Untitled Document
April 8, 2025 [GMT]
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்: 11 பேர் கைது!
[Sunday 2025-04-06 07:00]

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17வது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (05.04.2025) மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது.

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 17வது போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (05.04.2025) மாலை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பு 183 ரன்களை குவித்தது.

  

184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் சென்னை அணி களம் இறங்கியது. இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றுள்ளது. அதாவது கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி அணி சென்னையை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்த நிலையில், இது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 34 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

  
   Bookmark and Share Seithy.com



சைவ பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு அசைவ பிரியாணி - ஊழியர் கைது!
[Tuesday 2025-04-08 18:00]

உத்தரபிரதேச மாநிலம், நொய்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், Swiggy தளத்தின் மூலம் சைவ பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட பிரியாணியை சிறிது சாப்பிட அவர், தனக்கு வழங்கப்பட்ட பிரியாணி அசைவ பிரியாணி என அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது தொடர்பாக அழுதுகொண்டே சமூகவலைத்தளத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.



இந்திய கிராமத்தில் வாழும் காதலரை சந்திக்க வந்த அமெரிக்க காதலி!
[Tuesday 2025-04-08 18:00]

இந்தியாவிலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் தன் காதலரை சந்திப்பதற்காக அமெரிக்காவிலிருந்து ஒரு பெண் வந்துள்ள நிலையில், இணையத்தில் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்கரான ஜாக்லின் (Jaclyn Forero) ஒரு புகைப்படக்கலைஞர். இன்ஸ்டாகிராம் வாயிலாக இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்தில் வாழும் சந்தனை சந்தித்துள்ளார் ஜாக்லின்.



ரயில்வே வேலைக்காக கணவரை கொன்ற மனைவி!
[Tuesday 2025-04-08 18:00]

உத்தரப்பிரதேசத்தில் பெண்ணொருவர் தன் காதலனுடன் இணைந்து கணவரை துண்டு துண்டாக வெட்டி சிமெண்டுக்குள் மறைத்த விடயத்தின் சூடு ஆறுவதற்குள், மீண்டும் அதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே உத்தரப்பிரதேசத்திலுள்ள Bijnor என்னுமிடத்தில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில்வேயில் வேலை பார்த்துவரும் தீபக் குமார் (29) என்பவருக்கும் ஷிவானி என்ற பெண்ணுக்கும் ஒன்றரையாண்டுகளுக்கு முன் திருமணம் ஆகியுள்ளது.



சிலிண்டர் விலை உயர்வு: கண்டனம் தெரிவித்த தவெக தலைவர் விஜய்!
[Tuesday 2025-04-08 18:00]

சமையல் எரிவாயு விலை உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார். இது குறித்து தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும்.



சடலமாக மீட்கப்பட்ட 6 மாத குழந்தை: நாடகமாடிய தாய் கைது!
[Tuesday 2025-04-08 06:00]

தமிழக மாவட்டம் புதுக்கோட்டையில் பெண்ணொருவர், தனது 6 மாத குழந்தையை கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (29). இவருக்கும் லாவண்யா என்ற பெண்ணுக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. சமீபத்தில் லாவண்யா கணவருடன் கோபித்துக் கொண்டு, புலியூரில் உள்ள தந்தை வீட்டிற்கு 6 மாத குழந்தை ஆதிரனுடன் சென்றுள்ளார்.



டெல்லிக்கு விரைந்தார் நயினார் நாகேந்திரன்!
[Tuesday 2025-04-08 06:00]

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தது பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தான் காரணம் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



“நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது” - முதல்வர் ஸ்டாலின் விளாசல்!
[Tuesday 2025-04-08 06:00]

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சில்லறை விற்பனை விலையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனைச் சமாளிக்கும் விதமாக மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை அதிகரித்து உத்தரவிட்டது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயை உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை விலையில் எவ்வித மாற்றமும் இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு விலையை ரூ. 50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.



நாளை முதல் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு!
[Monday 2025-04-07 18:00]

வீடு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிப்பதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி அறிவித்துள்ளார். நாடு முழுவதும், நாளை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் தற்போது ரூ.803க்கு விற்பனையாகி வரும் நிலையில், இந்த விலை உயர்வு காரணமாக ரூ.853 ஆக உயர்ந்துள்ளது.



வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!
[Monday 2025-04-07 18:00]

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஏப்12ஆம் திகதி வரை மழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவனால் மனைவி மரணம்!
[Monday 2025-04-07 18:00]

5-வது குழந்தையை பெற்றெடுக்கும் போது மனைவிக்கு வீட்டிலேயே கணவர் பிரசவம் பார்த்துள்ளார். இந்திய மாநிலமான கேரளா, ஆலப்புழா பகுதியை சேர்ந்த தம்பதியினர் சிராஜூதீன் மற்றும் அஸ்மா (35). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில் அஸ்மா மீண்டும் கர்ப்பமானார். இதில், முதல் மற்றும் இரண்டாவது குழந்தை மருத்துவமனையில் பிறந்துள்ளது. மூன்றாவது மற்றும் நான்காவது குழந்தை வீட்டிலேயே பிறந்துள்ளது.



மகா கும்பமேளா புனித நீர் 1000 போத்தல்களில் ஜேர்மனிக்கு அனுப்பி வைப்பு!
[Monday 2025-04-07 18:00]

மகா கும்பமேளாவின் புனித நீர் வெளிநாட்டிற்கு தேவைப்படுவதை எடுத்துக்காட்டும் வகையில் 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் ஜேர்மனிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியில் உள்ள பக்தர்களுக்காக 1000 போத்தல்களில் மகா கும்பமேளா புனித நீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.



“வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை” - ராமதாஸ் கண்டனம்!
[Monday 2025-04-07 06:00]

“தருமபுரி காட்டில் வனத்துறையினரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை: சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டம் கொங்காரப்பட்டி கிராமத்திலிருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் என்ற இளைஞரை வனத்துறையினர் கொடுமைப்படுத்தி படுகொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். மிகக் கொடூரமான முறையில் செந்தில் கொலை செய்யப்பட்டதற்கு சந்தர்ப்ப சாட்சியங்கள் ஏராளமான இருக்கும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக வனத்துறை பொய்க்கதை புனைவதும், அதற்கு காவல்துறை துணைபோவதும் கண்டிக்கத்தக்கது.



மூட நம்பிக்கையால் பறிபோன பெண்ணின் உயிர்!
[Monday 2025-04-07 06:00]

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் லால் கோலா குவான் பகுதியைச் சேர்ந்தவர்கள் முகேஷ் சோனி - பிரியான்ஷா சோனி(36) தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பிரியான்ஷா சோனிக்கு அதீத இறைவழிபாடும், பக்தியும் இருந்துள்ளது. அதன் காரணமாக இந்து பண்டிகையான நவராத்திரி விழாவை இந்த வருடம் சிறப்பு பூஜை, விரதம் என்று சிறப்பாக கொண்டாட மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.



சிறுவனை பாலியல் சித்திரவதைக்கு ஆளாக்கி கொடூரமாக கொன்ற இளைஞர்!
[Monday 2025-04-07 06:00]

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்துள்ள முத்துலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி ரேவதி. இவர்களது மகன் நகுலன்(6). 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30 தேதி மாலை வீட்டிலிருந்து வெளியே விளையாடச் சென்ற நகுலன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி கிடைக்காததால், எட்டயபுரம் காவல் நிலையத்தில் அடுத்த நாள் புகார் அளித்தனர்.



பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு: பிரதமர் பங்கேற்பு!
[Sunday 2025-04-06 16:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.



மோடி வருகையை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்!
[Sunday 2025-04-06 16:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



முட்டை கேட்ட பள்ளி மாணவனை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர்கள் கைது!
[Sunday 2025-04-06 16:00]

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளாமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று மதிய உணவின்போது மாணவர்களுக்கு முட்டை சரிவர வழங்கப்படவில்லை.



உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!
[Sunday 2025-04-06 16:00]

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் கூறுகையில்.., வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இன்று தமிழகம் வரும் பிரதமர்!
[Sunday 2025-04-06 07:00]

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் இன்று (06.04.2025) திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை, ஏப்ரல் 6ஆம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளுடன் சேர்ந்திருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். புதிய பாம்பன் ரயில் பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது. ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைக்கப்படும் அல்லது அடிக்கல் நாட்டப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.



மது போதையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த கூலித் தொழிலாளி!
[Sunday 2025-04-06 07:00]

தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்த பல ஆயிரகக்கணக்கானோர் கரும்பு வெட்டும் கூலித் தொழிலாளிகளாக குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். அன்றாடம் உழைப்பில் கிடைக்கும் வருவாயை அன்றே செலவு செய்துவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் கல்வியின் அருமையும் அறியாததால் தங்கள் குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்பாமல் தங்களுடனே வேலை செய்யும் தோட்டங்களுக்கு அழைத்துச் செல்கின்றனர். இதனால் இந்த மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு எழுதப் படிக்கவே தெரியாமல் உள்ளனர். இதிலும் கொஞ்சம் விபரமான ஆட்கள் இது போன்ற உழைக்கும் குடும்பங்களை கொத்தடிமைகளாக பயன்படுத்தி வரும் அவலநிலையும் உள்ளது.


Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Latika-Gold-House-2025
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா