்க நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த அனுமதியும் இல்லாமல் வடக்கு சென்டினல் தீவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டு 24 வயதேயான Mykhailo Viktorovych Polyakov என்பவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?
[Thursday 2025-04-03 19:00]

இந்திய முழுவதும் பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவட்ட தலைவர்கள் தேர்தல் முடிவுற்று மாநில தலைவர்கள் தேர்தல் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து தேசிய தலைவர் தேர்தல் நடத்தப்படும். இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுகவிற்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.


Latika-Gold-House-2025
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா